என் மலர்
நீங்கள் தேடியது "ஏ.டி.எம்.மை உடைத்து"
கன்னியாகுமரி:
குமரி மாவட்டம் இரணி யல் அருகே உள்ளது திங்கள் நகர். இங்குள்ள இரணியல் சாலையில் ஒரு வணிக வளாகத்தில் தேசிய மயமாக்கப்பட்ட வங்கிக்கு சொந்தமான ஏ.டி.எம். மையம் உள்ளது.
அதன் அருகே பல்வேறு கடைகளும் உள்ளன. இதனால் அங்கு எப்போதும் மக்கள் நடமாட்டம் அதிக மாக இருக்கும். இன்று காலை அந்த வழியாக வந்த வர்கள், ஏ.டி.எம். அறை கதவு சரியாக மூடப்படாமல் இருப்பதை பார்த்தனர்.
சந்தேகத்தின் பேரில் ஏ.டி.எம். மையம் அருகே அவர்கள் சென்ற போது அந்த எந்திரம் சேதப்படுத் தப்பட்டு இருப்பது தெரிய வந்தது. இது குறித்து வங்கி யின் மேலாளர் ஹசீந்தருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து அவர் சம்பவ இடம் விரைந்து வந்து பார்வையிட்டார். அப்போது ஏ.டி.எம். எந்தி ரத்தின் முன்பக்க கதவை யாரோ மர்ம மனிதர்கள், கம்பியால் நெம்பியிருப்பது தெரிய வந்தது.
எனவே நள்ளிரவுக்கு மேல் யாரோ சிலர் கொள்ளை முயற்சியில் ஈடுபட்டு இருக்கலாம் என்ற சந்தேகம் ஏற்பட்டது. இது குறித்து அவர், இரணியல் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் செந்தில்வேல் குமார் மற்றும் போலீசார் சம்பவ இடம் விரைந்து வந்தனர்.
அவர்கள், கொள்ளை முயற்சி நடந்த ஏ.டி.எம். மையத்தை பார்வையிட்டு விசாரணை நடத்தினர். ஏ.டி.எம். எந்திரத்தில் பணம் வரும் பகுதியின் கீழ் உள்ள இடம் உடைக்கப்பட்டு இருப்பதை பார்த்த போலீ சார், அதுகுறித்து ஆய்வு செய்தனர்.
தொடர்ந்து கைரேகை நிபுணர்கள் சம்பவ இடம் வந்து தடயங்கள் சேகரிக்கப்பட்டன. மோப்ப நாய் வரவழைக்கப்பட்டும் விசாரணை நடத்தப்பட்டது. மக்கள் நடமாட்டம் நிறைந்த பகுதியில் வங்கி ஏ.டி.எம்.மில் கொள்ளை முயற்சி சம்பவம் நடந்திருப்பது அந்தப் பகுதியில் பரப ரப்பை ஏற்படுத்தி உள்ளது.