search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பஞ்சாலை"

    • ராஜபாளையத்தில் தமிழ் மாநில பஞ்சாலை தொழிலாளர் சம்மேளத்தின் மாநில குழு கூட்டம் தலைவர் சந்திரன் தலைமையில் நடந்தது.
    • பொதுச் செயலாளர் அசோகன் முன்னிலை வகித்தார். பொருளாளர் சக்திவேல் வரவேற்றார்.

    ராஜபாளையம்

    விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் தமிழ் மாநில பஞ்சாலை தொழிலாளர் சம்மேளத்தின் மாநில குழு கூட்டம் தலைவர் சந்திரன் தலைமையில் நடந்தது. பொதுச் செயலாளர் அசோகன் முன்னிலை வகித்தார். பொருளாளர் சக்திவேல் வரவேற்றார்.

    அரசு உத்தரவின்படி அனைத்து பஞ்சாலை தொழிலாளர்களுக்கும் ஆரம்பகால முதல் தினக்கூலியாக ரூ.493- வழங்க வேண்டும், 25 ஆண்டு காலமாக பஞ்சாலை தொழிலாளர்களுக்கு கூலி உயர்வு வழங்கப்படாத நிலையில் உடனடியாக கூலி உயர்வு வழங்க வேண்டும், குடும்ப ஓய்வூதியம் மாதந்தோறும் ரூ.9 ஆயிரம் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் தீர்மானமாக நிறைவேற்றி தமிழக அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. பல்வேறு மாவட்டங்களில் இருந்து கலந்து கொண்ட பிரதிநிதிகள் கோரிக்கைகள் குறித்து பேசினர். மாநிலத் துணைத் தலைவர் கணேசன் நன்றி கூறினார்.

    ×