என் மலர்
நீங்கள் தேடியது "சென்னை புத்தக கண்காட்சி"
- சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் சர்வதேச புத்தக கண்காட்சி இன்று தொடங்கியது.
- ஒவ்வொரு நாளும் காலை 11 மணி முதல் இரவு 8.30 மணி வரை கண்காட்சியை பொது மக்கள் பார்வையிடலாம்.
சென்னை:
தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கத்தின் (பபாசி) சார்பில் ஒவ்வொரு ஆண்டும் சென்னை புத்தக கண்காட்சி நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் 46-வது சென்னை சர்வதேச புத்தக கண்காட்சி சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் இன்று தொடங்கியது. புத்தக கண்காட்சியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். முத்தமிழறிஞர் கலைஞர் பொற்கிழி விருதுகள் 2023 மற்றும் பபாசி விருதுகளை வழங்கி விழாப் பேருரையாற்றினார்.
இந்த புத்தக கண்காட்சி வருகிற 22-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) வரை நடைபெற உள்ளது. ஒவ்வொரு நாளும் காலை 11 மணி முதல் இரவு 8.30 மணி வரை கண்காட்சியை பொது மக்கள் பார்வையிடலாம். இந்த ஆண்டு கூடுதலாக 200 அரங்குகளுடன் மொத்தம் 1,000 அரங்குகள் அமைக்கப்பட உள்ளன. அதில், சிறுவர்களுக்கான புத்தகங்கள் அடங்கிய அரங்கு ஒன்று பிரத்யேகமாக அமைக்கப்பட இருக்கிறது.
- சிறந்த பதிப்பாளர்கள் எழுத்தாளர்களுக்கு விருதுகளை வழங்கி கெளரவித்தோம்.
- முத்தமிழறிஞர் பதிப்பகத்தின் சார்பில் புதிதாக வெளியிடப்பட்டுள்ள 9 நூல்கள் உட்பட லட்சக்கணக்கான நூல்களைக் கொண்ட அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன.
தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கம் சார்பில் நந்தனம் ஒய்எம்சிஏ உடற்கல்வியியல் கல்லூரியில் 47-வது புத்தகக் காட்சியை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

இதுதொடர்பாக உதயநிதி ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில் கூறியிருப்பதாவது:-
47-வது சென்னை புத்தகக் கண்காட்சியை நந்தனம் ஒய்எம்சிஏ உடற்பயிற்சிக் கல்லூரி வளாகத்தில் இன்று தொடங்கி வைத்தோம்.
தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் வாழ்த்துச் செய்தியை எடுத்துரைத்து, தென்னிந்திய புத்தக விற்பனையாளர் & பதிப்பாளர் சங்கம் சார்பில் 'முத்தமிழறிஞர் கலைஞர் பொற்கிழி' விருது மற்றும் தலா ரூ.1 லட்சத்தை 6 சிறந்த படைப்பாளிகளுக்கு வழங்கி வாழ்த்தினோம்.
மேலும், தென்னிந்திய புத்தக விற்பனையாளர் & பதிப்பாளர் சங்கம் சார்பில் சிறந்த பதிப்பாளர்கள் எழுத்தாளர்களுக்கு விருதுகளை வழங்கி கெளரவித்தோம்.
திமுக இளைஞரணி சார்பில் தொடங்கப்பட்டுள்ள
முத்தமிழறிஞர் பதிப்பகத்தின் சார்பில் புதிதாக வெளியிடப்பட்டுள்ள 9 நூல்கள் உட்பட லட்சக்கணக்கான நூல்களைக் கொண்ட அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன.
உலகத்தமிழர்களின் அறிவுத்திருவிழாவாக நடைபெறவுள்ள சென்னை புத்தகக் காட்சி சிறக்கட்டும். புத்தக வாசிப்பு அறிவின் புதுப்புது கதவுகளை திறக்கட்டும்.
இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
- தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர்கள் சங்கம் இதை நடத்துகிறது.
- 48 வது புத்தக கண்காட்சி நடத்தப்பட உள்ளது.
சென்னையில் தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர்கள் சங்கத்தினரால் ஆண்டுதோறும் புத்தக கண்காட்சி நடத்தப்பட்டு வருகிறது. இக்கண்காட்சி பொதுவாக ஆங்கிலப் புத்தாண்டு பொங்கல் பண்டிகையை ஒட்டி ஜனவரி மாதம் நடைபெறும்.
