search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Woman killed in car collision கார் மோதி பெண் பலி"

    • சொகுசு காரில் மதுரையில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்று விட்டு, கர்நாடக மாநிலம், பெங்களூரில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்று கொண்டு இருந்தனர்.
    • இந்த விபத்தில் காரில் வந்த ஜெயந்தி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

    பரமத்திவேலூர்:

    மதுரை அருகே திருப்பாலை பகுதியைச் சேர்ந்தவர் வைத்தியலிங்கம் (வயது 60). இவரது மனைவி ஜெயந்தி (55). இவரது மகள் சரண்யா(36) மற்றும் வைத்தியலிங்கத்தின் அக்கா செண்பகம் (72). இவர்கள் அனைவரும் அமெரிக்காவில் வசித்து வருகின்றனர்.

    சொகுசு காரில்

    தற்போது இந்தியா வந்துள்ள இவர்கள், நேற்று சொகுசு காரில் மதுரையில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்று விட்டு, கர்நாடக மாநிலம், பெங்களூரில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்று கொண்டு இருந்தனர்.

    நாமக்கல் மாவட்டம் பரமத்தி அருகே சென்று கொண்டிருந்தபோது, கரூர்- நாமக்கல் பை-பாஸ் சாலையின் சென்டர் மீடியனில் உள்ள செடிகளுக்கு தண்ணீர் விட்டுக் கொண்டிருந்த, தண்ணீர் டேங்க் லாரியின் பின்னால் எதிர்பாராத விதமாக கார் மோதியது. இதில் காரின் முன்பக்கம் அப்பளம் போல் நொறுங்கியது.

    பெண் பலி

    இந்த விபத்தில் காரில் வந்த ஜெயந்தி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். படுகாயம் அடைந்த செண்பகம், வைத்தியலிங்கம், அவரது மகள் சரண்யா மற்றும் கார் டிரைவரான திண்டிவனத்தை சேர்ந்த செல்வக்குமார் (28) ஆகிய 4 பேரையும், அந்த பகுதியை சேர்ந்தவர்கள் மீட்டு, நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சம்பவம் குறித்து பரமத்தி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விபத்து காரணமாக கரூரில் இருந்து நாமக்கல் செல்லும் பைபாஸ் சாலையில் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

    ×