என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அக்‌ஷர் படேல்"

    • கே.எல். ராகுல் மிடில் ஆர்டர் வரிசையில் களம் இறங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
    • சுழற்பந்து வீச்சில் அக்‌ஷர் படேல், குல்தீப் யாதவ் நம்பிக்கை அளிக்கும் வகையில் உள்ளனர்.

    ஒருமுறை கூட சாம்பியன் பட்டத்தை வெல்ல முடியாத நிலையில் அக்ஷர் படேலை கேப்டனாக நியமித்து டெல்லி கேப்பிட்டல்ஸ் இந்த சீசனை எதிர்கொள்கிறது.

    டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி விவரம்:-

    பேட்ஸ்மேன்கள்

    கே.எல். ராகுல், ஜேக் பிரேசர்-மெக்கர்க், கருண் நாயர், பாஃப் டு பிளிஸ்சிஸ், டொனோவன் பெரைரா, அபிஷேக் பொரேல், திரிஸ்டன் ஸ்டப்ஸ்.

    ஆல்-ரவுண்டர்கள்

    அக்சார் பட்டேல், சமீர் ரிஸ்வி, அஷுடோஷ் சர்மா, தர்ஷன் நல்கண்டே, விப்ராஜ் நிகம், அஜய் மண்டல், மண்வந்த் குமார், திரிபுரண விஜய், மாதவ் திவாரி.

    பந்து வீச்சாளர்கள்

    மிட்செல் ஸ்டார்க், டி.நடராஜன், மோகித் சர்மா, முகேஷ் குமார், துஷ்மந்தா சமீரா, குல்தீப் யாதவ்.

    தொடக்க பேட்ஸ்மேன்கள்

    கே.எல். ராகுல், மெக்கர்க், டூ பிளிஸ்சிஸ், ஸ்டப்ஸ் ஆகிய நான்கு தொடக்க பேட்ஸ்மேன்கள் உள்ளனர். கே.எல். ராகுல் மிடில் ஆர்டர் வரிசையில் களம் இறங்க ஆர்வம் காட்டுவதாக தெரிகிறது. இதனால் மெக்கர்க், டு பிளிஸ்சிஸ் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்க வாய்ப்புள்ளது. டு பிளிஸ்சிஸ் ஆர்சிபி, சிஎஸ்கே அணிகளுக்காக தொடக்க வீரராக களம் இறங்கியுள்ளார். இருவரும் வெளிநாட்டு வீரர்கள் ஒருவேளை இந்த ஜோடி சிறப்பாக விளையாட வில்லை என்றால் ஸ்டப்ஸ் களம் இறங்க வாய்ப்புள்ளது.

    மிடில் ஆர்டர் வரிசை

    மிடில் ஆர்டர் வரிசையில் கே.எல். ராகுல், பொரேல், கருண் நாயர், ஆல்ரவுண்டர் அக்சர் பட்டேல், சமீர் ரிஸ்வி, அஷுடோஸ் சர்மா உள்ளனர். ஆல்-ரவுண்டர்களில் தர்ஷன் நல்கண்டே, விப்ராஜ் நிகம், அஜய் மண்டல், மண்வந்த் குமார், திரிபுரண விஜய், மாதவ் திவாரி அனுபவம் இல்லாத வீரர்கள் இடம் பிடித்துள்ளனர்.

    தொடக்க வீரர்கள் நல்ல தொடக்கம் கொடுத்தால் கருண் நாயர், கே.எல். ராகுல் அதை மிகப்பெரிய ஸ்கோராக மாற்ற வாய்ப்புள்ளது. ஒருவேளை இரண்டு மூன்று விக்கெட்டுகள் மளமளவென இழந்துவிட்டால் அணி சவாலை எதிர்கொள்ள வாய்ப்புள்ளது.

    வேகப்பந்து வீச்சு

    மிட்செல் ஸ்டார்க், டி. நடராஜன், மோகித் சர்மா, முகேஷ் குமார், துஷ்மந்தா சமீரா ஆகிய ஐந்து முன்னணி வீரர்களை கொண்டுள்ளது.

    ஸ்டார்க், மோகித் சர்மா, டி. நடராஜன், முகேஷ் குமார் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்துவார்கள் என எதிர்பார்க்கலாம். ஆடும் லெவனில் மிட்செல் ஸ்டார்க், டி.நடராஜன், மோகித் சர்மா அல்லது முகேஷ் குமார் இடம் பிடிக்க வாய்ப்புள்ளது.

