search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பகவதி"

    • பக்தர்கள் சூட்கேஸ், கைப்பை கொண்டு செல்ல தடை
    • மாலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டு இரவு 8.30 மணிக்கு நடை அடைக்கப்படுவது வழக்கம்.

    கன்னியாகுமரி:

    கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான உள்நாட்டு மற்றும் வெளி நாட்டு சுற்றுலா பயணிகளும், பக்தர்களும் வந்து அம்மனை தரிசனம் செய்துவிட்டு செல்கிறார்கள். இந்த கோவில் நடை பக்தர்களின் தரிசனத்துக்காக தினமும் அதிகாலை 4.30 மணிக்கு திறக்கப்பட்டு பகல் 12.30 மணிக்கு அடைக்கப்படுவது வழக்கம். அதேபோல மாலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டு இரவு 8.30 மணிக்கு நடை அடைக்கப்படுவது வழக்கம். இந்த நிலையில் சபரிமலை அய்யப்ப பக்தர்கள் சீசன் நேற்று முதல் தொடங்கி உள்ளது.

    இதையடுத்து நேற்று முதல் கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் நடை திறப்பு நேரம் கூடுத லாக 1 மணி நேரம் நீட்டிக்கப்பட்டுள்ளது. அதன்படி பகல் 12.30 மணிக்கு அடைக்கப்படும் நடை 1 மணிக்கு அடைக்கப்படுகிறது. இரவு 8.30 மணிக்கு அடைக்கப்படும் நடை 9 மணிக்கு அடைக்கப் படுகிறது.  சபரிமலை சீசன் தொடங்கிய நேற்று முதலே கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் அய்யப்ப பக்தர்களின் கூட்டம் நிரம்பி வழிகிறது. சீசன் தொடங்கிய 2-வது நாளான இன்றும் சுற்றுலா பயணிகள் மற்றும் அய்யப்ப பக்தர்களின் கூட்டம் அலை மோதியது.

    இதனால் பகவதி அம்மன் கோவில் வெளி பிரகா ரத்தில் உள்ள கியூ செட்டில் பக்தர்களின் நீண்ட "கியூ" காணப்பட்டது. பக்தர்கள் சுமார் 1 மணி நேரம் "கியூ" வில் காத்திருந்து அம்மனை தரிசனம் செய்துவிட்டு சென்றனர். கோவிலுக்குள் தரிசனத்துக்கு செல்லும் பக்தர்கள் "சூட்கேஸ்", கைப்பை மற்றும் பெட்டிகள் கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் போலீசார் மெட்டல் டிடெக்டர் கருவி மூலம் கடுமையான சோதனை செய்த பிறகே பக்தர்கள் கோவிலுக்குள் தரிசனத்துக்கு செல்ல அனுமதிக்கப்படுகிறார்கள். இதேபோல கன்னியாகுமரியில் உள்ள திருப்பதி வெங்கடேஸ்வர பெருமாள் கோவில், சுசீந்திரம் தாணு மாலயன் சுவாமி கோவில், நாகர்கோவில் நாகராஜா கோவில், மண்டைக்காடு பகவதி அம்மன் கோவில் போன்ற கோவில்களிலும் அய்யப்ப பக்தர்களின் கூட்டம் அலைமோதுகிறது.

    மேலும் விவேகானந்தர் நினைவு மண்டபத்தை படகில் சென்று பார்ப்ப தற்காக படகு துறையில் அய்யயப்ப பக்தர்களின் கூட்டம் அலைமோதுகிறது. இது தவிர கன்னியாகுமரியில் உள்ள சுற்றுலா தலங்களான காந்தி நினைவு மண்டபம், காமராஜர் மணி மண்டபம், அரசு அருங்காட்சியகம், மியூசியம், மீன்காட்சி சாலை உள்பட அனைத்து இடங்களி லும் அய்யப்ப பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் கூட்டம் நிரம்பி வழிகிறது. இதனால் கன்னியாகுமரியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு உள்ளது. இதைத்தொடர்ந்து கன்னியாகுமரியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பா டும் செய்யப்பட்டுள்ளது. சிப்ட் முறையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

    • ரா ஜகோபுரம் கட்டுவதற்கான பணிகள் தொடங்கின.
    • ரா ஜகோபுரம் கட்டுவதற்கான நில அளவீடு செய்யும் பணியும் நடந்தது.