தமிழகம் முழுவதும் உள்ள வெளியீட்டாளர்கள் தனித்தனி ஸ்டால்களில் தங்கள் பதிப்பக புத்தகங்களை காட்சிப்படுத்துவர். கண்காட்சியோடு சேர்த்து சொற்பொழிவு, பேச்சாளர்களின் சிறப்பு நிகழ்வுகள் உள்ளிட்டவையுடன் பண்பாட்டு நிகழ்ச்சிகளும் நடத்தப்படும்.
1977 ஆம் ஆண்டு முதல் புத்தக கண்காட்சி நடத்தப்பட்ட நிலையில் அடுத்ததாக 48 வது புத்தக கண்காட்சி நடத்தப்பட உள்ளது.
இந்நிலையில் புத்தக கண்காட்சியானது முன்கூட்டியே வரும் டிசம்பர் 27 ஆம் தேதி தொடங்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
- ஆங்கிலப் புத்தாண்டு பொங்கல் பண்டிகையை ஒட்டி ஜனவரி மாதம் நடைபெறும்.
- பேச்சாளர்களின் சிறப்பு நிகழ்வுகள் நடைபெறும்.
48-வது புத்தக கண்காட்சி வருகிற 27 ஆம் தேதி துவங்கும் என்று அறிவிக்கப்பட்டு இருக்கிறது. இந்த புத்தக கண்காட்சியை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யமொழி திறந்து வைக்க உள்ளார்.
புத்தக கண்காட்சியின் துவக்க நிகழ்ச்சியில் எழுத்தாளர்களுக்கு கலைஞர் பொற்கிழி விருதுகளை துணை முதலமைச்சர் வழங்க உள்ளார்.
டிசம்பர் 27 ஆம் தேதி துவங்கும் புத்தக கண்காட்சி ஜனவரி 12 ஆம் தேதி வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு இருக்கிறது. புத்தகக் காட்சி விடுமுறை நாட்களில் காலை 11 மணி முதல் இரவு 8.30 மணி வரையிலும், வேலை நாட்களில் பிற்பகல் 2 மணி முதல் இரவு 8.30 மணி வரையிலும் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
மொத்தம் 17 நாட்கள் நடக்கும் புத்தகக் காட்சியில் 900 அரங்குகள் அமைக்கப்பட உள்ளன. கண்காட்சியில் இடம்பெறும் புத்தகங்களும் 10% தள்ளுபடியில் விற்பனை செய்யப்படவுள்ளன.
சென்னையில் தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர்கள் சங்கம் சார்பில் ஒவ்வொரு ஆண்டும் புத்தக கண்காட்சி நடத்தப்பட்டு வருகிறது. இந்த கண்காட்சி பொதுவாக ஆங்கிலப் புத்தாண்டு பொங்கல் பண்டிகையை ஒட்டி ஜனவரி மாதம் நடைபெறுவது வழக்கம்.
தமிழகம் முழுவதும் உள்ள வெளியீட்டாளர்கள் தனித்தனி ஸ்டால்களில் தங்கள் பதிப்பக புத்தகங்களை காட்சிப்படுத்துவர். கண்காட்சியோடு சேர்த்து சொற்பொழிவு, பேச்சாளர்களின் சிறப்பு நிகழ்வுகள் உள்ளிட்டவையுடன் பண்பாட்டு நிகழ்ச்சிகளும் நடைபெற இருக்கிறது.
- புத்தக வாசிப்பின் முக்கியத்துவம் பற்றி விழிப்புணர்வை ஏற்படுத்தும் நிலையில், சென்னையில் இன்று பேரணி நடைபெற்றது.
- புத்தக கண்காட்சியானது முன்கூட்டியே வரும் டிசம்பர் 27-ம் தேதி தொடங்க உள்ளது.
சென்னையில் தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர்கள் சங்கத்தினரால் ஆண்டுதோறும் புத்தக கண்காட்சி நடத்தப்பட்டு வருகிறது. இக்கண்காட்சி பொதுவாக ஆங்கிலப் புத்தாண்டு பொங்கல் பண்டிகையை ஒட்டி ஜனவரி மாதம் நடைபெறும்.
