search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "டெஸ்ட் தொடர்"

    • வேகப்பந்துக்கு சாதகமான ஆடுகளங்களை இந்தியா தயார் செய்யலாம்.
    • கே.எல். ராகுல் ஒரு சிறந்த கீப்பர்.

    வங்காளதேச கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 2 போட்டி கொண்ட டெஸ்ட் தொடர் மற்றும் 3 போட்டி கொண்ட 20 ஓவர் தொடரில் விளையாடுகிறது.

    முதல் டெஸ்ட் போட்டி வருகிற 19-ந்தேதி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் தொடங்குகிறது. 2-வது டெஸ்ட் போட்டி 27-ந்தேதி கான்பூரில் தொடங்குகிறது.

    வங்காளதேச அணி சமீபத்தில் பாகிஸ்தானை அதன் மண்ணில் வீழ்த்தி டெஸ்ட் தொடரை கைப்பற்றி அசத்தி வரலாறு படைத்தது.

    இந்த நிலையில் வங்காள தேசத்தை இந்தியா எளிதில் வீழ்த்தும் என்று இந்திய அணி முன்னாள் வீரர் தினேஷ் கார்த்திக் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது:-

    இந்தியாவுக்கு எதிராக அதன் சொந்த மண்ணில் வெற்றி பெறுவது சவாலானது. பாகிஸ்தானில் வங்காள தேசம் நன்றாக விளையாடியது. ஆனால் வங்காள தேசத்தை வீழ்த்து வதற்கு இந்தியாவுக்கு அதிக சிரமம் இருக்காது என்று நான் நினைக்கிறேன்.

    இந்த தொடருக்கு வேகப்பந்துக்கு சாதகமான ஆடுகளங்களை இந்தியா தயார் செய்யலாம். இது வங்காளதேசத்துக்கு எதிராக உதவும் மற்றும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடருக்கு தயாராவதற்கு உதவும். இரண்டு சுழற்பந்து வீச்சாளர்களுடன் மட்டுமே விளையாடுவார்கள் என்று நினைக்கிறேன்.

    கே.எல். ராகுல் ஒரு சிறந்த கீப்பர். அவர் நிறைய முன்னேற்றம் அடைந்துள்ளார். அவரை இனி பகுதி நேர விக்கெட் கீப்பர் என்று அழைப்பது நியாயம் என்று நான் நினைக்கவில்லை. இந்த சீசனில் அவர் சிறப்பாக செயல்படுவார் என்று நம்புகிறேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது.
    • இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்தியா கடைசியாக 2007 ஆம் ஆண்டு வெற்றிப்பெற்றது.

    அடுத்த ஆண்டு ஜூன் மாதம் இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. அதன்படி இந்த தொடருக்கான அட்டவணையை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பி.சி.சி.ஐ.) இன்று வெளியிட்டுள்ளது.

    இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்தியா கடைசியாக 2007 ஆம் ஆண்டு வெற்றிப்பெற்றது. அதைத்தொடர்ந்து 2021 ஆம் ஆண்டு நடந்த போட்டி டிராவில் முடிந்தது. கடசியாக ரோகித் சர்மா தலைமையில் ஆஸ்திரேலயாவிற்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இந்தியா வெற்றிப்பெற்றது.

    இந்நிலையில் தற்போது இந்தியா - இங்கிலாந்து இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி ஜூன் 20 -ம் தேதி லீட்ஸ் மைதானத்திலும், 2-வது போட்டி ஜூலை 2-ம் தேதி பர்மிங்காமிலும், 3-வது போட்டி ஜூலை 10-ம் தேதி லார்ட்ஸ் மைதானத்திலும், 4-வது போட்டி மான்செஸ்டரிலும், 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி ஜூலை 31-ம் தேதி ஓவல் மைதானத்திலும் நடைபெற உள்ளது.

    முன்னதாக இங்கிலாந்து அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடிய 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 1-4 என்ற கணக்கில் படுதோல்வி அடைந்தது குறிப்பிடத்தக்கது.

    • ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் ரிஷப் பண்ட் பங்கேற்க மாட்டார்.
    • இஷான் கிஷன், கே.எஸ்.பரத், உபேந்திர யாதவ் இடையே கடும் போட்டி.

    வரும் பிப்ரவரி மாதம் இந்தியா வரும் ஆஸ்திரேலிய அணி 4 போட்டிகளைக் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. இந்தியா- ஆஸ்திரேலியா இடையே முதலாவது டெஸ்ட் போட்டி பிப்ரவரி 9-ந்தேதி நாக்பூரில் தொடங்குகிறது. இந்நிலையில் சாலை விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்த இந்திய கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட் இந்த தொடரில் பங்கேற்க மாட்டார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    மேல் சிகிச்சைகாக டேராடூனில் உள்ள மருத்துவமனையில் இருந்து டெல்லி அல்லது மும்பையில் உள்ள மருத்துவமனைக்கு விரைவில் பண்ட் மாற்றப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ரிஷப் பண்டுக்கு நீண்ட கால சிகிச்சை தேவைப்படுவதாக அவரது பயிற்சியாளர் தேவேந்திர சர்மா கூறியுள்ளார். காயத்தில் இருந்து பண்ட் முழுமையாக குணமடைய குறைந்தது 3 முதல் 6 மாதங்கள் வரை ஆகும் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

    இதனை அடுத்து ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரில் பங்கேற்கும் இந்திய அணிக்கு புதிய விக்கெட் கீப்பரை தேர்வு செய்வது குறித்து தேர்வு கமிட்டி ஆலோசித்து வருகிறது. இரண்டு புதிய விக்கெட் கீப்பர்கள் அணிக்கு தேர்வு செய்யப்படுவார்கள் என கூறப்படுகிறது. ரிஷப் இடத்திற்கு இஷான் கிஷன், கே.எஸ்.பரத், இந்தியா ஏ அணியை சேர்ந்த உபேந்திர யாதவ் ஆகியோர் இடையே கடும் போட்டி நிலவுகிறது. இஷான் கிஷனை கே.எஸ்.பரத்துக்கு அதிக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. 

    ×