search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கன்னியாகுமரி கலெக்டர்"

    • பொது தேர்வில் அதிகம் மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.
    • மருத்துவக் கல்லூரி துணை இயக்குனர் சுதாலட்சுமி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் சமூக வலைத்தளத்தில் கூறியிருப்பதாவது:-


    மதுரையில் நடைபெற்ற மதுரை வாழ் குமரி மாவட்ட மக்கள் நலப்பேரவையின் 20 வது ஆண்டு விழா நிகழ்ச்சியில் கலந்து கொண்டு விழா மலரை வெளியிட்டு சிறப்புரையாற்றினேன்.

    மேலும் பொது தேர்வில் அதிகம் மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கி பாராட்டினேன்.

    இந்த விழாவில் பேரவை பொதுச் செயலாளர் ஜான் ஸ்டீபன், உயர் நீதிமன்ற வழக்கறிஞர் தாயுமானசாமி, பேராசிரியர் இளங்கோ, மருத்துவக் கல்லூரி துணை இயக்குனர் சுதாலட்சுமி உட்பட பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.


    கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியராக பொறுப்பேற்ற ஆர். அழகு மீனா இ.ஆ. ப அவர்களை மரியாதை நிமித்தமாக சந்தித்து அவர் பணி சிறக்க வாழ்த்துக்கள் தெரிவித்தேன்.


    மாலை முரசு அதிபர் அமரர் பா. ராமச்சந்திர ஆதித்தன் அவர்கள் பிறந்த தினத்தை முன்னிட்டு மதுரையில் அவரது திருவுருவ படத்திற்கு மதுரை பாராளுமன்ற உறுப்பினர் தோழர் சு. வெங்கடேசன் அவர்களுடன் சேர்ந்து மரியாதை செலுத்தினோம்.


    முன்னர் சு. வெங்கடேசன் அவர்களை சந்தித்து வாழ்த்துக்கள் பரிமாறி கொண்டோம்.

    • போகித் திருநாளில் நம் வாழ்வும் வளமும் மேம்பட, பழைய பொருட்களை எரிப்பதனை தவிர்க்க வேண்டும்.
    • நச்சு வாயுக்களால் மூச்சு திணறல், கண் எரிச்சல் போன்ற நோய்களால் பொதுமக்களுக்கு பாதிப்பும் ஏற்படுகிறது.

    நாகர்கோவில்:

    குமரி மாவட்ட கலெக்டர் அரவிந்த் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    நமது முன்னோர்கள் பொங்கல் திருநாளுக்கு முன் வீட்டில் உள்ள இயற்கை சார்ந்த தேவையில்லா பொருட்களை எரித்து பழையன கழிதலும், புதியன புகுதலும் என்ற அடிப்படையில் போகி பண்டிகையினை கொண்டாடி வந்துள்ளனர். ஆனால் தற்பொழுது போகி பண்டிகையின்போது பழைய பொருட்களான பிளாஸ்டிக், செயற்கை இழைகளால் தயாரிக்கப்பட்ட துணிகள், ரப்பர் பொருட்கள் பழைய டயர் மற்றும் டியூப், காகிதம், ரசாயனம் கலந்த பொருட்கள் போன்றவற்றை எரிப்பதால் காற்று மாசு ஏற்படுவதோடு இதனால் வெளிப்படும் நச்சு வாயுக்களால் மூச்சு திணறல், கண் எரிச்சல் போன்ற நோய்களால் பொது மக்களுக்கு பாதிப்பும் ஏற்படுகிறது.

    எனவே குமரி மாவட்டத்தில் நாளை (சனிக்கிழமை) அனுசரிக்கப்படும் இந்த போகித் திருநாளில் நம் வாழ்வும் வளமும் மேம்பட, பழைய பொருட்களை எரிப்பதனை தவிர்க்க வேண்டும். எனவே புகையில்லா போகி கொண்டாடுவோம். சுற்றுச்சூழலை பேணிக் காப்போம். அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • ஒருமுறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பொருட்களை தமிழக அரசு தடை விதித்துள்ளது.
    • முதல் பரிசாக ரூ.10 லட்சமும், இரண்டாம் பரிசாக ரூ.5 லட்சமும், மூன்றாம் பரிசாக ரூ.3 லட்சமும் வழங்கப்படுகிறது.

    நாகர்கோவில்:

    குமரி மாவட்ட கலெக்டர் அரவிந்த் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    ஒருமுறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பொருட்களை தமிழக அரசு தடை விதித்துள்ளது. அதில் பிளாஸ்டிக் பைகளும் அடங்கும். இந்த பிளாஸ்டிக் பைகளுக்கு மாற்றாக மஞ்சப்பை போன்ற பாரம்பரியமான சுற்றுச்சூழலுக்கு உகந்த பயன்பாட்டை ஊக்குவித்து சிறப்பாக செயல்படுத்தும் 3 பள்ளிகள், 3 கல்லூரிகள் மற்றும் 3 வணிக வளாகங்களுக்கு மஞ்சப்பை விருதுகள் வழங்கப்பட இருக்கிறது.

    முதல் பரிசாக ரூ.10 லட்சமும், இரண்டாம் பரிசாக ரூ.5 லட்சமும், மூன்றாம் பரிசாக ரூ.3 லட்சமும் வழங்கப்படுகிறது. இந்த அறிவிப்பு தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தால் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக விண்ணப்பங்களை மாவட்ட கலெக்டர் அலுவலக இணையதளமான https://kanyakumari.nic.inபதிவிறக்கம் செய்து கொள்ளலாம். விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் 1-5-2023 ஆகும்.

    இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

    ×