என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "நம்ம ஊரு திருவிழா"
- சென்னையில் அடுத்த ஆண்டு பொங்கல் பண்டிகையின் போது பிரமாண்டமாக சங்கமம்-நம்ம ஊரு திருவிழா பல்வேறு இடங்களில் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
- விண்ணப்பங்களை வைத்து கலைஞர்களை தேர்ந்தெடுத்து நம்ம ஊரு திருவிழா கலை நிகழ்ச்சிகளில் பங்கேற்க வாய்ப்புகள் அளிக்கப்படும்.
சென்னை:
சென்னை, காஞ்சிபுரம் உள்பட 9 மாவட்டங்களில் சங்கமம்-நம்ம ஊரு திருவிழா நடத்த ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது.
இதுகுறித்து கலை பண்பாட்டுத்துறை வெளியிட்ட அறிக்கை வருமாறு:-
சென்னையில் கடந்த பொங்கல் விழாவையொட்டி 4 நாட்கள் 18 இடங்களில் சென்னை சங்கமம்-நம்ம ஊரு திருவிழா நடைபெற்றது.
இது அனைத்து தரப்பு மக்களின் வரவேற்பை பெற்றதால், இந்த ஆண்டு மேலும் 8 முக்கிய நகரங்களுக்கு விரிவுபடுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
இதையடுத்து சென்னை, கோவை, தஞ்சாவூர், வேலூர், சேலம், திரு நெல்வேலி, காஞ்சிபுரம், மதுரை, திருச்சி ஆகிய இடங்களில் சங்கமம்- கலைத்திருவிழாவை நடத்தும் வகையில் நாட்டுப்புற கலை விழாக்கள் அக்டோபர், டிசம்பர் மாதங்களில் முதற்கட்டமாக நடத்தப்பட உள்ளது.
இந்த கலைவிழா மூலம் 3 ஆயிரம் நாட்டுப்புறக் கலைஞர்கள் பயன் அடைவார்கள்.
இதைத் தொடர்ந்து சென்னையில் அடுத்த ஆண்டு பொங்கல் பண்டிகையின் போது பிரமாண்டமாக சங்கமம்-நம்ம ஊரு திருவிழா பல்வேறு இடங்களில் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த விழா மூலம் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கலைஞர்கள் பயன்பெறுவார்கள்.
சங்கமம்-நம்ம ஊரு திருவிழாவில் பங்குபெற விரும்பும் கலைக்குழுக்கள் தங்கள் கலைத் திறமையை வெளிப்படுத்தும் வகையில் 5 நிமிடம் ஓடக்கூடிய வகையில் வீடியோவை குறுந்தகடு அல்லது பென் டிரைவ்-ல் பதிவு செய்து, கலை பண்பாட்டுத்துறைக்கு www.artandculcure.tn.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து எங்களது மண்டல கலை பண்பாட்டு மைய அலுவலகங்களுக்கு வரும் அக்டோபர் 6-ந் தேதிக்குள் பதிவு தபாலில் அனுப்ப வேண்டும்.
இந்த விண்ணப்பங்களை வைத்து கலைஞர்களை தேர்ந்தெடுத்து நம்ம ஊரு திருவிழா கலை நிகழ்ச்சிகளில் பங்கேற்க வாய்ப்புகள் அளிக்கப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- 600 கிராமிய கலைஞர்களின் நிகழ்ச்சிகளை கடற்கரை, பூங்காக்களில் கண்டு களிக்கலாம்.
- நாளையும், நாளை மறுநாளும் தீவுத்திடலில் இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் கிராமிய கலைஞர்களுடன் இணைந்து நிகழ்ச்சி நடத்துகிறார்.
சென்னை:
தி.மு.க. ஆட்சியில் கடந்த 2007-ம் ஆண்டு பொங்கல் பண்டிகையின்போது சென்னை சங்கமம் நிகழ்ச்சி தொடங்கப்பட்டது. 2011-ம் ஆண்டு பொங்கல் பண்டிகை வரை இந்த நிகழ்ச்சி நடத்தப்பட்டது. அதன்பிறகு சென்னை சங்கமம் நிகழ்ச்சி நடத்தப்படவில்லை.
இந்நிலையில் 11 ஆண்டுகளுக்கு பிறகு 'சென்னை சங்கமம்-நம்ம ஊரு திருவிழா' நிகழ்ச்சி இந்த ஆண்டு நடைபெறுகிறது. இதன் தொடக்கவிழா நாளை (வெள்ளிக் கிழமை) சென்னை தீவுத் திடலில் நடக்கிறது.
