என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "லாரி-பஸ் மோதி விபத்து"
- பஸ் எதிர்பாராத விதமாக லாரியின் பின்புறத்தில் மோதியது.
- விபத்தில் பஸ்சில் வந்த சிலருக்கும் காயம் ஏற்பட்டது.
கந்தர்வகோட்டை:
புதுக்கோட்டையில் இருந்து மன்னார்குடிக்கு ஜல்லிக்கற்கள் ஏற்றிக்க்கொண்டு ஒரு லாரி புறப்பட்டு வந்தது. லாரியில் கிளீனராக மன்னார்குடியை சேர்ந்த துரைசாமி மகன் ஜீவா (வயது 24) என்பவர் இருந்தார்.
லாரி இன்று அதிகாலை 4 மணி அளவில் கந்தர்வகோட்டை தாலுகா அலுவலகம் அருகே வந்தது. அப்போது லாரியில் திடீரென பழுது ஏற்பட்டது. உடனே டிரைவர் லாரியை சாலை ஓரமாக நிறுத்தினார்.
கிளீனர் ஜீவா லாரியின் சக்கரத்தை கழட்டிக் கொண்டு இருந்தார். அப்போது திருச்செந்தூரில் இருந்து தஞ்சாவூர் சென்ற அரசு பஸ் எதிர்பாராத விதமாக லாரியின் பின்புறத்தில் மோதியது.
இதில் ஜீவா சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பலியானார். இந்த விபத்தில் பஸ்சில் வந்த சிலருக்கும் காயம் ஏற்பட்டது. தகவல் அறிந்த கந்தர்வகோட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து காயம் அடைந்த பயணிகளை மீட்டு புதுக்கோட்டை மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
விபத்தில் பலியான ஜீவா உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு புதுக்கோட்டைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து அரசு பஸ் டிரைவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- டிரைவர் படுகாயம்
- போக்குவரத்து பாதிப்பு
புதுப்பாளையம்:
திருவண்ணா மலையிலிருந்து 20-க்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றிக்கொண்டு திருப்பத்தூருக்கு அரசு பஸ் இன்று மதியம் சென்று கொண்டிருந்தது.
பெங்களூரில் இருந்து திருவண்ணாமலை நோக்கி டேங்கர் லாரி வந்து கொண்டிருந்ததாக கூறப்படுகிறது.
அப்போது மேல் செங்கம் பண்ணை அருகே பஸ்சும், லாரியும் வரும்போது எதிர்பாராத விதமாக நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இதில் டேங்கர் லாரி ஒட்டி வந்த டிரைவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. இதேபோல் பஸ்சில் பயணம் செய்த 10-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர்.
இதுகுறித்து அந்த வழியாக வந்தவர்கள் 108 ஆம்புலன்சுக்கும், மேல் செங்கம் போலீசருக்கும் தகவல் தெரிவித்தனர். விரைந்து வந்த போலீசார் போக்குவரத்தை சீர் செய்து காயம் அடைந்தவர்களை மீட்டு பொதுமக்கள் உதவியுடன் செங்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
லாரி டிரைவரை மேல் சிகிச்சைக்காக திருவண்ணா மலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அவருக்கு அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதனால் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்