    கன்னியாகுமரி:

    கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலுக்கு தினமும் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளும் பக்தர்களும் வந்து தரிசனம் செய்து விட்டு செல்கிறார்கள்.

    இந்த கோவிலில் ராஜ கோபுரம் இல்லாதது பக்தர்கள் மத்தியில் பெரும் குறையாக இருந்து வந்தது. அஸ்திவாரத்தோடு நின்று போன ராஜகோபுரம் கட்டும் பணியை மீண்டும் தொடங்குவதற்காக தேவ பிரசன்னம் பார்க்கப்பட்டதில் கும்பாபிஷேகம் நடத்தி விட்டு பணியை தொடங்க வேண்டும் என்று அருள்வாக்கு கூறப்பட்டது. இதைத்தொடர்ந்து ரா ஜகோபுரம் கட்டுவதற்கான பணிகள் தொடங்கின. சமீபத்தில் ஸ்ரீரங்கம் ராஜ கோபுரத்தை கட்டிய ஸ்தபதியின் மகன் ஆனந்த் ஸ்தபதி மற்றும் தொல்லியல் துறையினர், இந்து சமய அறநிலையத்துறை வடி வமைப்பு பொறியாளர் முத்துசாமி தலைமையிலான வல்லுனர் குழுவினர் கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் ராஜகோபுரம் கட்டப்படும் இடத்தை நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

    மேலும் ராஜகோபுரம் கட்டும் பணி எந்தவித தடங்கலும் இன்றி நல்ல முறையில் நடக்க வேண்டி கணபதி ஹோமமும் மிரு திஞ்சய ஹோமமும் நடத்தப்பட்டது. ராஜகோபுரம் கட்டுவதற்கான நில அளவீடு செய்யும் பணியும் நடந்தது. இந்த நிலையில் இறுதி கட்ட ஆய்வாக இந்து சமய அற நிலையத் துறையின் தலைமை ஸ்தபதியும் மகா பலிபுரம் அரசு சிறப்பு கலைக் கல்லூரியின் முதல்வருமான தட்சணா மூர்த்தி தலைமை யிலான வல்லுனர் குழுவினர் இன்று காலை கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் ராஜகோபுரம் கட்டப்படும் இடத்தை நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

    இந்த ஆய்வின்போது குமரி மாவட்ட அறங்காவலர் குழு தலைவர் பிரபாராம கிருஷ்ணன், நாகர்கோவில் தேவசம் தொகுதி கோவில்களின் கண்காணிப்பாளரும் கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் மேலாளருமான ஆனந்த், மண்டல ஸ்தபதி செந்தில், மராமத்து பிரிவு பொறியாளர் ராஜ்குமார், மற்றும் அறங்காவலர் குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

    • வாள்-வில் அம்புக்கு கொலு மண்டபத்தில் பூஜை நடந்தது.
    • ஆண்டுக்கான நவராத்திரி திருவிழா கடந்த 15-ந்தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது.

    கன்னியாகுமரி:

    கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் ஆண்டுதோறும் புரட்டாசி மாதம் 10 நாட்கள் நவராத்திரி திருவிழா நடைபெறுவது வழக்கம். அதேபோல இந்த ஆண்டுக்கான நவராத்திரி திருவிழா கடந்த 15-ந்தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது.

    விழாவையொட்டி தினமும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், விசேஷபூஜை, சிறப்பு வழிபாடு, அலங்கார தீபாராதனை, அன்னதானம், வாகனபவனி, நாதஸ்வரக் கச்சேரி, பாட்டுக் கச்சேரி, பரத நாட்டியம் போன்றவை நடைபெற்று வருகிறது. இரவில் வெள்ளிக் கலைமான் வாகனம், வெள்ளி காமதேனு வாகனம், வெள்ளி இமயகிரி வாகனம், போன்ற வாகனங்களில் அம்மன் எழுந்தருளி கோவிலை சுற்றி 3 முறை மேளதாளம் முழங்க பவனி வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கும் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது.

    திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான பரிவேட்டை திருவிழா 10-ம் திருவிழாவான விஜயதசமி நாளான இன்று (செவ்வாய்கிழமை) மாலை நடக்கிறது. இதையொட்டி அம்மன் வேட்டைக்கு எழுந்தருளும் நிகழ்ச்சியும் குதிரைக்கு கொள்ளு, காணம் போன்ற உணவு வகைகள் படைத்து பூஜைகளும் நடத்தப்பட்டது.

    இன்று அதிகாலை 4.30 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. அதன் பின்னர் அம்மன் வேட்டைக்கு பயன்படுத்தும் வாள்-வில், அம்பு போன்ற ஆயுதங்களையும் அதன்அருகில் பாணாசுரன் என்ற அரக்கனின் உருவ பொம்மையும் வைத்து பூஜைகள் நடத்தப்பட்டது.

    தொடர்ந்து காலை 10.30 மணிக்கு கோவிலின் வெளிப்பிரகாரத்தில் உள்ள அலங்கார மண்டபத்தில் எலுமிச்சம் பழம் மாலைகளால் அலங்கரிக்கப்பட்ட வெள்ளிக் குதிரை வாகனத்தில் அம்மன் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்த நிகழ்ச்சி நடந்தது. அதைத் தொடர்ந்து மதியம் 1-மணிக்கு கோவிலில் இருந்து மகாதானபுரம் நோக்கி அம்மனின் பரிவேட்டை ஊர்வலம் தொடங்கியது.

    இந்த ஊர்வலத்தின் தொடக்க நிகழ்ச்சியாக கோவிலின் வெளிப்பிரகாரத்தில் உள்ள அலங்கார மண்டபத்தில் இருந்து வெள்ளிக்குதிரை வாகனத்தில் அம்மன் வெளியே வரும் போதும், கோவிலின் பிரதான நுழைவு வாசல் வழியாக சன்னதி தெருவுக்கு வரும் போதும் போலீசார் துப்பாக்கி ஏந்தி நின்று அணிவகுப்பு மரியாதை அளித்தனர்.

    ஊர்வலத்துக்கு முன்னால் நெற்றிப்பட்டம் அணிவித்து அலங்கரிக்கப்பட்ட யானைஅணிவகுத்து சென்றது. அதைத் தொடர்ந்து 2 குதிரைகளில் பக்தர்கள் வேடம் அணிந்து சென்றனர். இதனையடுத்து கோவில் ஊழியர் வாள் ஏந்திய படியும், சுண்டன்பரப்பை பரம்பரை தர்மகர்த்தா வில் -அம்பு ஏந்திய படியும் சென்றனர். அதனைத் தொடர்ந்து பஞ்ச வாத்தியம் கேரள புகழ் தையம் ஆட்டம், சிங்காரி மேளம், செண்டை மேளம், ஒயிலாட்டம், கோலாட்டம், தேவராட்டம், மயிலாட்டம், நாதஸ்வரம் மற்றும் 100-க்கும் மேற்பட்ட கிராமிய கலைஞர்கள் பங்கேற்ற கிராமிய கலை நிகழ்ச்சிகள் இடம் பெற்றன. கோவிலில் இருந்து புறப்பட்ட அம்மனின் பரிவேட்டை ஊர்வலம் சன்னதி தெரு, தெற்கு ரதவீதி, மேலரத வீதி, வடக்கு ரதவீதி, மெயின் ரோடு, ரெயில் நிலைய சந்திப்பு, விவேகானந்தபுரம் சந்திப்பு, ஒற்றைப்புளி சந்திப்பு, பழத்தோட்டம் சந்திப்பு, பரமார்த்தலிங்கபுரம், நான்கு வழிச்சாலை ரவுண்டானா சந்திப்பு வழியாக மாலை 6.30 மணிக்கு மகாதானபுரத்தில் உள்ள பரிவேட்டை மண்டபத்தை சென்று அடைகிறது.

