என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "TTF வாசன்"

    • வடபழனியில் உள்ள தியேட்டரில் ஒரு படத்தின் முன்னோட்டத்தை காண TTF வாசன் வந்துள்ளார்.
    • நம்பர் பிளேட் இல்லாத காரில் TTF வாசன் வந்துள்ளார்.

    கோவையைச் சேர்ந்தவர் TTF வாசன். இவர் இருசக்கர வாகனத்தில் ஊர் ஊராகப் பயணம் செய்து தனது அனுபவங்களை யூடியூபில் பதிவேற்றம் செய்து வருகிறார். இவரின் யூடியூப் பக்கத்திற்கு 20 லட்சம் சந்தாதாரர்கள் உள்ளனர். மேலும் இவருக்கு வீடியோக்கள் மூலம் ஏராளமான ரசிகர்கள் உருவாகியுள்ளனர்.

    கடந்த சில தினங்களுக்கு முன்பு கடலூர் புதுப்பாளையம் பகுதியில் திரைப்பட இயக்குனர் ஒருவரின் அலுவலகத்தை திறந்து வைப்பதற்காக யூடியூபர் TTF வாசன் கடலூர் வருகை புரிந்தார். அப்போது அவரை காண ஏராளமான பைக் பிரியர்கள் அந்த இடத்தில குவிந்ததால் கடும் போக்குவரத்துக்கு நெரிசல் ஏற்பட்டது.

    இதனால் போலீசார் அங்கு திரண்டவர்களை விரட்டி அடித்து பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்திய 200க்கும் மேற்பட்ட இரு சக்கர வாகன உரிமையாளர்களுக்கு அபராதம் விதித்தனர். மேலும், போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுத்தியது மற்றும் பொதுமக்களுக்கு இடையூறாக கூட்டம் கூட்டியது உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

    இந்த நிலையில் தற்போது மீண்டும் ஒரு சர்ச்சையில் சிக்கியுள்ளார் TTF வாசன்.

    இன்று வடபழனியில் உள்ள தியேட்டரில் ஒரு படத்தின் முன்னோட்டத்தை காண TTF வாசன் வந்துள்ளார். அப்போது அவர் நம்பர் பிளேட் இல்லாத காரில் வந்துள்ளார். இதனை கண்டறிந்த போக்குவரத்து காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றுள்ளனர்.

    பின்னர் TTF வாசன் வந்த காரை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது TTF வாசன் தியேட்டரில் படம் பார்த்துக்கொண்டிருந்தார். இதனைத்தொடர்ந்து TTF வாசனுக்கு இந்த தகவல் தெரியவர, விரைந்து காவல்நிலையத்திற்கு சென்றார்.

    அங்கு சென்ற TTF வாசனிடம் காவல் துறையினர் விசாரித்தனர். அப்போது இந்த கார் தன்னுடையது அல்ல என்றும், தனது நண்பரின் காரில்தான் தான் வந்ததாகவும் கூறினார். இருப்பினும் அவர் கூறிய காரணங்கள் போதுமானதாக இல்லாத காரணத்தினால், தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

    இச்சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

    • "மஞ்சள் வீரன்" படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வந்தது.
    • "மஞ்சள் வீரன்" படத்திலிருந்து டி.டி.எஃப்.வாசனை நீக்குவதாக அப்படத்தின் இயக்குநர் செல்அம் அறிவித்துள்ளார்.

    சாலைகளில் பைக் ஓட்டி சாகசம் செய்து அதை யூ டியூப்பில் வீடியோவாக பதிவேற்றி பிரபலமானவர் டிடிஎஃப் வாசன்.

    யூடியூப் மூலம் பிரபலமான இவரை கதாநாயகனாக வைத்து செல்அம் என்ற இயக்குனர் "மஞ்சள் வீரன்" என்ற படத்தை இயக்க உள்ளதாக கடந்த ஆண்டு அறிவிப்பு வெளியானது.

    "மஞ்சள் வீரன்" படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வந்தது.

    இந்நிலையில் அப்படத்தில் இருந்து டிடிஎஃப் வாசன் நீக்கப்பட்டுள்ளார்.

    "மஞ்சள் வீரன்" படத்திலிருந்து டி.டி.எஃப்.வாசனை நீக்குவதாக அப்படத்தின் இயக்குநர் செல்அம் அறிவித்துள்ளார். மேலும், அவர் தான் சூப்பர் ஸ்டார்.. ஆனா படத்துல இருந்து தூக்குறோம் என இயக்குநர் தெரிவித்துள்ளார். 

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • டி.டி.எப்.வாசன் சமீபத்தில் மலைப்பாம்பை கையில் வைத்துக்கொண்டு வீடியோ வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார்.
    • சென்னையில் உள்ள வீட்டில் மட்டுமே பாம்பு உள்ளிட்டவற்றை வைத்து பராமரித்து வருவதாக தெரிவிக்கப்பட்டது.

    மேட்டுப்பாளையம்:

    கோவை மாவட்டம் காரமடை அடுத்த வெள்ளியங்காட்டை சேர்ந்தவர் யூடியூபர் டி.டி.எப்.வாசன். இவர் மோட்டார் சைக்கிளை வேகமாக ஓட்டுவது, காரை அஜாக்கிரதையாக இயக்குவது உள்ளிட்ட பல்வேறு சர்ச்சைகளில் சிக்கி வருகிறார்.

    இந்த நிலையில் டி.டி.எப்.வாசன் சமீபத்தில் மலைப்பாம்பை கையில் வைத்துக்கொண்டு வீடியோ வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார். மேலும் அந்த வீடியோவில் தான் அந்த பாம்பை உரிமம் பெற்று வளர்த்து வருவதாகவும் தெரிவித்து இருந்தார். இந்த வீடியோ சமூகவலைதளங்களில் வைரலானது.

    டி.டி.எப்.வாசன் உரிமம் பெற்றிருந்தாலும் பாம்பை துன்புறுத்தும் விதமாக வீடியோ வெளியிட்டது குறித்து சென்னை வனத்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    இதற்கிடையே டி.டி.எப்.வாசனின் வெள்ளியங்காடு இல்லத்துக்கு காரமடை வனத்துறை அதிகாரிகள் நேரில் சென்று அதிரடி சோதனை மேற்கொண்டனர். அப்போது அவர் வேறு ஏதாவது விலங்குகளை வளர்த்து வருகிறாரா என்பது குறித்தும் விசாரணை நடத்தப்பட்டது.

    அப்போது சென்னையில் உள்ள வீட்டில் மட்டுமே பாம்பு உள்ளிட்டவற்றை வைத்து பராமரித்து வருவதாக தெரிவிக்கப்பட்டது.

    இதுகுறித்து காரமடை வனத்துறையினர் கூறுகையில், இங்குள்ள வீட்டில் சோதனை நடத்தினோம். ஆனால் இங்கு விலங்குகள் எதுவும் இல்லை. இது தொடர்பான விவரங்களை சென்னை வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்து விட்டோம் என்றனர்.

    ×