என் மலர்
நீங்கள் தேடியது "சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி"
- அதிகாலையே பக்தர்கள் திரண்டு வழிபாடு செய்தனர்.
- அதிகாலையே பக்தர்கள் திரண்டு வழிபாடு செய்தனர்.
மேட்டுப்பாளையம்,
பெருமாள் கோவில்களில் மார்கழி மாதம் நடைபெறும் சொர்க்க வாசல் திறப்பு நிகழ்ச்சி மிகவும் விசேஷமானது ஆகும். இந்த ஆண்டுக்கான சொர்க்க வாசல் திறப்பு நிகழ்ச்சி இன்று நடந்தது.
கோவையில் காரமடை அரங்கநாதர் கோவில், பாப்பநாயக்கன் பாளையம் சீனிவாச பெருமாள் கோவில், ஜெகநாத பெருமாள் உள்ளிட்ட பெருமாள் கோவில்களில் இன்று அதிகாலை சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி நடந்தது. சிறப்பு அலங்காரத்தில் சுவாமி எழுந்தருளி சொர்க்கவாசல் வழியாக பிரவேசித்தார். சுவாமியை தொடர்ந்து பக்தர்கள் சொர்க்கவாசல் வழியாக வந்தனர். ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சுவாமியை வழிபட்டனர். மேட்டுப்பாளையம் அருகே காரமடை அரங்கநாத சுவாமி கோவிலில் வைகுண்ட ஏகாதசி திருவிழாவானது கடந்த 23-ந் தேதி காலை காலை திருமொழி திருநாள் தொடக்கம் என்னும் பகல்பத்து உற்சவத்துடன் தொடங்கியது.
நேற்று இரவு எம்பெருமான் ஸ்ரீ நாச்சியார் திருக்கோலம் அதாவது (பெண் வேடம் தரித்து) மோகனாவதாரம் பூண்டு பக்தர்களுக்கு அருள்பாலித்தார். அதனை தொடர்ந்து இன்று அதிகாலை 5.40 மணியளவில் அரங்கநாதர் ஸ்ரீதேவி, பூதேவி சமேதராய் எழுந்தருளி சொர்க்க வாசல் வழியாக வந்தார்.
அப்போது சங்கு, சேகண்டி முழங்க, பக்தர்கள் கோவிந்தா... கோவிந்தா... என பக்தி கோஷம் எழுப்பி வழிபட்டனர்.
பின்னர் சுவாமி கோவிலின் நான்கு ரத வீதிகளில் அமைக்கப்பட்டு இருந்த சுமார் 30 சமூக பந்தல்களில் நின்று அச்சமுதாய மக்களின் சிறப்பு பூஜைக்கு பின் மீண்டும் கோவிலில் உள்ள வசந்த மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார்.
இன்று இரவு ராப்பத்து உற்சவமானது ெதாடங்குகிறது. அதனை தொடர்ந்து 8 நாட்களும் ராஜ அலங்காரம்,வாமன அவதாரம்,நரசிம்மர் அவதாரம், ராமாவதாரம், பலராமர் அவதாரம், வெண்தாணை ழி கிருஷ்ணன், தவழ் கிருஷ்ணன், குதிரை வாகன உற்சவம் உள்ளிட்ட 8 அவதாரங்களில் எழுந்தருளி பக்தர்களுக்கு அரங்கநாதர் காட்சியளிக்க உள்ளார்.
பக்தர்களின் பாது காப்பிற்காக காரமடை போலீஸ் இன்ஸ்பெக்டர் குமார் தலைமையில் 100-க்கும் மேற்பட்ட போலீசார், ஊர்க்காவல் படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். தீயணைப்புத்துறை, சுகாதாரத்துறை, வருவாய்த்துறை, காரமடை நகராட்சி நிர்வாகம் உள்ளிட்ட பல்வேறு துறையினர் சிறப்பு ஏற்பாடுகளை செய்திருந்தனர்.
விழா ஏற்பாடுகளை காரமடை அரங்கநாதர் திருக்கோவில் செயல் அலுவலர் லோகநாதன் தலைமையிலான அலுவலர்கள் செய்தி ருந்தனர்.