search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மேல் சிகிச்சை"

    • சங்கராபுரம் அருகே கால்வாயில் தவறி விழுந்து வாலிபர் பலியானார்.
    • தினேஷினை சங்கராபுரம் தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர்.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அடுத்த பாவ ளம் கிராமத்தைச் சேர்ந்தவர் தேவேந்திரன் மகன் தினேஷ் (வயது 28). இவர் சம்ப வத்தன்று வீட்டிலிருந்து வெளியே வந்தபோது வீட்டின் முன்புறம் உள்ள கழிவு நீர் கால்வாயில் கால் தவறி விழுந்தார்.

    பலத்த காயமடைந்த தினேஷினை சங்கராபுரம் தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனையில் சேர்த்து அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இது குறித்து சங்கராபுரம் போலீ சார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • இவருக்கு கடந்த சில வருடங்களாக உடல்நிலை சரியில்லாமல் சிகிச்சை பெற்று வந்தார்.
    • தேவனாம்பட்டினம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கடலூர்:

    கடலூர் கே.கே. நகரை சேர்ந்தவர் விஜயகுமார் (வயது 46). இவரது மனைவி மீனாட்சி. இவருக்கு கடந்த சில வருடங்களாக உடல்நிலை சரியில்லாமல் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் தனது வீட்டில் இருந்த எலி மருந்தை மீனாட்சி திடீரென்று சாப்பிட்டு தற்கொலைக்கு முயற்சித்தார். இதனை தொடர்ந்து மீனாட்சியை மீட்டு சிகிச்சைக்காக கடலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். மேல் சிகிச்சைக்காக முண்டியம் பாக்கம் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டு மீனாட்சி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது குறித்து தேவனாம்பட்டினம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • இவருக்கு குடிப்பழக்கம் இருந்து வந்த நிலையில் அவரது மனைவி தீபா கண்டித்துள்ளார்.
    • ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி மதிசெல்வம் பரிதாபமாக உயிரிழந்தார்.

    கடலூர்:

    மது குடிப்பதை மனைவி கண்டித்ததால் தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். கடலூர் அடுத்த காரணப்பட்டு சேர்ந்தவர் மதிச்செல்வம் (வயது 30 ). கூலி தொழிலாளி. இவருக்கு குடிப்பழக்கம் இருந்து வந்த நிலையில் அவரது மனைவி தீபா கண்டித்துள்ளார். இதனால் மனமுடைந்த மதி செல்வம் பூச்சி மருந்து குடித்தார்.

    இதனால் உடல்நிலை பாதிக்கப்பட்டது. இதனால் மதி செல்வத்தை மீட்டு கரிக்கலாம்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்கு மதி செல்வத்தை சேர்த்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி மதிசெல்வம் பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து ரெட்டிச்சாவடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • முத்தியால்பேட்டையை சேர்ந்தவர் சதீஷ் மரம் ஏறும் தொழிலாளி.
    • தென்னை மரத்தில் ஏறி தேங்காய் பறித்தபோது மரத்திலிருந்து கீழே விழுந்தார்.

    விழுப்புரம்:

    புதுவை மாநிலம் முத்தியால்பேட்டையை சேர்ந்தவர் சதீஷ் (வயது 23). இவர் மரம் ஏறும் தொழிலாளி. இவர் கடந்த 10 நாட்களுக்கு முன்பாக கோட்டக்குப்பம் கறிக்கடை வீதியில் உள்ள தென்னை மரத்தில் ஏறி தேங்காய் பறித்துள்ளார்.

    அப்போது மரத்திலிருந்து கீழே விழுந்தார். இவரை மீட்ட அப்பகுதி மக்கள் புதுவை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக ஜிப்மர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று இரவு இறந்துவிட்டார். இது தொடர்பாக கோட்டக்குப்பம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • ரமேஷ் கடந்த 6 மாத காலமாக வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்துள்ளார்.
    • ரமேஷை மீட்டு பண்ருட்டி அரசு ஆஸ்பத்திரி யில் சிகிச்சைக்கு சேர்த்தனர்.

    கடலூர்: 

    கடலூர் மாவட்டம் பண்ருட்டி அடுத்த நல்லூர் பாளையத்தை சேர்ந்தவர் ரமேஷ் (38),டெய்லர். இவர்திருமணம்ஆனவர். மனைவி, மற்றும் மகள் உள்ளனர். இவர் கடந்த 6 மாத காலமாக வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்துள்ளார். இவர் கடந்த 26-ந் தேதிவயிற்று வலி தாங்காமல் வீட்டில் புடவை துணியால் தூக்கு போட்டுக் கொண்டார்.

    இவரது அலறல்சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் இவரை மீட்டு பண்ருட்டி அரசு ஆஸ்பத்திரி யில் சிகிச்சைக்கு சேர்த்தனர். மேல் சிகிச்சைக்காக கடலூர் கொண்டு செல்லப்பட்ட அவருக்கு அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப் பட்டது. சிகிச்சை பலன் அளிக்காமல் இன்று காலை ரமேஷ் இறந்தார். இது குறித்து புதுப்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் நந்தகுமார், சப் -இன்ஸ்பெக்டர் கனகராஜ் ஆகியோர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • 2 பேரும் முதியவர் ராஜாக்கண்ணுவிடம் வாய் தகராறில் ஈடுபட்டனர்.
    • தொடர்ந்து மேல் சிகிச்சைக்காக கடலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    கடலூர் :

    வடலூர் அருகே ஆபத்தானரணபுரம் பூசாலிக்குப்பம் பகுதியை சேர்ந்தவர் ராஜாக்கண்ணு (வயது 68). இவரது அக்கா வளர்மதி வீட்டில் கண்காணிப்பு கேமரா பொருத்தும் போது அங்கிருந்த, அதே பகுதியை சேர்ந்த 2 வாலிபர்கள் எதற்காக எங்கள் வீட்டின் முன்புறம் பார்த்த வண்ணமாக கேமராவை வைக்கிறார்கள். என்று கேட்டு 2 பேரும் முதியவர் ராஜாக்கண்ணுவிடம் வாய் தகராறில் ஈடுபட்டனர். வாய்த்தகராறு முற்றவே திடீரென்று தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் ஒரு நபர் ராஜாக்கண்ணுவின் மூக்கை வெட்டினார். மற்றொரு நபர் இரும்பு பைப்பினால் தலையில் கொடுரமாக தாக்கினார்.

    இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் பலத்த காயம் அடைந்த முதியவர் ராஜாக்கண்ணுவை மீட்டு சிகிச்சைக்காக குறிஞ்சிப்பாடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு முதலுதவி அளிக்கப்பட்டது. தொடர்ந்து மேல் சிகிச்சைக்காக கடலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து ராஜாக்கண்ணு வடலூர் போலீசில், அளித்த புகாரின் பேரில் சப்- இன்ஸ்பெக்டர் சங்கர் வழக்குப்பதிவு செய்து பூசாலிக்குப்பம் பகுதியை சேர்ந்த மகாராஜன் (27), சூர்யா (24) ஆகிய 2 பேரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    ×