என் மலர்
நீங்கள் தேடியது "2022-ம் ஆண்டில்"
- ஈரோடு மாவட்ட காவல்துறையினர் சிறந்த முறையில் பணியாற்றி கொலை, கொள்ளை வழக்குகள் வெகுவாக குறையும் வகையில் திறம்பட பணியாற்றியுள்ளனர்.
- போலீஸ் நிலையத்திற்கு வரும் மனுக்கள் மீது விரைந்து உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
ஈரோடு:
ஈரோடு மாவட்டத்தில் 2022-ம் ஆண்டு ஈரோடு மாவட்ட காவல்துறையினர் சிறந்த முறையில் பணியாற்றி கடந்த ஆண்டு காட்டிலும் கொலை, கொள்ளை வழக்குகள் வெகுவாக குறையும் வகையில் திறம்பட பணியாற்றியுள்ளனர்.
குற்ற சம்பவங்களை தடுக்கும் பொருட்டு காவல் நிலையங்களில் ரோந்து பணிகள் அதிகரிக்கப்பட்டுள்ளது. ரவுடிகள் மீது கடும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. போலீஸ் நிலையத்திற்கு வரும் மனுக்கள் மீது விரைந்து உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
இதன் விளைவாக கடந்த ஆண்டு 40 கொலைகள் பதிவான நிலையில் இந்த ஆண்டு 21 கொலைகள் மட்டுமே பதிவானது. இது கடந்த ஆண்டை விட 50 சதவீதம் குறைவாகும்.
இந்த ஆண்டு பதிவான அனைத்து கொலைகளிலும் 100 சதவீதம் குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்பட்டு 38 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப் பட்டுள்ளனர்.
குற்ற வழக்குகளை கண்டுபிடிக்க தனி படைகள் அமைக்கப்பட்டு 377 குற்ற வழக்குகள் கண்டுபிடி க்கப்பட்டு குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு அவர்களிடம் இருந்து 101 வாகனங்கள் மற்றும் 228 பவுன் நகைகள் உள்பட ரூ.2 கோடியே 24,87,957 மதிப்புள்ள களவு சொத்துக்கள் மீட்கப்பட்டு உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.
சட்ட விரோத நடவடிக்கையில் ஈடுபட்ட 5,142 நபர்கள் மீது உரிய கடும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது. லாட்டரி விற்பனையில் ஈடுபட்ட 315 நபர்கள் கைது செய்யப்பட்டனர்.
தீவிர கஞ்சா தடுப்பு வேட்டை மூலம் 244 கஞ்ச வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 396 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து ரூ. 23 லட்சத்து 93 ஆயிரத்து 948 மதிப்புள்ள 163 கிலோ கஞ்சா, 3,008 போதை மாத்திரைகள் மற்றும் 196 போதை சாக்லேட் பறிமுதல் செய்யப்பட்டது. 79 கஞ்சா குற்றவாளிகள் வாங்கி கணக்குகள் முடக்கப் பட்டுள்ளன.
தடை செய்யப்பட்ட புகையிலை விற்றதாக 419 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 465 நபர்கள் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து 12,017 கிலோ குட்கா பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. 17 குற்றவாளிகளின் வங்கி கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன.
அரசு மதுபானங்கள் வெளிநாட்டு மதுபானங்கள் கள்ள சந்தையில் பதுக்கியும் மற்றும் கள்ளச்சாராயம் விற்பனை செய்ததாக 4,281 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 4,368 நபர்கள் கைது செய்யப்பட்டு அவர்களிடமிருந்து 48 ஆயிரம் மது பாட்டில்கள், 52 லிட்டர் சாராயம் மற்றும் 745 லிட்டர் சாராய ஊரல் மற்றும் 107 லிட்டர் கள்ளும், 562 வெளிநாட்டு மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டு அவை உரிய முறையில் அழிக்கப்பட்டன.
மது கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட 138 இருக்கரவாகனம், 3 மூன்று சக்கர மற்றும் நான்கு சக்கர வாகனம் பறிமுதல் செய்யப்பட்டு அவை சட்ட விதிகளுக்கு உட்பட்டு ஏலம் விடப்பட்டது. இதன் மூலம் ரூ.63,5,744 தொகை பெறப்பட்டு அது அரசுடைமை ஆக்கப்பட்டது.
மேலும் 14 மணல் திருட்டு வழக்குகளில் 19 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு 34 நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 115 சூதாட்டம் வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 667 நபர்கள் கைது செய்யப்பட்டு அவர்களிடம் இருந்து ரூ.14,41,275 பறிமுதல் செய்ய ப்பட்டு நீதிமன்ற ங்களில் ஒப்படைக்கப் பட்டுள்ளது.
பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை தடுக்கும் பொருட்டு மாவட்டம் முழுவதும் உள்ள பல்வேறு கல்வி நிறுவனங்கள் மற்றும் கிராமங்களில் காவல்துறை மூலம் 3,509 விழிப்புணர்வு கூட்டங்கள் நடத்தப்பட்டு பெண்கள் மற்றும் குழந்தை களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
விழிப்புணர்வு காரணமாக 90 குழந்தை திருமணங்கள் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது. 169 போக்சோ வழக்குகள் பதிவு செய்யப்பட்டு அதில் அனைத்து குற்றவாளிகளும் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.
இந்த ஆண்டு நீதிம ன்றத்தில் விசாரிக்கப்பட்ட 25 போக்சோ வழக்குகளில் குற்றவாளிகளுக்கு தண்டனை பெறப்பட்டு அவர்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.