என் மலர்
நீங்கள் தேடியது "1 பவுன்"
- கண்டக்டர் எடுத்து அதிகாரியிடம் ஒப்படைத்தார்
- தங்க மோதிரத்தை தவற விட்டவர்கள் அதற்கான அடையாளங்களை கூறி தங்க மோதிரத்தை பெற்றுக் கொள்ளலாம்
நாகர்கோவில்:
கருங்கல்லில் இருந்து நாகர்கோவில் அண்ணா பஸ் நிலையத்திற்கு நேற்று மாலை அரசு பஸ் வந்தது. பஸ்சில் ஏராளமான பயணிகள் இருந்தனர்.
பஸ் நிலையத்திற்கு வந்ததும் பஸ்சை விட்டு இறங்கி பயணிகள் சென்றனர். அப்போது கண்டக்டர் பஸ்ஸை விட்டு இறங்கிய போது பஸ்சுக்குள் தங்க மோதிரம் ஒன்று கிடந்தது.பஸ்சில் கிடந்த ஒரு பவுன் தங்க மோதிரத்தை எடுத்த கண்டக்டர் இது குறித்து அந்த பகுதியில் நின்ற பயணிகளிடம் கேட்டார்.
அப்போது தங்க மோதிரம் யாருடையது என்பது தெரியவில்லை. இதையடுத்து கண்டக்டர் போக்குவரத்து கழக அதிகாரியிடம் தங்க மோதிரத்தை ஒப்படைத்தார்.
தங்க மோதிரத்தை தவற விட்டவர்கள் அதற்கான அடையாளங்களை கூறி தங்க மோதிரத்தை பெற்றுக் கொள்ளலாம் என்று போக்குவரத்து கழக அதிகாரிகள் தெரி வித்துள்ளனர்.
பஸ்ஸில் கிடந்த ஒரு பவுன் தங்க மோதிரத்தை எடுத்து ஒப்படைத்த கண்டக்டரின் நேர்மையை உயர் அதிகாரிகள் பாராட்டினார்கள்.