    ஒருவேளை ஸ்டார்க் விளையாட முடியவில்லை என்றால் சமீரா களம் இறங்க வாய்ப்புள்ளது. எப்படி இருந்தாலும் வேகப்பந்து வீச்சில் ஆதிக்கம் செலுத்தும் ஒரு அணியாக இருக்கலாம்.

    சுழற்பந்து வீச்சு

    அக்ஷர் படேல், குல்தீப் என இரண்டு நட்சத்திர வீரர்களை மட்டும் நம்பி களம் இறங்க வேண்டிய நிலை.

    வேகப்பந்து வீச்சு, சுழற்பந்து வீச்சில் சமநிலை பெற்ற நிலையில் இருந்தாலும், பேட்டிங்கில் எப்படி செயல்பட இருக்கிறது என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

    • அக்ஷர் படேலை டெல்லி அணியின் கேப்டனாக அணியின் நிர்வாகம் கடந்த 14-ந் தேதி அறிவித்தது.
    • கே.எல்.ராகுலை நியமிக்க டெல்லி அணி நிர்வாகம் விரும்பியது.

    புதுடெல்லி:

    18-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி வருகிற 22-ந் தேதி தொடங்குகிறது. இதற்காக அனைத்து அணி வீரர்களும் தீவிரமாக தயாராகி வருகின்றனர்.

    இந்த தொடரில் சென்னை, மும்பை, ஐதராபாத், குஜராத், ராஜஸ்தான் ஆகிய 5 அணிகளின் கேப்டன்களில் எந்த மாற்றமும் இல்லை. மீதியுள்ள கொல்கத்தா, பெங்களூரு, லக்னோ, பஞ்சாப், ஷ்ரேயாஸ், டெல்லி ஆகிய 5 அணிகளும் புதிய கேப்டன்களுடன் விளையாட உள்ளனர்.

    அதன்படி சென்னை சூப்பர் கிங்ஸ் (ருதுராஜ் கெய்க்வாட்), மும்பை இந்தியன்ஸ் (ஹர்திக் பாண்ட்யா) சன்ரைசர்ஸ் ஐதராபாத் (கம்மின்ஸ்), குஜராத் டைட்டன்ஸ் (சுப்மன்கில்), ராஜஸ்தான் ராயல்ஸ் (சஞ்சு சாம்சன்) ஆகிய 5 அணிகளின் கேப்டன்களில் மாற்றம் இல்லை.

    மற்ற 5 அணிகளில் நடப்பு சாம்பியனான கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணிக்கு ரகானேவும், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு ரஜத் படிதாரும், லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிக்கு ரிஷப்பண்ட்டும், பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு ஷ்ரேயாஸ் ஐயரும், டெல்லி அணிக்கு அக்ஷர் படேலும் புதிய கேப்டன்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.

    9 அணிகள் ஏற்கனவே அறிவித்து விட்ட நிலையில் டெல்லி கேப்பிடல்ஸ் அணி 14-ந் தேதி தான் கேப்டனை அறிவித்தது. டெல்லி அணியில் கே.எல்.ராகுல், அக்ஷர் படேல், தென் ஆப்பிரிக்காவை சேர்ந்த டுபெலிசிஸ் ஆகிய 3 பேரின் பெயர்கள் கேப்டனுக்கான தேர்வில் இருந்தது.

    இதில் கே.எல்.ராகுலை நியமிக்க டெல்லி அணி நிர்வாகம் விரும்பியது. ஆனால் அவர் அதை நிராகரித்தார். இதனால் அக்ஷர் படேலை டெல்லி அணியின் கேப்டனாக அணியின் நிர்வாகம் அறிவித்தது. துணை கேப்டன் யார் என்பது குறித்து எந்த தகவலையும் அறிவிக்கவில்லை.

    இந்த நிலையில் தென் ஆப்பிரிக்காவை சேர்ந்த பாப் டு பிளெசிஸ் டெல்லி அணியின் துணை கேப்டனாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    • நான் கேப்பிட்டல்ஸ் அணிக்காக விளயாடிய காலத்தில் ஒரு முழுமையான கிரிக்கெட் வீரராக வளர்ந்துள்ளேன்.
    • டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் கேப்டனாக இருப்பது எனக்கு மிகவும் பெருமையான தருணம்.

    புதுடெல்லி:

    18-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி தொடங்க இன்னும் சில தினங்களே உள்ள நிலையில் டெல்லி கேப்பிடல்ஸ் அணி மட்டுமே இன்னும் கேப்டனை அறிவிக்காமல் இருந்தது.