தமிழகம் முழுவதும் உள்ள வெளியீட்டாளர்கள் தனித்தனி ஸ்டால்களில் தங்கள் பதிப்பக புத்தகங்களை காட்சிப்படுத்துவர். கண்காட்சியோடு சேர்த்து சொற்பொழிவு, பேச்சாளர்களின் சிறப்பு நிகழ்வுகள் உள்ளிட்டவையுடன் பண்பாட்டு நிகழ்ச்சிகளும் நடத்தப்படும்.
1977 ஆம் ஆண்டு முதல் புத்தக கண்காட்சி நடத்தப்பட்ட நிலையில் அடுத்ததாக 48 வது புத்தக கண்காட்சி நடத்தப்பட உள்ளது.
அதன்படி, புத்தக கண்காட்சியானது முன்கூட்டியே வரும் டிசம்பர் 27-ம் தேதி தொடங்க உள்ளது.

இந்நிலையில், புத்தக வாசிப்பின் முக்கியத்துவம் பற்றி விழிப்புணர்வை ஏற்படுத்தும் நிலையில், சென்னையில் இன்று பேரணி நடைபெற்றது.
இதனை, தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர்கள் சங்கத் தலைவர் சேது சொக்கலிங்கம் கொடியசைத்து விழிப்புணர்வு பேரணியை தொடங்கி வைத்தார்.
பேரணியில், மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ், சென்னை மேயர் பிரியா ஆகியோர் பங்கேற்றனர்.
அதன்படி நந்தனம் ஆவின் பாலகம் அருகில் இருந்து ஒய்எம்சிஏ மைதானம் வரை பேரணி நடைபெற்றது. இதில் 500க்கும் மேற்பட்ட பள்ளி, கல்லூரி மாணவர்கள் பங்கேற்றனர்.
- மொத்தம் 900 அரங்குகள் இடம்பெறும்.
- அனைத்து அரங்கிலும் 10 சதவீத சலுகை விலையில் அனைத்து புத்தகங்களும் விற்பனை செய்யப்படும்.
சென்னையில் தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர்கள் சங்கத்தினரால் ஆண்டுதோறும் புத்தக கண்காட்சி நடத்தப்பட்டு வருகிறது. இக்கண்காட்சி பொதுவாக ஆங்கிலப் புத்தாண்டு பொங்கல் பண்டிகையை ஒட்டி ஜனவரி மாதம் நடைபெறும்.
தமிழகம் முழுவதும் உள்ள வெளியீட்டாளர்கள் தனித்தனி ஸ்டால்களில் தங்கள் பதிப்பக புத்தகங்களை காட்சிப்படுத்துவர். கண்காட்சியோடு சேர்த்து சொற்பொழிவு, பேச்சாளர்களின் சிறப்பு நிகழ்வுகள் உள்ளிட்டவையுடன் பண்பாட்டு நிகழ்ச்சிகளும் நடத்தப்படும்.
1977 ஆம் ஆண்டு முதல் புத்தக கண்காட்சி நடத்தப்பட்ட நிலையில் அடுத்ததாக 48 வது புத்தக கண்காட்சி நடத்தப்பட உள்ளது.
இந்நிலையில் புத்தக வாசிப்பாளர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட புத்தக கண்காட்சியை நாளை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். நாளை நடைபெறும் தொடக்க நாள் நிகழ்ச்சியில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கலந்து கொண்டு சிறப்புரையாற்றுகிறார்.
நந்தனத்தில் அமைந்துள்ள YMCA உடற்கல்வியில் கல்லூரியில் நாளை தொடங்கும் புத்தக கண்காட்சி ஜனவரி 12-ந்தேதி வரை நடைபெறுகிறது. மொத்தம் 900 அரங்குகள் இடம்பெறும். வார நாட்களில் மதியம் 2 மணி முதல் இரவு 8.30 மணி வரையும் விடுமுறை நாட்களில் காலை 11 மணி முதல் இரவு 8.30 மணிவரையும் புத்தக கண்காட்சி நடைபெற உள்ளது. அனைத்து அரங்கிலும் 10 சதவீத சலுகை விலையில் அனைத்து புத்தகங்களும் விற்பனை செய்யப்படும்.
