என் மலர்
நீங்கள் தேடியது "இந்தியா ஆஸ்திரேலியா மோதல்"
- ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் ரிஷப் பண்ட் பங்கேற்க மாட்டார்.
- இஷான் கிஷன், கே.எஸ்.பரத், உபேந்திர யாதவ் இடையே கடும் போட்டி.
வரும் பிப்ரவரி மாதம் இந்தியா வரும் ஆஸ்திரேலிய அணி 4 போட்டிகளைக் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. இந்தியா- ஆஸ்திரேலியா இடையே முதலாவது டெஸ்ட் போட்டி பிப்ரவரி 9-ந்தேதி நாக்பூரில் தொடங்குகிறது. இந்நிலையில் சாலை விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்த இந்திய கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட் இந்த தொடரில் பங்கேற்க மாட்டார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேல் சிகிச்சைகாக டேராடூனில் உள்ள மருத்துவமனையில் இருந்து டெல்லி அல்லது மும்பையில் உள்ள மருத்துவமனைக்கு விரைவில் பண்ட் மாற்றப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ரிஷப் பண்டுக்கு நீண்ட கால சிகிச்சை தேவைப்படுவதாக அவரது பயிற்சியாளர் தேவேந்திர சர்மா கூறியுள்ளார். காயத்தில் இருந்து பண்ட் முழுமையாக குணமடைய குறைந்தது 3 முதல் 6 மாதங்கள் வரை ஆகும் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இதனை அடுத்து ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரில் பங்கேற்கும் இந்திய அணிக்கு புதிய விக்கெட் கீப்பரை தேர்வு செய்வது குறித்து தேர்வு கமிட்டி ஆலோசித்து வருகிறது. இரண்டு புதிய விக்கெட் கீப்பர்கள் அணிக்கு தேர்வு செய்யப்படுவார்கள் என கூறப்படுகிறது. ரிஷப் இடத்திற்கு இஷான் கிஷன், கே.எஸ்.பரத், இந்தியா ஏ அணியை சேர்ந்த உபேந்திர யாதவ் ஆகியோர் இடையே கடும் போட்டி நிலவுகிறது. இஷான் கிஷனை கே.எஸ்.பரத்துக்கு அதிக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
- சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட்டில் இவ்விரு அணிகளும் 4 முறை சந்தித்து இருக்கின்றன.
- இதில் 2 ஆட்டத்தில் இந்தியாவும், ஒன்றில் ஆஸ்திரேலியாவும் வெற்றி கண்டன.
துபாய்:
9-வது ஐ.சி.சி. சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டி பாகிஸ்தான் மற்றும் துபாயில் நடந்து வருகிறது. 8 அணிகள் பங்கேற்ற இந்த கிரிக்கெட் திருவிழாவில் லீக் சுற்று முடிவில் 'ஏ' பிரிவில் டாப்-2 இடங்களை பிடித்த இந்தியா, நியூசிலாந்து, 'பி' பிரிவில் தென்ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா ஆகிய அணிகள் அரைஇறுதிக்கு தகுதி பெற்றன. நடப்பு சாம்பியன் பாகிஸ்தான், வங்காளதேசம், இங்கிலாந்து, ஆப்கானிஸ்தான் ஆகிய அணிகள் வெளியேறின.
இந்த நிலையில் துபாயில் இன்று (செவ்வாய்க்கிழமை) அரங்கேறும் முதலாவது அரைஇறுதியில் முன்னாள் சாம்பியன்களான இந்தியாவும், ஆஸ்திரேலியாவும் பலப்பரீட்சையில் இறங்குகின்றன. இரு அணிகளும் ஏறக்குறைய சரிசம பலத்துடன் மல்லுகட்டுவதால் இந்த ஆட்டம் கிரிக்கெட் ரசிகர்களின் ஆவலை தூண்டியுள்ளது.
ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி லீக் சுற்றில் வங்காளதேசம், பாகிஸ்தான், நியூசிலாந்து ஆகிய அணிகளை வரிசையாக போட்டுத்தாக்கி தனது பிரிவில் கம்பீரமாக முதலிடத்தை பிடித்தது. சுப்மன் கில், ஸ்ரேயாஸ் ஐயர், அக்ஷர் பட்டேல் பேட்டிங்கில் நல்ல நிலையில் உள்ளனர். தொடர்ந்து தடுமாற்றம் காணும் கேப்டன் ரோகித் சர்மா பார்முக்கு திரும்ப வேண்டியது அவசியமாகும். இதேபோல் கோலியும் கைகொடுத்தால் இந்தியாவின் பேட்டிங் வலிமையடையும்.
