search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சொத்துக்குவிப்பு வழக்கு"

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • சொத்துக்குவிப்பு வழக்கில் விதிக்கப்பட்ட தண்டனைக்கு எதிராக பொன்முடி உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு வழக்கை தொடர்ந்தார்.
    • வழக்கை இன்று விசாரித்த நீதிபதிகள், தண்டனை தீர்ப்பை நிறுத்தி வைக்க வேண்டுமா? என கேள்வி எழுப்பினர்.

    வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக பொன்முடி மற்றும் அவரது மனைவி மீது தொடரப்பட்ட வழக்கில் இருவருக்கும் தலா 3 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனால் பொன்முடியின் அமைச்சர் பதவி பறிபோனது.

    இதையடுத்து, சொத்துக்குவிப்பு வழக்கில் விதிக்கப்பட்ட தண்டனைக்கு எதிராக பொன்முடி உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு வழக்கை தொடர்ந்தார்.

    இவ்வழக்கை இன்று விசாரித்த நீதிபதிகள், தண்டனை தீர்ப்பை நிறுத்தி வைக்க வேண்டுமா? என கேள்வி எழுப்பினர். இதையடுத்து வழக்கு தொடர்பான கூடுதல் விபரங்கள், தீர்ப்பு விபரங்களை தாக்கல் செய்ய உத்தரவிட்டு, விசாரணை மார்ச் 18ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

    • இருவருக்கும் தலா ரூ.50 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது.
    • தண்டனையை எதிர்த்து மேல்முறையீடு செய்ய ஏதுவாக 30 நாட்களுக்கு தண்டனை நிறுத்தி வைக்க நீதிபதி உத்தரவிட்டு இருந்தார்.

    வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் பொன்முடி குற்றவாளி என டிசம்பர் மாதம் அறிவிக்கப்பட்ட நிலையில் அவருக்கும், அவரது மனைவிக்கும் 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார்.

    மேலும் இருவருக்கும் தலா ரூ.50 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது. அபராதம் செலுத்த தவறினால் மேலும் 6 மாத சிறை தண்டனையை அனுபவிக்க வேண்டும் என்று கூறியும், தண்டனையை எதிர்த்து மேல்முறையீடு செய்ய ஏதுவாக 30 நாட்களுக்கு தண்டனை நிறுத்தி வைக்கவும் நீதிபதி உத்தரவிட்டு இருந்தார்.

    இந்த நிலையில், சொத்துக்குவிப்பு வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் விதித்த தண்டனையை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் முன்னாள் அமைச்சர் பொன்முடி மேல்முறையீடு செய்துள்ளார்.

    • 28 வகையான பொருட்களை ஒப்படைக்க வேண்டும்.
    • ஜெயலலிதாவின் 30 கிலோ தங்க, வைர நகைகளை தவிர மற்ற எதுவும் கர்நாடகா நீதிமன்றத்தில் இல்லை.

    சொத்துக்குவிப்பு வழக்கில் பறிமுதல் செய்யப்பட்ட ஜெயலலிதாவின் பொருட்களை ஒப்படைக்க கோரி தமிழக லஞ்ச ஒழிப்பு துறைக்கு கர்நாடகா அரசு வழக்கறிஞர் கடிதம் எழுதியுள்ளார்.

    அக்கடிதத்தில், விலை மதிப்புடைய கடிகாரம், 11 ஆயிரம் புடவைகள், பரிசு பொருட்கள் உட்பட 28 வகையான பொருட்களை ஒப்படைக்க வேண்டும். ஜெயலலிதாவின் 30 கிலோ தங்க, வைர நகைகளை தவிர மற்ற எதுவும் கர்நாடகா நீதிமன்றத்தில் இல்லை என வழக்கறிஞர் தெரிவித்து உள்ளார்.

    பறிமுதல் செய்யப்பட்ட பொருட்களை ஏலம் விட கர்நாடகா அரசு சார்பில் அரசு வழக்கறிஞர் கிரண் எஸ். ஜவாலி ஏற்கனவே நியமனம் செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • சிறையில் சொகுசு வசதிகள் செய்து தர அதிகாரிகளுக்கு சசிகலா 2 கோடி ரூபாய் லஞ்சம் தந்ததாகப் புகார் எழுந்தது.
    • சசிகலா ஷாப்பிங் சென்று வருவது போன்ற புகைப்படங்களும் வெளியாகி அந்த சமயத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

    பெங்களூரு:

    சொத்துக்குவிப்பு வழக்கில் சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோருக்கும் சிறை தண்டனை விதிக்கப்பட்ட நிலையில், 4 வருட சிறை தண்டனை முடிந்து கடந்த 2021-ம் ஆண்டு ஜனவரி மாதம் 27-ந் தேதி சசிகலா விடுதலையானார். அவருடன் சிறையிலிருந்த இளவரசி பிப்ரவரி 5-ந் தேதி விடுவிக்கப்பட்டார்.