சென்னை புத்தகக் கண்காட்சியில் கலைஞர் பொற்கிழி விருது, பபாசி விருது ஆகியவை வழங்கப்பட உள்ளது. அதன்விவரம்:-

இதனை தொடர்ந்து 28-ந்தேதி முதல் 31-ந்தேதி வரை நடைபெறும் நிகழ்ச்சிகள் விவரம்:-

- புத்தக வாசிப்பாளர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட புத்தக கண்காட்சி இன்று முதல் தொடங்குகிறது.
- மகளிர் சுய உதவிக் குழுவினர் சார்பில் அமைக்கப்பட்டுள்ள கண்காட்சியை திறந்துவைத்தார்.
சென்னையில் தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர்கள் சங்கத்தினரால் ஆண்டுதோறும் புத்தக கண்காட்சி நடத்தப்பட்டு வருகிறது. இக்கண்காட்சி பொதுவாக ஆங்கிலப் புத்தாண்டு பொங்கல் பண்டிகையை ஒட்டி ஜனவரி மாதம் நடைபெறும்.
தமிழகம் முழுவதும் உள்ள வெளியீட்டாளர்கள் தனித்தனி ஸ்டால்களில் தங்கள் பதிப்பக புத்தகங்களை காட்சிப்படுத்துவர். கண்காட்சியோடு சேர்த்து சொற்பொழிவு, பேச்சாளர்களின் சிறப்பு நிகழ்வுகள் உள்ளிட்டவையுடன் பண்பாட்டு நிகழ்ச்சிகளும் நடத்தப்படும்.
1977 ஆம் ஆண்டு முதல் புத்தக கண்காட்சி நடத்தப்பட்ட நிலையில் அடுத்ததாக 48 வது புத்தக கண்காட்சி நடத்தப்பட உள்ளது.
இந்நிலையில் புத்தக வாசிப்பாளர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட புத்தக கண்காட்சியை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
அரங்கிற்கு வெளியே வைக்கப்பட்டுள்ள திருவள்ளுவர் சிலையையும் அவர் திறந்து வைத்தார்.
மேலும், மகளிர் சுய உதவிக் குழுவினர் சார்பில் அமைக்கப்பட்டுள்ள கண்காட்சியை திறந்துவைத்து பார்வையிட்டார்.
தொடர்ந்து, தொடக்க நாள் நிகழ்ச்சியில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கலந்து கொண்டு சிறப்புரையாற்றுகிறார்.
நந்தனத்தில் அமைந்துள்ள YMCA உடற்கல்வியில் கல்லூரியில் நாளை தொடங்கும் புத்தக கண்காட்சி ஜனவரி 12-ந்தேதி வரை நடைபெறுகிறது.
சென்னை புத்தகக் கண்காட்சியில் கலைஞர் பொற்கிழி விருது, பபாசி விருது ஆகியவை வழங்கப்பட உள்ளது.
- புத்தக கண்காட்சியை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
- புத்தக கண்காட்சி ஜனவரி 12-ந்தேதி வரை நடைபெறுகிறது.
சென்னை நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில் 48வது புத்தக கண்காட்சி நடைபெற்று பெற்று வருகிறது.
புத்தக வாசிப்பாளர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட புத்தக கண்காட்சியை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
அரங்கிற்கு வெளியே வைக்கப்பட்டுள்ள திருவள்ளுவர் சிலையையும் அவர் திறந்து வைத்தார்.
தொடக்க நாள் நிகழ்ச்சியில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கலந்து கொண்டு சிறப்புரையாற்றுகிறார்.
புத்தக கண்காட்சிக்கு தினமும் ஆயிரக்கணக்கான மக்கள் வந்து புத்தகங்களை வாங்கி செல்கின்றனர்.
இந்த புத்தக கண்காட்சி ஜனவரி 12-ந்தேதி வரை நடைபெறுகிறது.
இந்நிலையில், சென்னை புத்தகக் கண்காட்சியில் சிறைவாசிகளுக்கு புத்தக தானம் செய்யும் அரங்கில் பல்வேறு புத்தகங்களை தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தானம் செய்தார்.
- நூல் வெளியீட்டு விழாவில், நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்து கொண்டார்.
- டிஸ்கவரி புக் பேலஸ் மற்றும் பதிப்பகம் அறிக்கையின் மூலம் விளக்கம் அளித்துள்ளது.