    அங்குபகவதி அம்மன், பாணாசுரன் என்ற அரக்கனை அம்புகள் எய்து வதம் செய்து அழிக்கும் பரிவேட்டை நிகழ்ச்சி நடக்கிறது. அதனைத் தொடர்ந்து மகாதானபுரத்தில் உள்ள நவநீத சந்தான கோபால கிருஷ்ண சுவாமி கோவிலுக்கு பகவதி அம்மன் செல்கிறார். அங்கு அம்மனுக்கும் நவநீத சந்தான கோபால சுவாமிக்கும் ஒரே நேரத்தில் தீபாரதனை நடக்கிறது.

    அதன் பிறகு அம்மனின் வாகனம் பஞ்சலிங்கபுரத்தில் பவனி வரும் நிகழ்ச்சி நடக்கிறது. வழிநெடுகிலும் பக்தர்கள் அம்மனுக்கு எலுமிச்சம் பழம் மாலை அணிவித்து தேங்காய் பழம் படைத்து "திருக்கணம்" சாத்தி வழிபட்டனர். அம்மனின் வாகன பவனி முடிந்ததும் மகாதானபுரம் ரவுண்டானா சந்திப்பில் உள்ள காரியக்காரன் மடம் வந்து வெள்ளி குதிரை வாகனத்தில் இருந்து மாறி வெள்ளி பல்லக்கில் எழுந்தருளி மீண்டும் கன்னியாகுமரி நோக்கி புறப்பட்டுச் செல்லும் நிகழ்ச்சி நடக்கிறது.

    இரவு 10 மணிக்கு கன்னியாகுமரி வந்தடைந்ததும் அம்மனுக்கு முக்கடல் சங்கமத்தில் ஆராட்டு நிகழ்ச்சி நடக்கிறது. அதன்பிறகு வருடத்தில் 5 முக்கிய விசேஷ நாட்களில் மட்டும் திறக்கப்படும் கோவிலின் கிழக்கு வாசல் திறக்கப்பட்டு அதன் வழியாக பகவதி அம்மன் கோவிலுக்குள் பிரவேசிக்கும் நிகழ்ச்சி நடக்கிறது.

    விழா ஏற்பாடுகளை குமரி மாவட்ட திருக்கோவில் நிர்வாகம், கன்னியாகுமரி பகவதி அம்மன் திருக்கோவில் நிர்வாகம் இணைந்து செய்து வருகிறது. பரிவேட்டை ஊர்வலத்தையொட்டி நாகர்கோவில்-கன்னியாகுமரி தேசிய நெடுஞ்சாலையிலும், அஞ்சுகிராமம் கன்னியாகுமரி சாலையிலும் இன்று பகல் 11 மணிக்கு பிறகு போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. கன்னியாகுமரி போலீஸ் துணை சூப்பிரண்டு மகேஷ்குமார் தலைமையில் 200-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுஉள்ளனர்.

    கன்னியாகுமரி கடல் நடுவில் அமைந்து உள்ள விவேகானந்தர் மண்டபத்துக்கு பகல் 12 மணி முதல் படகு போக்குவரத்து ரத்து செய்யப்பட்டது.

    • திரளான பெண் பக்தர்கள் தரிசனம்
    • காலை 8 மணிக்கு ஸ்ரீபலி பூஜையும், நிவேத்திய பூஜையும் நடந்தது.

    கன்னியாகுமரி:

    கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் புரட்டாசி பவுர்ணமி விழா கோலாகலமாக கொண்டா டப்பட்டது. இதையொட்டி அதிகாலை 4.30 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு நிர்மால்ய பூஜையும், விஸ்வரூப தரிசனமும் நடந்தது. அதைத்தொடர்ந்து 5 மணிக்கு அம்மனுக்கு அபிஷேகமும் 6 மணிக்கு தீபாராதனையும் நடந்தது. பின்னர் காலை 8 மணிக்கு ஸ்ரீபலி பூஜையும், நிவேத்திய பூஜையும் நடந்தது.