    இந்த சூழ்நிலையில் அக்ஷர் படேலை டெல்லி அணியின் கேப்டனாக அணியின் நிர்வாகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

    இந்நிலையில் கேப்பிட்டல்ஸ் அணியை முன்னோக்கி வழிநடத்த நான் தயாராக உள்ளேன் என டெல்லி அணியின் புதிய கேப்டன் அக்ஷர் படேல் கூறியுள்ளார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் கேப்டனாக இருப்பது எனக்கு மிகவும் பெருமையான தருணம். என் மீது நம்பிக்கை வைத்த எங்கள் உரிமையாளர்கள் மற்றும் ஆதரவு ஊழியர்களுக்கு நான் மிகவும் நன்றியுள்ளவனாக இருக்கிறேன். நான் கேப்பிட்டல்ஸ் அணிக்காக விளையாடிய காலத்தில் ஒரு முழுமையான கிரிக்கெட் வீரராக வளர்ந்துள்ளேன். மேலும் இந்த அணியை முன்னோக்கி வழிநடத்த நான் தயாராகவும் நம்பிக்கையுடன் உள்ளேன்.

    எங்கள் பயிற்சியாளர்களும் அணி ஊழியர்களும் மிகப்பெரிய ஆற்றலைக் கொண்ட ஒரு சமநிலையான மற்றும் வலுவான அணியை ஒன்றிணைப்பதன் மூலம் மெகா ஏலத்தில் சிறப்பாகச் செயல்பட்டுள்ளனர். எங்கள் குழுவில் ஏராளமான தலைவர்கள் உள்ளனர். இது எனக்கு மிகவும் உதவியாக இருக்கிறது. மேலும் எங்கள் ரசிகர்களின் மகத்தான அன்பு மற்றும் ஆதரவுடன், கேப்பிட்டல்ஸ் அணிக்கு மிகவும் வெற்றிகரமான சீசனை எதிர்நோக்குவதால், அணியில் சேர நான் ஆவலுடன் காத்திருக்கிறேன்.

    என்று அக்ஷர் படேல் கூறினார்.

    • அக்‌ஷர் படேல் 2019-ம் ஆண்டில் இருந்து டெல்லி கேப்பிடல்ஸ் அணியில் விளையாடி வருகிறார்.
    • ரூ.18 கோடிக்கு அக்‌ஷர் படேல் தக்க வைக்கப்பட்டுள்ளார்.

    புதுடெல்லி:

    18-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி தொடங்க இன்னும் சில தினங்களே உள்ள நிலையில் டெல்லி கேப்பிடல்ஸ் அணி மட்டுமே இன்னும் கேப்டனை அறிவிக்காமல் இருந்தது.

    சென்னை சூப்பர் கிங்ஸ் (ருதுராஜ் கெய்க்வாட்), மும்பை இந்தியன்ஸ் (ஹர்திக் பாண்ட்யா) சன்ரைசர்ஸ் ஐதராபாத் (கம்மின்ஸ்), குஜராத் டைட்டன்ஸ் (சுப்மன்கில்), ராஜஸ்தான் ராயல்ஸ் (சஞ்சு சாம்சன்) ஆகிய 5 அணிகளின் கேப்டன்கள் மாற்றம் இல்லை.

    நடப்பு சாம்பியனான கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணிக்கு ரகானேவும் (கடந்த சீசன் ஷ்ரேயாஸ் ஐயர்), ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு ரஜத் படிதாரும் (டுபெலிஸ்), லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிக்கு ரிஷப்பண்ட்டும் (கே.எல்.ராகுல்), பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு ஷ்ரேயாஸ் ஐயரும் (ஷிகர் தவான்) புதிய கேப்டன்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.

    டெல்லி கேப்பிடல்ஸ் அணியில் கே.எல்.ராகுல், அக்ஷர் படேல், தென் ஆப்பிரிக்காவை சேர்ந்த டுபெலிசிஸ் ஆகிய 3 பேரின் பெயர்கள் கேப்டனுக்கான தேர்வில் இருந்தது. இதில் கே.எல்.ராகுலை நியமிக்க டெல்லி அணி நிர்வாகம் விரும்பியது. ஆனால் அவர் அதை நிராகரித்தார். மேலும் அவர் தொடக்கத்தில் சில போட்டிகளை தனிப்பட்ட காரணங்களுக்காக தவற விடுகிறார்.