சென்னையில் நடைபெற்று வரும் புத்தக கண்காட்சியில் கடந்த 4ம் தேதி நூல் வெளியீட்டு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில், நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்து கொண்டார்.
நிகழ்ச்சி தொடங்கியதும் தமிழ்தாய் வாழ்த்து பாடல் பாடப்படும் என அறிவிக்கப்பட்டது.
அப்போது, தமிழ்தாய் வாழ்த்துக்கு பதிலாக பாரதிதாசனின் பாடல் ஒளிக்கப்பட்டது. ஆனால், அது புதுச்சேரியின் தமிழ்தாய் வாழ்த்து பாடலாகும். இந்த விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இதுகுறித்து டிஸ்கவரி புக் பேலஸ் மற்றும் பதிப்பகம் அறிக்கையின் மூலம் விளக்கம் அளித்துள்ளது.
04/01/2025 அன்று காலை, சென்னை புத்தகக் காட்சியில் புத்தக வெளியீட்டு விழாவிற்காக நாம் தமிழர் கட்சித் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்களை, நூலாசிரியரின் பரிந்துரையின் பேரில், பதிப்பாளர் என்ற முறையில் அழைத்து, அதற்கான அரங்கு அமைத்துக் கொடுத்தோம்.
அரசியல் தாக்குதல் மற்றும் அரசுக்கு எதிரான கருத்துகளைப் பேசக்கூடாது என்ற அறிவுறுத்தலுடன், அரசியல் பாரபட்சமற்று பபாசி அமைப்பும் இதற்கான அனுமதியை வழங்கியது.
பபாசி அமைப்பின் ஒரு உறுப்பினர் மற்றும் அதன் செயற்குழுவில் செயலாற்றியவன் என்ற முறையில் எனக்குள்ள பொறுப்புடன், சீமான் அவர்களிடமும் இந்தக் கருத்து வலியுறுத்தப்பட்டது.
விழா தொடங்கிய அன்று மேடையில் பெரும்பான்மையான திட்டங்களை நூலாசிரியர் பாலமுரளிவர்மன் அவர்கள் பார்த்துக்கொண்டார். சீமான் அவர்களின் விருப்பத்தின் பேரில் பாரதிதாசன் அவர்களின் 'வாழ்வினில் செம்மையைச் செய்பவள் நீயே! மாண்புகழ் நீயே என் தமிழ்த் தாயே! என்ற பாடல் ஒலிபரப்பப்பட்டது.
பாரதிதாசன் பாடல் என்பதால் நானும் அதை இயல்பாக எடுத்துக்கொண்டேன். அது பாண்டிச்சேரியின் தமிழ்த்தாய் வாழ்த்து என்றோ. இதன்மூலம் தமிழ்நாட்டின் தமிழ்த்தாய் வாழ்த்து புறக்கணிக்கப்படுகிறது என்ற அரசியல் தெளிவோ அப்போது இல்லாதது எனது அறியாமையே, அதற்காக நான் வருந்துகிறேன்.
அதோடு, சீமான் அவர்கள், நல்லதொரு இலக்கிய மேடையை அரசியல் மேடையாக நினைத்துப் பேசிய கருத்துக்கள் எனக்கோ, எங்களின் பபாசி அமைப்பிற்கோ விருப்பமில்லாதது. நாங்கள் ஒருபோதும் இதை ஆதரிக்கவில்லை.
பொது மேடையில் சீமான் அவர்களின் உரையில் குறுக்கிடுவது நாகரிகமாக இருக்காது என்பதால் அனைவரும் அமைதி காத்தோம். இதை ஒரு பாடமாக எடுத்துக்கொள்கிறோம்.
டிஸ்கவரி புக் பேலஸ் மற்றும் பதிப்பகம், கடந்த 15 ஆண்டுகளாக சென்னையின் இலக்கிய அடையாளங்களில் ஒன்றாக கலைஞர் கருணாநிதி நகரில் செயல்பட்டு வருகிறது. அரசியல் சார்பற்று, வாசிப்பை மட்டுமே நோக்கமாகக் கொண்டு, எல்லா வகையான இலக்கியங்களையும் வெளியிட்டு வருகிறோம்.
எதிர்பாராமல் நடந்த ஒரு சம்பவத்திற்கு, தகுந்த ஆலோசனைகள் வழங்காமல், ஒட்டுமொத்தமாக எங்களின் இலக்கியச் செயல்பாடுகளை முடக்குவதற்குத் திட்டமிடுவது வருந்தத்தக்கது.