பந்து வீச்சில் சுழற்பந்து வீச்சாளர்கள் வருண் சக்ரவர்த்தி, குல்தீப் யாதவ், ரவீந்திர ஜடேஜா, அக்ஷர் பட்டேல் கலக்குகிறார்கள். முந்தைய நியூசிலாந்துக்கு எதிரான ஆட்டத்தில் வாய்ப்பு பெற்ற வருண் சக்ரவர்த்தி 5 விக்கெட்டுகளை வீழ்த்தி அமர்க்களப்படுத்தினார். அந்த ஆட்டத்தில் இந்தியா 4 சுழற்பந்து வீச்சாளர்களுடன் ஆடி நியூசிலாந்தை திக்குமுக்காடச் செய்தது. அதனால் இன்றைய ஆட்டத்திலும் இந்தியா 4 சுழல் யுக்தியை தொடரும் என்று தெரிகிறது. அவ்வாறு நிகழ்ந்தால் வேகப்பந்து வீச்சாளர் ஹர்ஷித் ராணாவுக்கு இடம் கிடைக்காது.
'பி' பிரிவில் அங்கம் வகித்த ஆஸ்திரேலிய அணி தனது முதல் ஆட்டத்தில் இங்கிலாந்துக்கு எதிராக 352 ரன்கள் இலக்கை விரட்டிப்பிடித்து வரலாறு படைத்தது. அதில் ஜோஷ் இங்லிஸ் சதம் விளாசினார். தென்ஆப்பிரிக்கா, ஆப்கானிஸ்தானுக்கு எதிரான ஆட்டங்கள் மழையால் ரத்தானது.
அந்த அணியில் பிரதான வேகப்பந்து வீச்சாளர்கள் கம்மின்ஸ், ஹேசில்வுட், மிட்செல் ஸ்டார்க் இல்லை. அதனால் அவர்களின் பந்து வீச்சு சற்று பலவீனமாகவே தோன்றினாலும், பேட்டிங்கில் அசுர பலம் வாய்ந்ததாக திகழ்கிறது.
டிராவிஸ் ஹெட், கேப்டன் ஸ்டீவன் சுமித், லபுஸ்சேன், ஜோஷ் இங்லிஸ், அலெக்ஸ் கேரி சூப்பர் பார்மில் உள்ளனர். குறிப்பாக டிராவிஸ் ஹெட் இந்தியாவுக்கு எதிராக சிறப்பாக விளையாடி வருகிறார். 2023 ஒருநாள் உலகக் கோப்பை இறுதிப்போட்டியில் இந்திய அணியின் தோல்விக்கு முக்கிய பங்காற்றினார். அதே போல் உலக டெஸ்ட் சாம்பியன்ஸ் போட்டியிலும் சமீபத்தில் நடந்த பார்டர் கவாஸ்கர் தொடரில் இந்தியாவுக்கு எதிராக சிறப்பாக விளையாடி உள்ளார்.
அதாவது இந்தியா என்றாலே அடிப்பேன் என்பது போல டிராவிஸ் ஹெட் விளையாடி வருகிறார். இது போன்ற பல மீம்ஸ்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த சூழ்நிலையில் டிராவிஸ் ஹெட்டை சீக்கிரமாக வீழ்த்த இந்திய அணி தீவிரமாக போராடும் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை.
பின்னங்காலில் ஏற்பட்ட காயத்தால் விலகிய மேத்யூ ஷார்ட்டுக்கு பதிலாக ஆல்-ரவுண்டர் கூபர் கனோலி சேர்க்கப்பட்டுள்ளார். பந்து வீச்சில் ஆடம் ஜம்பா, துவார்ஷூயிஸ், நாதன் எலிஸ் ஆகியோரைத் தான் அதிகம் நம்பி உள்ளது.
பொதுவாக ஆஸ்திரேலிய அணி ஐ.சி.சி. தொடர்களில் நெருக்கடியை சிறப்பாக கையாளக்கூடியது. அதனால் இந்தியாவுக்கு கடும் சோதனை காத்திருக்கிறது என்பதில் துளியும் சந்தேகமில்லை.
இவ்விரு அணிகள் இதுவரை 151 ஒரு நாள் போட்டிகளில் நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில் 57-ல் இந்தியாவும், 84-ல் ஆஸ்திரேலியாவும் வெற்றி பெற்றன. 10 ஆட்டங்களில் முடிவு கிடைக்கவில்லை.
சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட்டில் இவ்விரு அணிகளும் 4 முறை சந்தித்து இருக்கின்றன. இதில் 2 ஆட்டத்தில் இந்தியாவும், ஒன்றில் ஆஸ்திரேலியாவும் வெற்றி கண்டன. மழையால் ஒரு ஆட்டத்தில் முடிவு இல்லை.