    இந்நிலையில் அக்ஷர் படேலை டெல்லி அணியின் கேப்டனாக அணியின் நிர்வாகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

    அக்ஷர் படேல் 2019-ம் ஆண்டில் இருந்து டெல்லி கேப்பிடல்ஸ் அணியில் விளையாடி வருகிறார். அவர் ரூ.18 கோடிக்கு தக்க வைக்கப்பட்டுள்ளார். அக்ஷர் படேல் ஐ.பி.எல்.லில் 150 ஆட்டத்தில் விளையாடி 1653 ரன்கள் எடுத்துள்ளார். 123 விக்கெட் வீழ்த்தி உள்ளார். கடந்த சீசனில் டெல்லி அணிக்கு ரிஷப் பண்ட் கேப்டனாக செயல்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • தீபக் ஹூடா 23 பந்துகளில் ஒரு பவுண்டரி மற்றும் 4 சிக்ஸர்களுடன் 41 ரன்களை குவித்தார்.
    • அக்‌ஷர் பட்டேல் 20 பந்துகளில் 3 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸருடன் 31 ரன்களை விளாசினார்.

    மும்பை:

    இந்தியா - இலங்கை அணிகள் மோதிய முதல் டி20 போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் நேற்று நடைபெற்றது. முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 20 ஓவர்களில் 162 ரன்களை மட்டுமே எடுத்தது. இதன் பின்னர் ஆடிய இலங்கை அணி அடுத்தடுத்து விக்கெட்களை இழந்து 20 ஓவர்களில் 160 ரன்களை மட்டுமே எடுத்து ஆல் அவுட்டானது.

    இந்த போட்டியில் 94 ரன்களுக்கெல்லாம் 5 விக்கெட்களை இழந்து இந்திய அணி தடுமாறியது. அந்த நிலையில் ஜோடி சேர்ந்த தீபக் ஹூடா மற்றும் அக்ஷர் படேல் 6-வது விக்கெட்டிற்கு 68 ரன்கள் பார்ட்னர்ஷிப்பை அமைத்தனர்.

    சிறப்பாக விளையாடிய தீபக் ஹூடா 23 பந்துகளில் ஒரு பவுண்டரி மற்றும் 4 சிக்ஸர்களுடன் 41 ரன்களை குவித்தார். மறுமுணையில் அக்ஷர் பட்டேல் 20 பந்துகளில் 3 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸருடன் 31 ரன்களை விளாசினார். இதனால் தான் இந்திய அணி 162 என்ற சவால் கொடுக்கும் ஸ்கோரை எட்ட முடிந்தது.


    இந்நிலையில் டி20 கிரிக்கெட்டில் 6-வது விக்கெட்டிற்கு அதிக ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தவர்கள் பட்டியலில் டோனி - யூசப் பதான் ஆகியோர் 2-வது இடத்தில் இருந்தனர். இவர்கள் 2009- ம் ஆண்டு இங்கிலாந்துக்கு எதிராக 63 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். தற்போது அக்ஷர் - ஹூடா ஜோடி 68 ரன்கள் பார்ட்னர்ஷிப்புடன் அதனை முந்தி 2-வது இடத்தை பிடித்துள்ளனர்.

    இந்த பட்டியலில் விராட் கோலி - ஹர்திக் பாண்ட்யா ஜோடி முதலிடத்தில் இருக்கிறார்கள். இவர்கள் கடந்த 2021-ம் ஆண்டு நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்ற இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் 6-வது விக்கெட்டிற்கு 70 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். இவர்கள் இன்றும் இந்திய அணியின் சிறந்த பேட்டிங் ஜோடியாக பார்க்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

    • கடந்த ஆண்டு அக்‌ஷர் படேலின் 29-வது பிறந்தநாளன்று இருவரும் நிச்சயதார்த்தம் செய்து கொண்டனர்.
    • இந்த திருமண நிகழ்ச்சியில் நெருங்கிய உறவினர்கள், குடும்ப நண்பர்கள் மட்டுமே கலந்து கொண்டனர்.

    இடது கை பேட்ஸ்மேன் மற்றும் இடது கை சுழற்பந்து வீச்சாளரான அக்ஷர் படேலும், அவரது தோழியுமான மேகா இருவரும் நீண்ட நாட்களாக காதலித்து வந்துள்ளனர்.

    இதையடுத்து கடந்த ஆண்டு அக்ஷர் படேலின் 29-வது பிறந்தநாளன்று இருவரும் நிச்சயதார்த்தம் செய்து கொண்டனர். இதைத் தொடர்ந்து நேற்று இரவு குஜராத் மாநிலம் வதோதராவில் வைத்து அக்ஷர் படேல் மற்றும் மேகாவிற்கும் திருமணம் நடந்துள்ளது.

    இந்த திருமண நிகழ்ச்சியில் நெருங்கிய உறவினர்கள், குடும்ப நண்பர்கள் மட்டுமே கலந்து கொண்டனர். திருமண நிகழ்ச்சியின் போது அக்ஷர் படேல் மேடையில் டான்ஸ் ஆடிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.