இனி இதுபோன்ற சம்பவங்கள் நடக்காமல் பார்த்துக்கொள்ள உறுதி ஏற்றுள்ளோம்.
இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
- தமிழ்நாடு அரசின் மீது பபாசிக்கு மிகுந்த மரியாதை உண்டு.
- அரசியல் பேசக் கூடாது என பதிப்பாளர்களுக்கு ஏற்கனவே தெரிவிக்கப்பட்டுள்ளது.
தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கமானன பபாசி சார்பில் 48-வது சென்னைப் புத்தகக்காட்சி, கடந்த டிசம்பர் மாதம் 27-ந் தேதி சென்னை நந்தனம் ஒ.ய்.எம்.சி.ஏ. மைதானத்தில் தொடங்கியது.
இந்த கண்காட்சி வருகிற 12-ந் தேதி வரை நடைபெற இருக்கிறது. இந்த புத்தகக் காட்சியில் 900 அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. புத்தக காட்சியில் ஒவ்வொரு நாளும் ஏதாவது புது நூல் அறிமுகம் நடைபெறும். அந்த வகையில், டிஸ்கவரி புக் பேலஸ் ஏற்பாடு செய்திருந்த தமிழ்த்தேசியம் குறித்த நூல் வெளியீட்டு நிகழ்ச்சியில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பங்கேற்றார்.

அப்போது தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலான 'நீராருங் கடலுடுத்த' பாடலுக்குப் பதிலாக வேறு ஒரு பாடல் பாடப்பட்டது குறித்த சர்ச்சையும் கிளம்பியது.
இதனையடுத்து, புத்தகக் கண்காட்சியில் தமிழ்நாடு அரசின் தமிழ்த் தாய் வாழ்த்துப் புறக்கணிப்பட்டு புதுச்சேரி அரசின் தமிழ்த் தாய் வாழ்த்து பாடப்பட்டதற்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்தான் காரணம் என்று நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த டிஸ்கவரி புக் பேல்ஸ் நிறுவனத்தின் இயக்குநர் வேடியப்பன் விளக்கம் அளித்தார்.
இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து பபாசி தலைவர் சொக்கலிங்கம் அறிக்கை ஒன்றை வெளியிட்டார்.
அதில் அவர் இன்றைய அரசியல் சார்ந்தும், தமிழ்நாடு அரசின் முதலமைச்சரையும், முன்னாள் தமிழ்நாடு முதலமைச்சரையும் ஒருமையிலும் மற்றும் பாண்டிச்சேரி மாநிலத்தின் தமிழ்த்தாய் பாடலையும் பாடியதற்கும் தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கத்திற்கு எந்தவிதமான சம்பந்தமும் இல்லை என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.
மேலும், இன்று அவசர செயற்குழு கூடி டிஸ்கவரி புக் பேலஸ் மீது நடவடிக்கை எடுப்பதற்கான சூழ்நிலையை, இந்த நிகழ்வு ஏற்படுத்திக் கொண்டிருக்கின்றது என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.
மேலும் தமிழ்நாடு அரசின் மீது பபாசிக்கு மிகுந்த மரியாதை உண்டு. எனவே தனிப்பட்ட முறையில் டிஸ்கவரி புக் பேலஸ் நடத்திய நிகழ்விற்கு பபாசிக்கும் எந்தவிதமான சம்பந்தமும் இல்லை என்பதை இதன்மூலம் தெரிவித்துக் கொள்கிறோம் என விளக்கம் அளித்தார்.

இந்த சர்ச்சை தொடர்பாக பபாசி தலைவர் சொக்கலிங்கம் நந்தனம் புத்தக கண்காட்சியில் நடந்த பேட்டியில் கூறியதாவது:-
சீமான் மேடை ஏறுவதற்கு முன்பே, இது அரசியல் மேடை அல்ல, இலக்கிய மேடை, புத்தகங்கள் தொடர்பாக மட்டும் பேசுமாறு அறிவுறுத்தினேன்.
மேலும் புத்தக பதிப்பக நிறுவனம் அழைத்துவரும் நபர் அரசியல் பேசக் கூடாது என பதிப்பாளர்களுக்கு ஏற்கனவே தெரிவிக்கப்பட்டுள்ளது.