    அதன்பிறகு 10 மணிக்கு அம்மனுக்கு எண்ணெய், பால், தயிர், நெய் பன்னீர், இளநீர், தேன், களபம், சந்தனம், குங்குமம், பஞ்சாமிர்தம் மற்றும் புனித நீரால் சிறப்பு அபிஷேகம் நடந்தது. அதன்பிறகு அம்மனுக்கு காஞ்சி சங்கராச்சாரியார் காணிக்கையாக வழங்கிய தங்கக்கிரீடம், வைரக்கல் மூக்குத்தி, தங்க ஆபரணங்கள் மற்றும் தங்க அங்கி அணிவிக்கப்பட்டு சந்தனகாப்பு அலங்காரத்துடன் அம்மன் பக்தர்களுக்கு அருள்பாலித்த நிகழ்ச்சி நடந்தது. அதைத்தொடர்ந்து 11.30 மணிக்கு அலங்கார தீபாராதனையும், பகல் 12 மணிக்கு அன்னதானமும் நடந்தது. இதில் திரளான பெண் பக்தர்கள் கலந்துகொண்டு அம்மனை தரிசனம் செய்தனர். மாலை 6 மணிக்கு சாயராட்சை தீபாராதனை நடக்கிறது.

    அதைத்தொடர்ந்து அம்மனுக்கு முல்லை, பிச்சி, ரோஜா, மல்லிகை, துளசி, தெத்தி, தாமரை, உள்பட பல வகையான மலர்களால் அம்மனுக்கு புஷ்பாபிஷேகம் நடக்கிறது. இரவு 8 மணிக்கு அம்மனை வெள்ளி பல்லக்கில் எழுந்தருள செய்து கோவிலின் உள் பிரகாரத்தை சுற்றி மேளதாளம் முழங்க 3 முறை வலம் வரச்செய்யும் நிகழ்ச்சி நடக்கிறது. பின்னர் அம்மனை வெள்ளி சிம்மா சனத்தில் அமரச்செய்து தாலாட்டு நிகழ்ச்சியும் அதைத்தொடர்ந்து அத்தாழ பூஜையும், ஏகாந்த தீபாராதனையும் நடக்கிறது.

    • 2 ஆதீனங்களும் ஆடி வெள்ளிக்கிழமையான நேற்று கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் நடந்த சிறப்பு வழிபாட்டில் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
    • மேளதாளம் முழங்க பூரண கும்பம் மரியாதையுடன் வரவேற்றனர்.

    கன்னியாகுமரி:

    தருமபுர ஆதீனம் 27-வது குரு மகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் மற்றும் காசி திருப்பனந்தாள் திருமடத்தின் ஆதீனம் ஸ்ரீலஸ்ரீ சபாபதி சுவாமிகள் ஆகியோர் நேற்று மாலை கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலுக்கு வந்தனர்.

    அவர்களை குமரி மாவட்ட திருக்கோவில்களின் இணை ஆணையர் ரத்தினவேல் பாண்டியன், நாகர்கோவில் தேவசம் தொகுதி கோவில்களின் கண்காணிப்பாளரும் கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் மேலாளருமான ஆனந்த் ஆகியோர் மேளதாளம் முழங்க பூரண கும்பம் மரியாதையுடன் வரவேற்றனர்.

    பின்னர் 2 ஆதீனங்களும் ஆடி வெள்ளிக்கிழமையான நேற்று கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் நடந்த சிறப்பு வழிபாட்டில் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பின்னர் கோவிலில் உள்ள ஸ்ரீ கால பைரவர், ஆஞ்சநேயர், தியாக சவுந்தரி அம்மன், பால சவுந்தரி அம்மன், ஸ்ரீதர்மசாஸ்தா அய்யப்பன் சன்னதி மற்றும் ஸ்ரீநாகராஜர் சூரிய பகவான் ஆகிய சன்னதிகளுக்கும் சென்று சாமி தரிசனம் செய்தனர். இதேபோல் மதுரை ஐகோர்ட் நீதிபதி நாகா அர்ஜுன் மற்றும் ஆந்திரா ஐகோர்ட்டு நீதிபதி சாம்பசிவராவ் நாயுடு ஆகியோர் தங்களது குடும்பத்துடன் நேற்று மாலை கன்னியாகுமரி வந்தனர். இவர்களும் பகவதி அம்மன் கோவிலில் சுவாமி தரிசனம் செய்தனர்.