    கடந்த 2014-ம் ஆண்டு ஜூன் 15-ம் தேதி வங்கதேசத்திற்கு எதிரான ஒரு நாள் போட்டியின் மூலம் ஒரு நாள் கிரிக்கெட்டில் அறிமுகமானார். அதன் பிறகு கடந்த 2015-ம் ஆண்டு ஜூலை 17-ம் தேதி ஜிம்பாப்வே அணிக்கு எதிரான டி20 போட்டியின் மூலம் டி20 தொடரில் அறிமுகமானார்.

    இதைத் தொடர்ந்து கடந்த 2021-ம் ஆண்டு பிப்ரவரி 13 ஆம் தேதி இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் மூலம் டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுகமானார்.

    இதுதவிர, ஐபிஎல் சீசன்களில் மும்பை இந்தியன்ஸ், கிங்ஸ் லெவன் பஞ்சாப், குஜராத் லயன்ஸ், டெல்லி கேபிடல்ஸ் ஆகிய அணிகளுக்காக விளையாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • ரிஷப் பண்ட் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் டெல்லி - டேராடூன் நெடுஞ்சாலையில் நடந்த கார் விபத்தில் படுகாயமடைந்தார்.
    • உலகக் கோப்பைக்கான 15 பேர் கொண்ட இந்திய அணியில் சுழற்பந்து வீச்சாளர் அக்சர் பட்டேல் இடம் பெற்று இருந்தார்.

    உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெற்று வரும் நிலையில் இந்திய அணி வீரர்கள் ரிஷப் பண்ட் மற்றும் அக்ஷர் படேல் இன்று திருப்பதியில் சுவாமி தரிசனம் செய்தனர். தரிசனம் முடிந்த நிலையில் வெளியே வந்தனர். இதனை பார்த்த ரசிகர்கள் அவர்களிடம் செல்பி எடுத்தனர். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் ரிஷப் பண்ட் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் டெல்லி - டேராடூன் நெடுஞ்சாலையில் நடந்த கார் விபத்தில் படுகாயமடைந்தார். இதனால், ஐபிஎல், ஆசிய கோப்பை மற்றும் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் விளையாடவில்லை. அவர் தற்போது குணமடைந்து வருகிறார்.

    உலகக்கோப்பைக்கான 15 பேர் கொண்ட இந்திய அணியில் சுழற்பந்து வீச்சாளர் அக்சர் பட்டேல் இடம் பெற்று இருந்தார். ஆனால் அவர் காயம் அடைந்ததையடுத்து அணியில் இருந்து நீக்கப்பட்டார். அக்சர் பட்டேலுக்கு பதில் சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் சேர்க்கப்பட்டார்.

    • லக்னோ அணியின் முன்னாள் கேப்டனான கே.எல். ராகுலை ரூ.14 கோடிக்கு டெல்லி கேப்பிடல்ஸ் அணி வாங்கியது.
    • டெல்லி அணியின் புதிய கேப்டனாக கே.எல். ராகுல் நியமிக்கப்படுவார் என்று அனைவரும் எதிர்பார்த்தனர்.

    புதுடெல்லி:

    இந்தியாவில் நடைபெறும் உள்ளூர் டி20 தொடரான ஐ.பி.எல்.-ன் 18-வது சீசன் இந்த வருடம் மார்ச் 21-ம் தேதி தொடங்க உள்ளது.10 அணிகள் கலந்து கொள்ளும் இந்த தொடருக்கான வீரர்களின் மெகா ஏலம் சவுதி அரேபியாவின் ஜெட்டா நகரில் கடந்த ஆண்டு நடைபெற்றது.

    இந்த ஏலத்தில் லக்னோ அணியின் முன்னாள் கேப்டனான கே.எல். ராகுலை ரூ.14 கோடிக்கு டெல்லி கேப்பிடல்ஸ் அணி வாங்கியது. டெல்லி அணியின் கேப்டன் ரிஷப் பண்டை லக்னோ அணி ரூ.27 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது. இதனால் டெல்லி அணியின் புதிய கேப்டனாக கே.எல். ராகுல் நியமிக்கப்படுவார் என்று அனைவரும் எதிர்பார்த்தனர்.


    இந்நிலையில் டெல்லி அணியின் புதிய கேப்டனாக அக்சர் படேல் நியமிக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அக்சர் படேல் இந்திய டி20 அணியின் துணை கேப்டனாக சமீபத்தில் நியமிக்கப்பட்டார். அதனை கருத்தில் கொண்டே டெல்லி அணி நிர்வாகம் இந்த முடிவை எடுத்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

    ×