search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ரித்திகா"

    • சில தினங்களுக்கு முன்பு இஸ்ரேல் ரஃபா நகர் மீது வான்தாக்குதல் நடத்தியது.
    • இதில் 35 பேர் பரிதாபமாக கொல்லப்பட்டனர்.

    ஹமாஸ் அமைப்புக்கு எதிராக போர் பிரகடனம் செய்த இஸ்ரேல் காசா மீது தாக்குதல் நடத்தி வருகிறது. சில தினங்களுக்கு முன்பு இஸ்ரேல் ரஃபா நகர் மீது வான்தாக்குதல் நடத்தியது. அப்போது ரஃபா நகரில் உள்ள முகாம் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் 35 பேர் பரிதாபமாக கொல்லப்பட்டனர். இதற்கு பெரும்பாலான நாடுகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.

    இந்த நிலையில் ரஃபா மீது தாக்குதல் நடத்திய நிலையில் இஸ்ரேல் உடன் போர் நிறுத்தத்திற்கான பேச்சுவார்த்தை கிடையாது என ஹமாஸ் தெரிவித்துள்ளது.

    காசா மக்களுக்கு மனிதாபிமான உதவிகள் கிடைத்திடவும், ஹமாஸ் பிடித்துச் சென்ற பிணைக்கைதிகளை விடுவிக்கவும் இஸ்ரேல்- ஹமாஸ் இடையே போர் நிறுத்தம் தேவை என அமெரிக்கா, எகிப்து உள்ளிட்ட நாடுகள் வலியுறுத்தி வருவதுடன், அதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டு வருகின்றன.

    இந்நிலையில், இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோகித் சர்மாவின் மனைவி ரித்திகா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக 'ALL EYES ON RAFAH' என ஸ்டோரி வைத்து, சிறிது நேரத்தில் அதனை டெலீட் செய்துள்ளார்.

    தற்போது அந்த பதிவு சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

    • இந்த முடிவை இந்தியாவில் பல ரசிகர்கள் ஏற்றுக் கொள்ளாமல் மிகவும் உணர்ச்சிவசப்படுகிறார்கள்.
    • கேப்டன் என்ற எந்த நெருக்கடியும் இல்லாமல் அவர் களத்தில் சாதாரண வீரராக விளையாடி மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்பதுதான் என்னுடைய எண்ணம்.

    மும்பை இந்தியன்ஸ் அணி தங்களுடைய புதிய கேப்டனாக ஹர்திக் பாண்டியாவை நியமித்தது. இதனை ஏற்றுக் கொள்ள முடியாத ரோகித் ரசிகர்கள் அதிர்ச்சியும் கோபமும் அடைந்தனர். அதனால் மும்பை இந்தியன்ஸ் அணியின் சமூக வலைதள கணக்கை பின் தொடர்வதை நிறுத்தி விட்டார்கள்.

    இந்நிலையில் கேப்டன் பதவியில் இருந்து ரோகித் சர்மா நீக்கப்பட்ட காரணத்தை மும்பை இந்தியன்ஸ் அணியின் பயிற்சியாளர் மார்க் பவுச்சர் தெரிவித்துள்ளார்.

    இது குறித்து பவுச்சர் கூறியதாவது:-

    இது முழுக்க முழுக்க கிரிக்கெட்டை வைத்து எடுக்கப்பட்ட முடிவு. பாண்டியாவை ஒரு வீரராக முதலில் நாங்கள் வாங்க நினைத்தோம். தற்போது அணி மாற்றத்தை சந்தித்துக் கொண்டிருக்கிறது. அந்த காலகட்டத்தில் தான் நாங்கள் இருக்கிறோம். இதனால்தான் நாங்கள் புதிய கேப்டனை நியமித்துள்ளோம்.

    இந்த முடிவை இந்தியாவில் பல ரசிகர்கள் ஏற்றுக் கொள்ளாமல் மிகவும் உணர்ச்சிவசப்படுகிறார்கள். தற்போது கேப்டனாக இல்லாமல் வெறும் ஒரு வீரராக ரோகித் விளையாடினால் அவரின் பல திறமைகள் பேட்டிங்கில் நிச்சயம் வெளிப்படும். ரோகித் தற்போது களத்திற்கு சென்று எந்த நெருக்கடியும் இல்லாமல் மகிழ்ச்சியாக இருந்து ரன்களை சேர்க்க வேண்டும். அதுதான் முக்கியம். ரோகித் சர்மா ஒரு மிக சிறந்த நபர். மேலும் அவர் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக பல ஆண்டு காலம் சிறப்பாக கேப்டன்ஷிப் செய்து இருக்கிறார்.

