என் மலர்
நீங்கள் தேடியது "காலிங்கராயன் வாய்க்கால்"
- பவானிசாகர் அணையில் இருந்து காளிங்கராயன் வாய்க்கால் 2-ம் பருவ பாசனத்துக்கு நாளை முதல் 120 நாட்களுக்கு தண்ணீர் திறக்கப்படுகிறது.
- நாள் ஒன்றுக்கு 500 கனஅடி வீதம் தண்ணீர் திறந்துவிட அரசு உத்தரவிட்டுள்ளது.
ஈரோடு:
ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணையில் இருந்து காளிங்கராயன் வாய்க்கால் 2-ம் பருவ பாசனத்துக்கு நாளை முதல் (ஞாயிற்றுக்கிழமை) ஏப்ரல் மாதம் 30-ந் தேதி வரை 120 நாட்களுக்கு தண்ணீர் திறக்கப்படுகிறது.
மொத்தம் 5,184 மில்லியன் கனஅடிக்கு மிகாமல் நாள் ஒன்றுக்கு 500 கனஅடி வீதம் தண்ணீர் திறந்துவிட அரசு உத்தரவிட்டுள்ளது.
இதன் மூலம் பவானி, ஈரோடு, மொடக்குறிச்சி, கொடுமுடி தாலுகாவில் 15,743 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.