என் மலர்
நீங்கள் தேடியது "People’s Movement for Cleanliness"
- பரமத்தி வேலூர் தாலுகா பொத்தனூர் தேர்வுநிலை பேரூராட்சியில் வாரந்தோறும் நடைபெற்று வரும் நகரங்களின் தூய்மைக்கான மக்கள் இயக்கம் நடைபெற்றது.
- பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி உறுதிமொழி எடுத்தல், டெங்கு ஒழப்பு பணிகள் மேற்கொள்ளுதல் போன்ற அத்தியாவசிய பணிகள் மேற்கொள்ளப்பட்டது
பரமத்தி வேலூர்:
சென்னை பேரூராட்சி களின் இயக்குநரின் அறி வுரைகளின்படி, நாமக்கல் மாவட்டம், பரமத்தி வேலூர் தாலுகா பொத்தனூர் தேர்வுநிலை பேரூராட்சியில் வாரந்தோறும் நடைபெற்று வரும் நகரங்களின் தூய்மைக்கான மக்கள் இயக்கம், நம்ம ஊரு சூப்பரு திட்டங்களின்படி பொத்தனூர் பேரூ ராட்சிக்குட்பட்ட 13,14 வார்டு பகுதிகளில் பேரூ ராட்சி தலைவர் கருணாநிதி தலைமையில், செயல் அலுவலர் கணேசன் முன்னிலையில் பேரூராட்சி இளநிலை உதவியாளர் ஜெயசேகர், துப்புரவு மேற்பார்வையாளர் குணசேகரன், அலுவலக பணியாளர்கள், பேரூராட்சி உறுப்பினர்கள், அனைத்து தூய்மைப் பணியாளர்கள், சுய உதவிக்குழு உறுப்பி னர்கள் உட்பட 80-க்கும்
மேற்பட்டவர்கள் ஒன்றாக இணைந்து பொது சுகாதாரப்பணிகளான, செடி,கொடி,முட்புதர்கள் அகற்றுதல், மழைநீர் வடிகால் சுத்தம் செய்தல், தெருக்களை சுத்தம் செய்தல், குடிநீர் பைப்லைன் பழுதுகள் சரி செய்தல், தெருமின்விளக்குகள் மற்றும் மின் இணைப்புகள், மரக்கன்றுகள் நடுதல், சுவரொட்டிகள் அகற்றுதல், விளம்பர பதாகைகள் அகற்றுதல், பொது மக்களுக்கு குப்பைகள் தரம் பிரித்து வழங்குதல் போன்ற பணிகளும், இதுகுறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி உறுதிமொழி எடுத்தல், டெங்கு ஒழப்பு பணிகள் மேற்கொள்ளுதல் போன்ற அத்தியாவசிய பணிகள் மேற்கொள்ளப்பட்டது