    மேலும் அவர்கள் இன்று காலை சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோவிலுக்கும் சென்று பயபக்தியுடன் சாமி கும்பிட்டனர். 2 ஐகோர்ட் நீதிபதிகள் வருகையையொட்டி கன்னியாகுமரி மற்றும் சுசீந்திரம் பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.

    • கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் வைகாசி விசாக பெருந்திரு விழா கடந்த 24-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
    • 10 நாட்களாக நடந்து வந்த திருவிழா இன்றுடன் முடிவடைகிறது.

    கன்னியாகுமரி:

    கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் வைகாசி விசாக பெருந்திரு விழா கடந்த 24-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. 10 நாட்களாக நடந்து வந்த திருவிழா இன்றுடன் முடிவடைகிறது.

    திருவிழாவையொட்டி தினமும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், விசேஷ பூஜை, சிறப்பு வழிபாடுகள், அலங்கார தீபாராதனை, அன்னதானம், வாகன பவனி, சப்பர ஊர்வலம், நாதஸ்வர கச்சேரி, இன்னிசை கச்சேரி, பக்தி சொற்பொழிவு மற்றும் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன.

    9-ம் திருவிழாவான நேற்று மாலை 6.30 மணிக்கு கன்னியாகுமரி பார்வதிகாரர் குடும்பத்தினர் சார்பில் மண்டகப்படி நிகழ்ச்சி நடந்தது. இதையொட்டி கோவிலில் இருந்து பல வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்ட வெள்ளி கலைமான் வாகனத்தில் அம்மனை எழுந்தருள செய்து மேளதாளம் முழங்க சன்னதி தெரு வழியாக தெற்குரத வீதியில் உள்ள கன்னியம்பலம் மண்டபத்துக்கு ஊர்வலமாக எடுத்து வந்தனர். அங்கு அம்மனுக்கு சிறப்பு வழிபாடும் விசேஷ பூஜை களும், அலங்கார தீபாராத னையும் நடந்தது. இதில் மண்டகப்படி கட்டளைதாரர்கள் ஹரிகரன், சிவசுப்பிரமணியன் விஜய் உள்பட திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர்.

    பின்னர் இரவு 7 மணிக்கு சமயசொற்பொழிவும் அதைத்தொடர்ந்து இரவு 7.30 மணிக்கு பக்தி பஜனை யும் நடந்தது. அதன்பிறகு பகவதி அம்மன் பல வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்ட வெள்ளி கலைமான் வாகனத்தில் எழுந்தருளி வீதி உலா வந்த நிகழ்ச்சி நடந்தது. வாகன பவனி சன்னதி தெரு, தெற்கு ரத வீதி, மேல ரதவீதி, வடக்கு ரதவீதி, நடுத்தெரு, கீழரதவீதி, சன்னதிதெரு வழியாக மீண்டும் கோவிலை வந்தடைந்தது. வழிநெடு கிலும் பக்தர்கள் வாகனத்தில் எழுந்தருளி இருந்த அம்மனுக்கு தேங்காய், பழம் படைத்து திருக்கணம் சாத்தி வழிபட்டனர்.

    • வழிநெடுகிலும் பக்தர்கள் திரண்டு வழிபாடு
    • ஜூன் மாதம் 2-ந்தேதி வரை 10 நாட்கள் தொடர்ந்து நடக்கிறது.

    கன்னியாகுமரி:

    கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் வைகாசி விசாக பெருந்திரு விழா நேற்று முன்தினம் கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    இந்த திருவிழா வருகிற ஜூன் மாதம் 2-ந்தேதி வரை 10 நாட்கள் தொடர்ந்து நடக்கிறது. திருவிழாவை யொட்டி தினமும் அம்ம னுக்கு சிறப்பு அபிஷேகம், விசேஷ பூஜை, சிறப்பு வழிபாடுகள், அலங்கார தீபாராதனை, அன்னதானம், வாகன பவனி, சப்பர ஊர்வலம், நாதஸ்வர கச்சேரி, இன்னிசை கச்சேரி, பக்தி சொற்பொழிவு மற்றும் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன.

