என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "பொங்கல் பரிசுத்தொகுப்பு"
- தேனி மாவட்டத்தில் பொங்கல் பரிசு தொகுப்பினை அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கி தொடங்கி வைத்தார்.
- பெரியகுளம் கூட்டுறவு பண்டகசாலைக்குட்பட்ட 57 ரேசன்கடைகளில் கலெக்டர் ஆய்வு மேற்கொண்டார்.
பெரியகுளம்:
தேனி மாவட்டத்தில் கலெக்டர் முரளிதரன் தேனி – அல்லிநகரம் நகராட்சிக்குட்பட்ட தேனி வேளாண் விளைபொருள் உற்பத்தியாளர் கூட்டுறவு விற்பனைச் சங்கத்தில் நடைபெற்ற நிகழ்வில், தலா 1 கிலோ பச்சரிசி 1 கிலோ சர்க்கரை, முழு கரும்பு ஒன்று மற்றும் ரூபாய் 1000 ரொக்கம் அடங்கிய பொங்கல் பரிசு தொகு ப்பினை அரிசி குடும்ப அட்டைதாரர்க ளுக்கு வழங்கி தொடங்கி வைத்தார்.
தேனி மாவட்டத்தில் ஆண்டிபட்டி வட்டத்தி ற்குட்பட்ட 79,781 குடும்ப அட்டைதாரர்களுக்கும், போடிநாயக்கனூர் வட்டத்திற்குட்பட்ட 64,299 குடும்ப அட்டைதாரர்களு க்கும், பெரியகுளம் வட்டத்தி ற்குட்பட்ட 71,820 குடும்ப அட்டைதாரர்களுக்கும், தேனி வட்டத்திற்குட்பட்ட 65,392 குடும்ப அட்டை தாரர்களுக்கும், உத்தம பாளையம் வட்டத்தி ற்குட்பட்ட 1,45,580 குடும்ப அட்டைதாரர்க ளுக்கும் என மொத்தம் 4,26,872 குடும்ப அட்டைதாரர்க ளுக்கு பொங்கல் பரிசு தொகுப்பாக குடும்ப அட்டைதாரருக்கு தலா 1 கிலோ பச்சரிசி அரிசி 1 கிலோ சக்கரை, முழு கரும்பு ஒன்று மற்றும் ரூபாய் 1000 ரொக்கம் அடங்கிய பொங்கல் பரிசுத்தொகுப்பு வழங்கப்படவுள்ளது.
இப்பரிசுத்தொகு ப்பினை குடும்ப அட்டை தாரர்கள் வருகிற 12-ந்தேதி வரை குடும்ப அட்டை தாரர்களுக்கு வழங்க ப்பட்டுள்ள டோக்கன் குறிப்பிட ப்பட்டுள்ள நாளில் நியாய விலைக்கடை யில் பெற்றுக் கொள்ளலாம். டோக்கனில் குறிப்பிட்ட நாளில் பெற இயலாதவர்கள் 13.01.2023 அன்று பெற்றுக் கொள்ளும் பொருட்டு, நியாய விலைக்கடை செயல்பட உத்தரவிடப்பட்டு ள்ளது.
இந்நிகழ்வின் போது, கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் ஆரோக்கியசுகுமார், துணைப்பதிவாளர் (பெரியகுளம்) ராஜாங்கம், துணைப்பதிவாளர் (பொது விநியோகத்திட்டம்) சேகர், தேனி-அல்லிநகரம் நகராட்சி நகர்மன்ற த்தலைவர்ரேணுப்பிரியா, தேனி ஊராட்சி ஒன்றியக்குழுத்தலைவர்சக்கரவர்த்தி, நகர்மன்ற துணைத்தலைவர் செல்லம், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதி கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
பெரி யகுளம் கூட்டுறவு பண்டகசாலைக்குட்பட்ட 57 ரேசன்கடைகளில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் பணி நேற்று தொடங்கியது. அப்போது 4 ரேசன் கடைகளில் தரமற்ற பொருட்கள் வழங்கப்படுவ தாக புகார் எழுந்தது. இதனைதொடர்ந்து அந்த கடைகளுக்கு நேரடியாக வந்த மாவட்ட கலெக்டர் முரளிதரன் பொருட்களை தரமாக வழங்க உத்தர விட்டார். இந்த ஆய்வின் போது வட்டவழங்கல் அலுவலர், பெரியகுளம் தாசில்தார் உள்பட அதிகாரி கள் கலந்து கொண்டனர்.
- வீடு வீடாக சென்று டோக்கன் வழங்கும் பணிகள் இன்று தொடங்கி நடைபெற்று வருகிறது.