48 வருடத்தில் நடக்காதது ஒன்று இப்போது நடந்துள்ளது. புத்தக கண்காட்சியில் சிறப்பு விருந்தினராக வந்த சீமான் எப்படி இதை செய்யலாம். அவருடைய கண்ணியத்தை காக்க அவர் தவறிவிட்டார். இவ்வாறு அவர் பேசினார்.
இதனைத்தொடர்ந்து பபாசி பொதுச் செயலாளர் முருகன் பேசியதாவது:-
சிறப்பு விருந்தினராக வந்த சீமான், புத்தகம் பற்றி மட்டுமே பேசியிருக்க வேண்டும். புத்தக காட்சி பாதைக்கு நாங்கள் யார் பெயரை வேண்டுமானாலும் வைப்போம்.
இந்த விவகாரத்தில் சீமான் மன்னிப்பு கேட்க வேண்டும். அந்த புத்தகத்தை வெளியிட்ட பதிப்பகமும் உரிய மன்னிப்பு கேட்க வேண்டும். அந்த பதிப்பகம் திட்டமிட்டு இதனை நடத்தியுள்ளது"
இவ்வாறு அவர் கூறினார்.
- சீமானின் பேச்சுக்கு டிஸ்கவரி புக் பேலஸ் பதிப்பகத்தின் தலைவர் வேடியப்பன் விளக்கம் அளித்துள்ளார்.
- இனி இதுபோன்ற சம்பவங்கள் நடக்காமல் பார்த்துக்கொள்ள உறுதி அளிக்கிறேன்.
சென்னையில் நடைபெற்று வரும் புத்தக கண்காட்சியில் கடந்த 4ம் தேதி நூல் வெளியீட்டு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில், நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்து கொண்டார்.
நிகழ்ச்சி தொடங்கியதும் தமிழ்தாய் வாழ்த்து பாடல் பாடப்படும் என அறிவிக்கப்பட்டது.
அப்போது, தமிழ்தாய் வாழ்த்துக்கு பதிலாக பாரதிதாசனின் பாடல் ஒளிக்கப்பட்டது. ஆனால், அது புதுச்சேரியின் தமிழ்தாய் வாழ்த்து பாடலாகும். இந்த விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தியது. மேலும், புத்தக கண்காட்சி நிகழ்ச்சியில் அரசியல் பேசியதும் விமர்சனத்தை எழுப்பியது.
இந்நிலையில், சீமானின் பேச்சுக்கு டிஸ்கவரி புக் பேலஸ் வேடியப்பன் விளக்கம் அளித்துள்ளார்.
அதில் கூறியிருப்பதாவது:-
கடந்த 4ம் தேதி அன்று காலை சென்னை புத்தகக் காட்சியில், சக்தி வை. கோவிந்தன் சிந்தனை அரங்கில் புத்தக வெளியீட்டு விழாவில் தமிழ் நாட்டின் முன்னாள் முதல்வர், முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்கள் குறித்தும், இந்நாள் முதல்வர் மு.க.ஸ்டாலின் குறித்தும் சீமான் பேசியதில் எனக்குத் துளியும் உடன்பாடில்லை.
அதற்கான எனது எதிர்ப்பையும், கண்டனத்தையும் பதிவு செய்கிறேன். அதோடு, தமிழ்நாட்டின் தமிழ்த்தாய் வாழ்த்தினை நிராகரித்து புதுவை தமிழ்த்தாய் வாழ்த்தினை ஒலிபரப்பியதும், அதன் விளைவுகள் தெரியாமல் இருந்துவிட்டதாலும், மேடைக்கான அனுமதி பெற்றுக்கொடுத்தவன் என்ற முறையில் இவை அனைத்திற்கும் நான் பொறுப்பேற்கிறேன்.
இதனால், பல ஆயிரம் பேருக்கு வாழ்வாதாரமாக இருக்கும் பபாசி அமைப்பிடமும், இதனால் மனவருத்தம் அடைந்துள்ள அனைவரிடமும் எனது மன்னிப்பு கோருகிறேன்.
இனி இதுபோன்ற சம்பவங்கள் நடக்காமல் பார்த்துக்கொள்ள உறுதி அளிக்கிறேன்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.