search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஜாக்டோ ஜியோ ஆர்ப்பாட்டம்"

    • திருவள்ளூர் கலெக்டர் அலுவலகம் அருகே ஜாக்டோ ஜியோ அமைப்பினர் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
    • தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மாவட்ட செயலாளர் மெல்கி ராஜா சிங், மாவட்ட தலைவர் ஜம்பு ஆகியோர் தலைமை தாங்கினர்.

    திருவள்ளூர்:

    ஜாக்டோ ஜியோ அமைப்பினர் புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை செயல்படுத்த வேண்டும்.

    இடைநிலை ஆசிரியர்கள், முதுகலை ஆசிரியர்களின் ஊதிய முரண்பாடுகளை களைதல், தொகுப்பூதியம், சிறப்பு காலமுறை ஊதியம், தினக்கூலி அடிப்படையில் பணிபுரியும் ஆசிரியர்கள், சத்துணவு மற்றும் அங்கன்வாடி மற்றும் நூலகர் ஆகியோருக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வருகின்றனர்.

    இந்த நிலையில் திருவள்ளூர் கலெக்டர் அலுவலகம் அருகே ஜாக்டோ ஜியோ அமைப்பினர் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மாவட்ட செயலாளர் மெல்கி ராஜா சிங், மாவட்ட தலைவர் ஜம்பு ஆகியோர் தலைமை தாங்கினர்.

    மாநில துணைத் தலைவர் முத்துக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மாவட்ட துணைத் தலைவர் சீ.காந்திமதிநாதன் வரவேற்றார்.

    இதில் திரளான ஊழியர்கள் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். ஜாக்டோ ஜியோவின் உயர்மட்டக்குழு உறுப்பினர்கள் எஸ்.ஞானசேகரன், எஸ்.பிரபாகரன், மாநில சட்டச்செயலாளர் ஆர்.குப்புசாமி மாநில ஒருங்கிணைப்பாளர் தாஸ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    ×