- அரி சியின் தரத்தினை மாவட்ட கலெக்டர் மோகன் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
விழுப்புரம்:
விழுப்புரம் நகராட்சிக்கு ட்பட்ட தனலட்சுமி கார்டன் உள்ளிட்ட பகுதிகளில் 15-ந்தேதி பொங்கல் திருநாளை முன்னிட்டு குடும்ப அட்டை தாரர்களுக்கு பொங்கல் பரிசுத்தொகுப்பான ரூ.1000, 1 கிலோ பச்சரிசி மற்றும் சர்க்கரை, 1 முழு நீள கரும்பினை வழங்கிட ஏதுவாக வீடு வீடாக சென்று டோக்கன் வழங்கும் பணிகள் இன்று தொடங்கி நடைபெற்று வருகிறது. இதனையடுத்து மாவட்ட கலெக்டர் மோகன் அங்கு சென்று டோக்கன் பணியை ஆய்வு செய்தார். இதுகுறித்து மாவட்ட கலெக்டர் கூறுகையில்:-
தமிழ்நாடு முதல்-அமைச்சர் தமிழர் திருநா ளாம் பொங்கல் திருநாளை அனைத்து தரப்பு மக்களும் சிறப்பாக கொண்டாடிடும் பொருட்டு ரேசன் கடைகள் மூலமாக குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.1000, 1 கிலோ பச்சரிசி மற்றும் சர்க்கரை, 1 முழு நீள கரும்பு வழங்கப்படும் எனவும் கிராமப்புற ரேசன் கடைகளின் மூலம் நாள் ஒன்றுக்கு 200 டோக்கன்களுக்கும் நகர்புற ரேசன் கடைகளின் மூலம் 300 டோக்கன்கள் நியாயவிலை கடை விற்பனையாளர்கள் மூலம் 3-ந் தேதி முதல் 8-ந்தேதி வரை வீடு வீடாக சென்று ரேசன் கடை விற்பனையாளர்கள் டோக்கன் வழங்கிடவும் 9.01.2023 முதல் பொங்கல் பரிசு தொகுப்பினை வழங்கிட வேண்டும் என உத்தரவிட்டார்.
இந்நிலையில் விழுப்புரம் மாவட்டத்தில் 6,15,020 குடும்ப அட்டைத்தாரர்கள் 434 இலங்கை தமிழர் முகாம்களில் வசிப்பவர்கள் என மொத்தம் 6,15,454 குடும்ப அட்டை தாரர்களுக்கு கூட்டுறவுத்துறையின் கீழ் இயங்கும் 982 முழுநேர ரேசன் கடைகள் 245 பகுதி நேர கடைகள் மகளிர் சுயதஉவிக்குழுவின் மூலம் இயங்கும் 27 முழுநேர கடைகள் என மொத்தம் 1,254 ரேசன் கடைகள் மூலம் பொங்கல்பரிசு தொகுப்பு வழங்குகின்றனர். மேலும் டோக்கன் வழங்கும் பணியினை கண்காணிக்கும் வகையில் அலுவலர்கள் நியமிக்கப்பட்டு தொடர் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும் ஒவ்வொரு நாளும் டோக்கன் வழங்கிய விவரத்தினை கூட்டுறவு த்துறை அலுவலருக்கு தெரிவி த்திடவும் உத்தர விட்டுள்ளார். எனவே குடும்ப அட்டை தாரர்கள் டோக்கனில் குறிப்பி டப்பட்டநாள் மற்றும் நேரத்தில் வந்து பொங்கல் பரிசு தொகுப்பினை கொரோனா வழிகாட்டி நெறிமுறைகளை பின்பற்றி முக கவசம் அணிந்து சமூக இடைவெளியிட்டு குடும்ப அட்டையில் உள்ள குடும்ப உறுப்பினர்களில் யாரேனும் ஒருவர் வந்து பொங்கல் பரிசு தொகுப்பினை பெற்று கொள்ளலாம் என மாவட்ட கலெக்டர் மோகன் தெரிவித்துள்ளார்.
இதன் பின்னர் தனல ட்சுமி கார்டன் ரங்கநாதன் பகுதியில் உள்ள ரேசன் கடையில் பொங்கல் திரு நாளை முன்னிட்டு குடும்ப அட்டை தாரர்களுக்கு பொங்கல் பரிசுத்தொ குப்பில் வழங்கப்படவுள்ள அரி சியின் தரத்தினை மாவட்ட கலெக்டர் மோகன் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இதில் கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைபதிவாளர் யசோதா தேவி, விழுப்புரம் வருவாய் கோட்டாட்சியர் ரவிச்சந்திரன், மாவட்ட வழங்கல் அலுவலர் மகா ராணி உள்பட பலர் பங்கேற்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்