    இந்நிலையில் பரப்பன அக்ரஹார சிறையில் சொகுசு வசதிகள் செய்து தர அதிகாரிகளுக்கு சசிகலா 2 கோடி ரூபாய் லஞ்சம் தந்ததாகப் புகார் எழுந்தது. இந்தப் புகாரின் அடிப்படையில் சிறைத்துறை டி.ஐ.ஜி. ரூபா 2017-ம் ஆண்டு அறிக்கை தாக்கல் செய்திருந்தார். சுடிதாருடன் சசிகலா ஷாப்பிங் சென்று வருவது போன்ற புகைப்படங்களும் வெளியாகி அந்த சமயத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

    குற்றச்சாட்டை முன்வைத்த ரூபா அடுத்தடுத்து பணியிட மாற்றம் செய்யப்பட்ட நிலையில், இதுகுறித்து விசாரணை நடத்திய ஓய்வு பெற்ற மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரி வினய்குமார் தலைமையிலான குழு அரசுக்கு அறிக்கை தாக்கல் செய்திருந்தது.

    இந்த வழக்கில், பெங்களூரு ஊழல் ஒழிப்பு நீதிமன்றத்தில் கடந்த மார்ச் 11-ந்தேதி சசிகலா, இளவரசி ஆஜராகி, தற்போது, ஜாமினில் உள்ளனர். இதனிடையே சசிகலா, இளவரசி ஆகியோர், தங்களுக்கு சிறப்பு சொகுசு வசதி வழங்கியதாக, பெங்களூரு பரப்பன அக்ரஹாரா மத்திய சிறையில், தங்களுக்கு எதிராக பதிவு செய்யப்பட்ட வழக்கை ரத்து செய்யக் கோரி, பெங்களூரு உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.

    மனுவில், "பரப்பன அக்ரஹாரா சிறையில் தனக்கு சிறப்பு சொகுசு வசதி அளிக்கப்படுவதாக ஐ.பி.எஸ். அதிகாரி டி.ரூபா குற்றம் சாட்டியிருந்தார்.

    அதன்பிறகு, அரசு உத்தரவுப்படி, ஐ.ஏ.எஸ். அதிகாரி வினய்குமார் தலைமையிலான குழு விசாரணை நடத்தி, 2017 அக்டோபர் 21-ந் தேதி அளித்த அறிக்கையை, 2018 பிப்ரவரி 26-ந் தேதி மாநில அரசு ஏற்றுக்கொண்டது. இந்த அறிக்கையில், ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் அவர் மீது பதிவு செய்யப்பட்ட வழக்குக்கு ஆதாரம் எதுவும் கிடைக்கவில்லை." என கூறப்பட்டிருந்தது.

    இந்த மனு, நீதிபதி நாகபிரசன்னா முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுவுக்கு பதிலளிக்க, கர்நாடக லோக் ஆயுக்தா போலீசாருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு, விசாரணையை வரும் 28-ந் தேதிக்கு ஒத்திவைத்தார்.

    • ஆ.ராசா உள்ளிட்ட 5 பேரும் சிறப்பு நீதிமன்றத்தில் இன்று நேரில் ஆஜரானார்.
    • குற்றம்சாட்டப்பட்ட காலத்தில் வருமானத்தை விட 579 சதவீதம் அதிகமாக 5 கோடியே 53 லட்சம் ரூபாய் அளவிற்கு சொத்துக்களை குவித்துள்ளதாக குற்றப்பத்திரிகையில் சி.பி.ஐ. தெரிவித்துள்ளது.

    சென்னை:

    தி.மு.க.வை சேர்ந்த முன்னாள் மத்திய மந்திரியும், தற்போதைய நீலகிரி பாராளுமன்ற உறுப்பினருமான ஆ.ராசா வருமானத்துக்கு அதிகமாக சொத்துக்களை குவித்துள்ளதாக குற்றம்சாட்டி, கடந்த 2015-ம் ஆண்டில் சி.பி.ஐ. வழக்குப்பதிவு செய்தது.

