என் மலர்
நீங்கள் தேடியது "1250 கிலோ அரிசி மூட்டைகள்"
- சில நபர்கள் சரக்கு ஆட்டோவில் கர்நாடகா மாநிலத்திற்கு கடத்தல்
- உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை
அன்னதானப்பட்டி:
சேலம் கருங்கல்பட்டி சுற்று வட்டாரப் பகுதிகளில் சிலர் குறைந்த விலைக்கு ரேஷன் அரிசியை வாங்கி வீட்டில் பதுக்கி வைத்து வெளி மாவட்டங்கள் மற்றும் மாநிலங்களுக்கு கடத்தி விற்பனை செய்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்று இரவு சில நபர்கள் சரக்கு ஆட்டோவில் கர்நாடகா மாநிலத்திற்கு கடத்துவதற்காக ரேஷன் அரிசி மூட்டைகளை ஏற்றிக் கொண்டிருந்தனர்.
இது குறித்த தகவலின் பேரில், உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். இதையடுத்து ரேஷன் அரிசி வீட்டில் பதுக்கி வைத்து, கடத்தலில் ஈடுபட்ட கருங்கல் பட்டி பாண்டுரங்கன் கோவில் தெரு பகுதியைச் சேர்ந்த பாலு ( வயது 21), அவருக்கு உதவி செய்த அம்மாப்பேட்டை தாதம்பட்டி பகுதியைச் சேர்ந்த அஜீத் (21) ஆகிய இருவரையும் கைது செய்தனர். 1250 கிலோ அரிசி மூட்டைகள், ஆட்டோ பறிமுதல் செய்யப்பட்டன.