    கேப்டன் என்ற எந்த நெருக்கடியும் இல்லாமல் அவர் களத்தில் சாதாரண வீரராக விளையாடி மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்பதுதான் என்னுடைய எண்ணம். இருப்பினும் அவர் இந்திய அணிக்கு தொடர்ந்து கேப்டனாக இருக்கிறார். இதனால் அவருக்கான மவுசு என்றுமே குறையாது. ஐபிஎல் தொடருக்கு வரும் போது கேப்டனாக மேலும் அவருடைய நெருக்கடி அதிகரிக்கும். இந்த ஐபிஎல் தொடரில் ஒரு சிறந்த பேட்ஸ்மேன் ஆக ரோகித் சர்மாவை நாம் பார்க்க முடியும். அவருடைய முகத்தில் சிரிப்பு வரவேண்டும் என்பது எனது ஆசை.

    என்று மார்க் பவுச்சர் கூறியுள்ளார்.

    இதற்கு ரோகித் சர்மாவின் மனைவி ரித்திகா இதில் பல தவறுகள் இருக்கிறது என பதிவிட்டார். இந்த பதிவு சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    • ரோகித் மனைவி ரித்விகாவுக்கு இன்று பிறந்தநாள்.
    • இவருக்கு மும்பை இந்தியன்ஸ் எக்ஸ் தளத்தில் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தது.

    மும்பை:

    மும்பை அணியின் கேப்டனாக ரோகித் சர்மா செயல்பட்டு வந்த நிலையில், ஹர்திக் பாண்ட்யாவுக்கு கேப்டன் பதவி கொடுக்கப்பட்டது. இதனால் ரசிகர்கள் கடும் எதிர்ப்பை தெரிவித்து வந்தனர். மேலும் மும்பை இந்தியன்ஸ் அணியின் இன்ஸ்டாகிராம் மற்றும் பேஸ்புக் பக்கத்தில் பாலோயர்களின் எண்ணிக்கை 13 மில்லியனில் இருந்து 8 மில்லியனாக குறைந்தது.

    இந்நிலையில் ரோகித் சர்மா மனைவி ரித்திகாவுக்கு மும்பை இந்தியன்ஸ் எக்ஸ் தளத்தில் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தது. மேலும் எங்களின் நம்பர் ஒன் ஆதரவாளர் என தெரிவித்திருந்தது. 

    இந்த பதவிக்கு ரசிகர்கள் பலர் காட்டமாக கமெண்ட் செய்துள்ளனர். ஒருசில ரசிகர்கள் கூறியது, பிறந்தநாள் வாழ்த்துக்கள் ரித்திகா ஆனால் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு ஆதரவு இல்லை என கூறினர். மேலும் சிலர் அன்பாலோ மும்பை இந்தியன்ஸ், உங்களுக்கு ஆதரவு இல்லை ரோகித்துக்கு மட்டும்தான் ஆதரவு, ரோகித்தை மும்பை இந்தியன்ஸ் அணியில் இருந்து விடுவியுங்கள் எனவும் கமெண்ட் செய்து வருகின்றனர்.

    • உலக டெஸ்ட் இறுதிப்போட்டிக்கு பிறகு இந்திய அணி வீரர்களுக்கு ஓய்வு வழங்கப்பட்டுள்ளது.
    • இந்த விடுமுறையை ரோகித் சர்மா அவரது குடும்பத்துடன் செலவிட்டுள்ளார்.

    ஆஸ்திரேலியாவுக்கு எதிரான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் இந்தியா 209 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. இதனையடுத்து ரோகித் சர்மா டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார் எனவும் கேப்டன் பதவியில் இருந்து விலகினார் என்று நிறைய வதந்திகள் பரவின.

    இருப்பினும், கேப்டன் பதவியில் இருந்து விலகுவது அல்லது டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து விலகுவது குறித்து எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் வெளியிடவில்லை. உலக டெஸ்ட் இறுதிப்போட்டிக்கு பிறகு இந்திய அணி வீரர்களுக்கு ஓய்வு வழங்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில் இந்த விடுமுறையை ரோகித் சர்மா அவரது குடும்பத்துடன் செலவிட்டுள்ளார். கடற்கரையில் அவரது மனைவி ரித்திகா மகள் சமிரா ஆகியோருடன் உள்ள புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.



