என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சுசீந்திரம் தாணுமாலயன்சாமி கோவில்"

    • 5-ம் திருநாளில் கருட தரிசனம் விமரிசையாக நடந்தது.
    • மார்கழி திருவிழா கடந்த 28-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    நாகர்கோவில்:

    சுசீந்திரம் தாணுமாலயன் சுவாமி கோவிலில் மார்கழி திருவிழா கடந்த 28-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    விழாவையொட்டி தினமும் காலை, மாலை வேளைகளில் சுவாமி, அம்பாள் வீதி உலா நடைபெற்று வருகிறது. 3-ம் திருவிழா நாளில் இரவு கோட்டார் வலம்புரி விநாயகர், மருங்கூர் சுப்பிர மணிய சுவாமி, வேளிமலை குமாரசுவாமி ஆகியோர் சுசீந்திரம் கோவிலுக்கு வந்ததும் மக்கள்மார் சந்திப்பு நிகழ்ச்சி நடந்தது.

    5-ம் திருநாளில் கருட தரிசனம் விமரிசையாக நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். 7-ம் திருநாளான நேற்று இரவு கைலாச பர்வதம் வாகனத்தில் சுவாமி திருவீதி உலா நடந்தது. இன்று காலை சிதம்பரேஸ்வரர் திருவீதி உலா நடந்தது.

    9-ம் திருவிழா நாளான நாளை (5-ந் தேதி) தேரோட்டம் நடக்கிறது. இதையொட்டி அதிகாலை 4 மணிக்கு கங்காளநாதர், பிட்சாடனராக திருவீதி உலா செல்கிறார். தொடர்ந்து காலை 8 மணிக்கு மேல் சுவாமி, அம்பாள் மற்றும் விநாயகர் தேர்கள் இழுக்கப் படுகின்றன.

    முன்னதாக 3 சாமிகளும் சிறப்பு அலங்காரத்துடன் தேர்களுக்கு எழுந்தருளு கின்றனர்.தொடர்ந்து தீபா ராதனை நடைபெற்றதும் தேர்கள் இழுக்கப்படு கின்றன. மாலையில் மண்டகப்படிக்கு தங்க பல்லக்கில் சுவாமி எழுந்தரு ளுகிறார்.

    இரவு 12 மணிக்கு கோட்டார் வலம்புரி விநாயகர், மருங்கூர் சுப்பிர மணிய சுவாமி, வேளிமலை குமாரசுவாமி ஆகியோர் விடைபெறும் சப்தாவர்ண நிகழ்ச்சி நடக்கிறது. 10-ம் நாள் நிறைவு விழாவில் காலை 10 மணிக்கு ஆரூத்ரா தரிசனம், அஷ்டாபிஷேகம் நடக்கிறது. மாலையில் நடராஜர் வீதி உலா, இரவில் ஆராட்டு போன்றவை நடக்கிறது.

    • சிலை உச்சி முதல் பாதம் வரை எந்தவித பிடிமானமும் இல்லாமல் நிற்கிறது.
    • தற்போது 18 அடி உயர சிலையை மட்டுமே வெளியே தெரியும். மீதியுள்ள 4 அடி பூமிக்குள் இருக்கிறது.

    சில நூற்றாண்டுகளுக்கு முன்பு சிலர் கன்னியாகுமரி மாவட்டம் சுசீந்திரம் பகுதிக்கு படையெடுத்து வந்தனர். அப்போது சுசீந்திரம் தாணுமாலயன் கோவிலின் மூலஸ்தானத்தை சுவர் கட்டியும், நகை-உடைமைகளை வேறு இடத்திற்கு மாற்றியும் அப்பகுதியினர் பாதுகாத்தனர். இதனால் கோவில் சொத்துக்கள் பறிபோகாமல் காப்பாற்றப்பட்டது.

    அப்படி பாதுகாக்கப்பட்டவற்றில் ஒன்று, இன்றும் இவ்வாலயத்தில் கம்பீரமாக நிற்கும் 22 அடி உயர அஞ்சலி ஹஸ்த அனுமனின் சிலை.

    ஒரே கல்லில் செதுக்கப்பட்ட இந்த அனுமன் சிலையை, படையெடுப்பாளர்களிடம் இருந்து காப்பதற்காக, கோவில் கிணற்றின் அருகில் 23 அடி நீளத்தில் பூமியைத் தோண்டி, சிலை மண்ணுக்குள் இருக்கும் விதமாக குப்புற படுக்க வைத்தனர். மேலோட்டமாக பார்ப்பதற்கு சாதாரண கற்தூணின் மேல் பாகம் போல்தான் அது தெரியும்.


    பல காலம் நடந்த படையெடுப்பால் அந்த சிலையை யாரும் மண்ணில் இருந்து வெளியே எடுக்கவில்லை. காலப்போக்கில் அந்த அனுமன் சிலை மண்ணிலேயே புதைந்து கிடந்தது.

    கோவிலுக்கு வரும் பக்தர்கள் அதன்மேல் அமர்ந்து இளைப்பாறுவதும், சிறுவர்கள் அதன் மீது ஏறி விளையாடுவதுமாக காலம் கடந்தது.

    85 ஆண்டுகள் மண்ணில் புதையுண்டிருந்த நிலையில், ஒரு தெய்வீக சக்தி இருப்பதை உணர்ந்த கோவில் நிர்வாகிகள், அதுதொடர்பாக பிரசன்னம் பார்த்த போது, அந்த இடத்தில் ஆஞ்சநேயர் சிலை இருப்பது தெரியவந்தது.

    உடனடியாக அந்த இடம் தோண்டப்பட்டு, விஸ்வரூப அனுமன் சிலை வெளியே எடுக்கப்பட்டது.


    பின்னர் அந்த சிலையை நிறுவ இடம் தேர்வு நடந்தது. அதன்படி 1930-ம் ஆண்டு சித்திரை 19-ந் தேதி, கோவிலில் உள்ள ஸ்ரீராமர்- சீதாதேவி சன்னிதிக்கு எதிரில் இந்த ஆஞ்சநேயர் சிலை நிறுவப்பட்டது.

    ஆகம விதிகளின்படி அஷ்டபந்தனம் செய்து பிரதிஷ்டை செய்யாததால், யார் வேண்டுமானாலும் இந்த அனுமனை தொட்டு வணங்கலாம்.

    22 அடி நீளம் கொண்ட ஆஞ்சநேயர் சிலையில், தற்போது நாம் காண்பது 18 அடி உயர சிலையை மட்டுமே. மீதியுள்ள 4 அடி பூமிக்குள் பதிந்து வைக்கப்பட்டுள்ளது. இந்த சிலை உச்சி முதல் பாதம் வரை எந்தவித பிடிமானமும் இல்லாமல் நிற்கிறது.

    ×