அதைத்தொடர்ந்து வருகிற 14-ந்தேதி முதல் 17-ந்தேதி வரை 4 நாட்கள் சென்னையில் உள்ள 16 இடங்களில் 'நம்ம ஊரு திருவிழா' நிகழ்ச்சி கோலாகலமாக நடத்தப்படுகிறது. 600 கிராமிய கலைஞர்கள் பங்கேற்கும் இந்நிகழ்ச்சிகளை கடற்கரை, பூங்காக்களில் கண்டுகளிக்கலாம்.
தீவுத்திடல், கொளத்தூர் மாநகராட்சி விளையாட்டு திடல், பெரம்பூர் முரசொலி மாறன் மேம்பால பூங்கா, ராயபுரம் ராபின்சன் பூங்கா, ராகேஸ்வர ராவ் பூங்கா, செம்மொழி பூங்கா, சிந்தாதிரிப்பேட்டை மாநகராட்சி விளையாட்டு திடல், நுங்கம்பாக்கம் டென்னிஸ் விளையாட்டு திடல், அண்ணாநகர் டவர் பூங்கா, கே.கே.நகர் சிவன் பூங்கா, திருவான்மியூர் கடற்கரை சாலை, சைதாப்பேட்டை அரசு ஆண்கள் உயர்நிலைப் பள்ளி விளையாட்டு திடல், தி.நகர் நடேசன் பூங்கா, எலியட்ஸ் கடற்கரை, மே தின பூங்கா, எழும்பூர் அருங்காட்சியகம் உள்ளிட்ட இடங்களில் நடத்தப்படுகிறது. தினமும் மாலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை நிகழ்ச்சிகள் நடைபெறும்.
நாளையும், நாளை மறுநாளும் தீவுத்திடலில் இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் கிராமிய கலைஞர்களுடன் இணைந்து நிகழ்ச்சி நடத்துகிறார்.
இந்த நம்ம ஊரு திருவிழாவில் கரகாட்டம், காவடியாட்டம், தப்பாட்டம் பொய்க்கால் குதிரை, ஒயிலாட்டம், தெருக்கூத்து உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்ட கலை நிகழ்ச்சிகள் நடத்தப்படுகிறது.
- சென்னையில் 16 இடங்களில் கலை நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன.
- மதுரை கோவை, திருச்சி, சேலம் உள்ளிட்ட இடங்களிலும் நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது.
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய தொழில் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு கூறியுள்ளதாவது
இந்த ஆண்டு நாட்டுப்புற கலை நிகழ்ச்சியான சென்னை சங்கமம், புதுப்பொழிவோடு நம்ம ஊரு திருவிழாவாக சிறப்பான முறையில் நடைபெற உள்ளது. நாடாளுமன்ற உறுப்பினர் கவிஞர் கனிமொழி ஒருங்கிணைப்பில் விழாநிகழ்ச்சிகள் மிளிர இருக்கிறது. வரும் 13ஆம் தேதி துவங்கி, 17ஆம் தேதி வரை மிகச் சிறப்பாக சென்னை மாநகரில் இந்த விழா நடைபெறவிருக்கிறது. இதன் தொடக்க விழாவை, 13ந் தேதி மாலை சென்னை தீவுத்திடலில் பிரம்மாண்டமான கலை விழாவோடு முதலமைச்சர் துவங்கி வைக்கிறார்.
தொடர்ந்து வரும் 14ந் தேதி முதல் 17ந் தேதிவரை நான்கு நாட்களுக்கு சென்னையில் 16 இடங்களில் கலை நிகழ்ச்சிகள் நடைபெறும். மதுரை கோவை, திருச்சி, சேலம், தஞ்சாவூர், திருநெல்வேலி உள்ளிட்ட இடங்களிலும் இந்த கலை நிகழ்ச்சிகள் நடைபெறவிருக்கிறது. மேலும் பஞ்சாப், அஸ்ஸாம், மேற்கு வங்கம் போன்ற இதர மாநிலங்களிலிருந்தும், சில நிகழ்ச்சிகளை இணைந்து நம்முடைய ஒருமைப்பாட்டையும் பிரதிபலிக்கக்கூடிய வகையில் இந்த நிகழ்ச்சிகள் அமைய இருக்கிறது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்