    இதில் சுவாரஸ்யமாக நிகழ்வை ரோகித் சர்மாவின் மனைவி தனது இன்ஸ்டாகிராம் ஸ்ரோயில் பகிர்ந்துள்ளார். அதில் தனது கைப்பேசி கடலில் விழுந்ததாகவும் அதனை ரோகித் கடலில் குதித்து எடுத்துக் கொடுத்ததாகவும் கூறியிருந்தார்.

    ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி அடுத்த மாதம் வெஸ்ட் இண்டீசுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளது. இரண்டு டெஸ்ட் போட்டிகள், மூன்று ஒருநாள் போட்டிகள் மற்றும் ஐந்து டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது. 

    • உணர்வின்மையுடன் சில மீடியாக்கள் செயல்படுகின்றன.
    • ஒருவர் அடிப்பட்டு மிகவும் கஷ்டமான சூழ்நிலையில் இருக்கும் வேளையில் அவரது புகைப்படங்களையும், வீடியோக்களையும் சமூக வலைதளத்தில் வெளியிடுவது மிகவும் தவறான விஷயம்.

    இந்திய கிரிக்கெட் அணியின் இளம் விக்கெட் கீப்பரான ரிஷப் பண்ட் நேற்று அதிகாலை நடைபெற்ற சாலை விபத்தில் சிக்கி மோசமான காயங்களுடன் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். நேற்று அதிகாலை அவருக்கு நடைபெற்ற இந்த விபத்தினை அடுத்து சமூக வலைதளத்தில் அவர் குறித்த செய்திகளே அதிகளவு பகிரப்பட்டு வருகின்றன. அந்த அளவிற்கு அவருக்கு ஏற்பட்ட இந்த விபத்து குறித்த தகவல் தற்போது பேசுபொருளாக மாறியுள்ளது.

    அதோடு ரிஷப் பண்டின் மெடிக்கல் ரிப்போர்ட், போலீஸ் அறிக்கை மற்றும் பிசிசிஐ-யின் தகவல் என பல்வேறு விஷயங்கள் ரிஷப் பண்ட் குறித்து சமூக வலைதளத்தில் அவர் குறித்த செய்திகளே அதிகஅளவு பகிரப்பட்டன. அதேபோன்று அவர் விபத்தினை சந்தித்த அந்த இடத்தில் எடுக்கப்பட்ட வீடியோ மற்றும் புகைப்படங்கள் என பல்வேறு விஷயங்கள் நேற்று சமூக வலைதளத்தில் அதிகஅளவு பகிரப்பட்டு இருந்தது. அதோடு ரிஷப பண்ட் விரைவில் குணமடைந்து இந்த இக்கட்டான நிலையில் இருந்து மீண்டு வர வேண்டும் என்று பலரும் தங்களது பிரார்த்தனைகளையும் பகிர்ந்திருந்தனர்.

    இந்நிலையில் இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மாவின் மனைவி ரித்திகா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள ஒரு பதிவு தற்போது அதிகளவு கவனத்தை ஈர்த்துள்ளது.

    இதுகுறித்து அவர் பதிவிட்டு இருந்த அந்த கருத்தில் குறிப்பிடப்பட்டிருந்ததாவது :

    ஒருவர் அடிப்பட்டு மிகவும் கஷ்டமான சூழ்நிலையில் இருக்கும் வேளையில் அவரது புகைப்படங்களையும், வீடியோக்களையும் சமூக வலைதளத்தில் வெளியிடுவது மிகவும் தவறான விஷயம். இதுபோன்று சிலர் பகிர்ந்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பார்க்கும்போது வருத்தமாக இருக்கிறது.

    ஏனெனில் ரிஷப் பண்டின் குடும்பத்தாரோ அல்லது அவர்களின் நெருங்கிய நண்பர்களோ அவரது இந்த நிலை குறித்து வருத்தப்படும் வேளையில் இது போன்ற சில விஷயங்களை பார்த்தால் அவர்கள் மனதளவில் எவ்வளவு காயப்படுவார்கள் என்று யோசிக்க வேண்டும்.

    உணர்வின்மையுடன் சில மீடியாக்கள் செயல்படுகின்றன.

    ×