search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "புனித முடியப்பர் ஆலயம்"

    • காயல்பட்டினம் கொம்புத்துறை புனித முடியப்பர் ஆலய திருவிழா கடந்த மாதம் 24-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி 11 நாட்கள் நடைபெற்றது.
    • நிறைவு நாளான நேற்று காலையில் தூத்துக்குடி மறைமாவட்ட ஆயர் ஸ்டீபன் அந்தோணி தலைமையில் திருவிழா திருப்பலி நடந்தது.

    ஆறுமுகநேரி:

    காயல்பட்டினம் கொம்புத்துறை புனித முடியப்பர் ஆலய திருவிழா கடந்த மாதம் 24-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி 11 நாட்கள் நடைபெற்றது.

    முதல் நாள் நள்ளிரவில் கிறிஸ்து பிறப்பு பெருவிழா கொண்டாடப்பட்டது. விழா நாட்களில் தினசரி ஜெபமாலை, மறையுரை, நற்கருணை ஆசீர் ஆகிய நிகழ்ச்சிகள் நடந்தன. 9-வது நாளன்று மாலையில் புரோமில்டன் தலைமையில் திருவிழா ஆராதனை நடந்தது. இதனைத் தொடர்ந்து புனித முடியப்பர் சப்பர பவனி நடைபெற்றது. 10-வது நாள் விக்டர் லோபோ தலைமையில் ஆராதனை நடந்தது.வில்லியம் சந்தானம் மறையுரை நிகழ்த்தினார்.

    கொம்புத்துறை பங்குத்தந்தை பிரதீஸ் அடிகளார், ஊர் நல கமிட்டி தலைவர் போர்தாஸ் உள்பட திரளானோர் கலந்து கொண்டனர். புனித முடியப்பர் சபையின் சார்பில் இதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

    நிறைவு நாளான நேற்று காலையில் தூத்துக்குடி மறைமாவட்ட ஆயர் ஸ்டீபன் அந்தோணி தலைமையில் திருவிழா திருப்பலி நடந்தது. இதன் தொடக்க நிகழ்ச்சியில் ஆறுமுகநேரி பங்குதந்தை அலாய்சியஸ் முன்னிலையில் ஆறுமுகநேரி இறைமக்கள் பங்கேற்றனர்.

    தொடர்ந்து சிங்கித்துறை பங்குதந்தை ஷிபாகர் தலைமையில் அப்பகுதி மக்களும் தூத்துக்குடி, ஏரல், குரும்பூர் பகுதி மக்கள் பபிஸ்டன் அடிகளார் முன்னிலையிலும், பழையகாயல் பகுதி மக்கள் வினிஸ்டன் அடிகளார் முன்னிலையிலும், புன்னக்காயல் பகுதி மக்கள் பிராங்கிளின், ஆன்றனி ஜெபஸ்டின் ஆகியோர் முன்னிலையிலும், வீரபாண்டியன்பட்டினம் பகுதி மக்கள் கிருபாகரன், பாக்கியராஜ் ஆகியோர் முன்னிலையிலும், ஆலந்தலை, அமலிநகர், ஜீவா நகர் பகுதி மக்கள் ஜெயக்குமார், வில்லியம் சந்தானம், இருதயராஜ் ஆகியோர் முன்னிலையிலும் உலக நன்மைக்காக நடைபெற்ற சிறப்பு பிரார்த்தனை நிகழ்ச்சிகளில் பங்கேற்றனர்.

    ×