    7 ஆண்டுகள் விசாரணைக்குப்பின் ஆ.ராசா, அவரது உறவினர் பரமேஷ் குமார், நண்பர் கிருஷ்ண மூர்த்தி, சி.கிருஷ்ணமூர்த்தி, கோவை ஷெல்டர்ஸ் புரமோட்டர்ஸ் இந்தியா பிரைவேட் லிமிடெட், மங்கள்டெக் பார்க் லிமிடெட், என்.ரமேஷ், விஜய் சடரங்கனி மற்றும் சில நிறுவனங்கள் மீது கடந்த மாதம் சென்னை சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.

    அதில் குற்றம்சாட்டப்பட்ட காலத்தில் வருமானத்தை விட 579 சதவீதம் அதிகமாக 5 கோடியே 53 லட்சம் ரூபாய் அளவிற்கு சொத்துக்களை குவித்துள்ளதாக குற்றப்பத்திரிகையில் சி.பி.ஐ. தெரிவித்துள்ளது.

    சென்னை மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள எம்.பி. எம்.எல்.ஏ.க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்ட இந்த வழக்கு நீதிபதி டி.சிவகுமார் முன்பாக விசாரணைக்கு வந்தது.

    அப்போது, குற்றப்பத்திரிகையை விசாரணைக்கு ஏற்ற நீதிபதி, வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட தி.மு.க. எம்.பி. ஆ.ராசா, சி.கிருஷ்ணமூர்த்தி, கோவை ஷெல்டர்ஸ் புரமோட்டர்ஸ் இந்தியா பிரைவேட் லிமிட்டட், மங்கள் டெக் பார்க் லிமிடெட், என்.ரமேஷ், விஜய் சடரங்கனி ஆகியோர் இன்று நேரில் ஆஜராக சம்மன் அனுப்ப உத்தரவிட்டிருந்தார்.

    அதன்படி, ஆ.ராசா உள்ளிட்ட 5 பேரும் சிறப்பு நீதிமன்றத்தில் இன்று நேரில் ஆஜரானார். அவர்களுக்கு குற்றப்பத்திரிகை நகல்கள் வழங்கப்பட்டன. இதையடுத்து வழக்கு அடுத்தகட்ட விசாரணைக்காக பிப்ரவரி 8-ந் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டது.

    • பல்லப் சின்ஹா, தான் பணியில் இருந்த ஓராண்டு காலத்தில் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்தது தெரியவந்தது.
    • பல்லப் சின்ஹா தனது பதவிக்காலத்தில் வருமானத்துக்கு அதிகமாக, 10 லட்சத்து 59 ஆயிரத்து 56 ரூபாய், அதாவது 201.38 சதவீதம் அளவுக்கு சொத்து சேர்த்துள்ளார்.

    சென்னை:

    சென்னை விமான நிலையத்தில் பயணிகள், முகவர்களிடம் சுங்கத்துறை அதிகாரிகள் பலர் லஞ்சம் பெற்றது குறித்து கடந்த 2009-ம் ஆண்டு சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணை நடத்தினர். பின்னர், விமான நிலைய சுங்க பிரிவில் கண்காணிப்பாளராக பணியாற்றிய பல்லப் சின்ஹாவை சி.பி.ஐ. அதிகாரிகள் கைது செய்தனர்.

    தொடர்ந்து நடத்திய விசாரணையில் பல்லப் சின்ஹா, தான் பணியில் இருந்த ஓராண்டு காலத்தில் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்தது தெரியவந்தது. இதையடுத்து பல்லப் சின்ஹா, அவரது மனைவி ரீனா சின்ஹா ஆகியோர் மீது சி.பி.ஐ. வழக்குப்பதிவு செய்தது. ஐகோர்ட்டு உத்தரவின்படி, ரீனா சின்ஹா வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டார்.

    பல்லப் சின்ஹா மீதான வழக்கு மட்டும், சென்னை சி.பி.ஐ. கோர்ட்டில் நீதிபதி மெகபூப் அலிகான் முன்னிலையில் நடந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, 'ஊழல் என்பது நாட்டின் பொருளாதாரத்தை சிதைக்கும் என்பதால், இதுபோன்ற வழக்குகளில் கருணை காட்ட முடியாது. பல்லப் சின்ஹா தனது பதவிக்காலத்தில் வருமானத்துக்கு அதிகமாக, 10 லட்சத்து 59 ஆயிரத்து 56 ரூபாய், அதாவது 201.38 சதவீதம் அளவுக்கு சொத்து சேர்த்துள்ளார். அவர் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டுள்ளதால் அவருக்கு 4 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.25 ஆயிரம் அபராதமும் விதிக்கப்படுகிறது' என்று உத்தரவிட்டார்.

    ×