    2-ம் திருவிழாவான நேற்று மாலை சமய உரையும், அதைத்தொடர்ந்து வயலின் இன்னிசை கச்சேரியும், பரதநாட்டியமும் நடந்தது. அதன்பிறகு அம்மன் பல வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்ட கிளி வாகனத்தில் எழுந்தருளி மேளதாளங்கள் முழங்க வீதி உலா வந்த நிகழ்ச்சி நடந்தது. கோவிலில் இருந்து புறப்பட்ட இந்த வாகன பவனி சன்னதி தெரு, தெற்கு ரத வீதி, மேல ரதவீதி, வடக்கு ரதவீதி, நடுத்தெரு, கீழரத வீதி வழியாக கன்னியம்பலம் மண்டபத்தை சென்றடைந்தது. அந்த மண்டபத்துக்குள் அம்மன் சிறிதுநேரம் இளைப்பாறும் நிகழ்ச்சி நடந்தது.

    அதன்பிறகு அம்மனுக்கு தீபாராதனை நடந்தது. பின்னர் அங்கிருந்து வாகன பவனி புறப்பட்டு சன்னதி தெரு வழியாக மீண்டும் கோவிலை வந்தடைந்தது. வழிநெடுகிலும் பக்தர்கள் வாகனத்தில் எழுந்தருளி இருந்த அம்மனுக்கு தேங்காய் பழம் படைத்து "திருக்கணம்"சாத்தி வழிபட்டனர்.

    இந்த நிகழ்ச்சியில் நாகர்கோவில் தேவசம் தொகுதி கோவில்களின் கண்காணிப்பாளரும், கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் மேலாளருமான ஆனந்த் உள்பட திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர்.

    3-வது நாளான இன்று அதிகாலை 5 மணி மற்றும் காலை 10 மணிக்கு தமிழக சட்டமன்ற பா.ஜ.க. தலைவர் நயினார் நாகேந்திரன் எம்.எல்.ஏ. மற்றும் செந்தில் ஆண்டவர் பாதயாத்திரை குழு சார்பில் பகவதி அம்மனுக்கு எண்ணெய், பால், தயிர், இளநீர், பன்னீர், நெய், தேன், மஞ்சள் பொடி, சந்தனம், களபம், குங்குமம், பஞ்சாமிர்தம் மற்றும் புனித நீரால் சிறப்பு அபிஷேகம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர்.

    முன்னதாக அன்ன வாகனத்தில் அம்மன் எழுந்தருளி வீதி உலா வந்த நிகழ்ச்சி நடந்தது. காலை 11 மணிக்கு அம்மனுக்கு தங்கக் கிரீடம் வைரக்கல் மூக்குத்தி மற்றும் தங்க ஆபரணங்கள் அணி விக்கப்பட்டு சந்தனகாப்பு அலங்கா ரத்துடன் பக்தர்களுக்கு அருள்பாலித்த நிகழ்ச்சி நடந்தது.

    அதைத்தொடர்ந்து 11.30 மணிக்கு அம்மனுக்கு அலங்கார தீபாராதனையும், பகல் 12 மணிக்கு அன்ன தானமும் நடந்தது. மாலை 6 மணிக்கு சமய உரையும், இரவு 7 மணிக்கு பக்தி பஜனையும், 9 மணிக்கு அம்மன் அன்ன வாகனத்தில் எழுந்தருளி வீதி உலா வரும் நிகழ்ச்சியும் நடக்கிறது.

    • திரளான பக்தர்கள் பங்கேற்பு
    • அம்மனுக்கு வைரக்கிரீடம், வைரக்கல் மூக்குத்தி தங்க ஆபரணங்கள் மற்றும் தங்க அங்கி அணிவிக்கப்பட்டு சந்தனகாப்பு அலங்காரத்துடன் அம்மன் பக்தர்களுக்கு அருள்பாலிக்கும் நிகழ்ச்சி நடந்தது.

    கன்னியாகுமரி:

    உலகப்புகழ் பெற்ற கோவில்களில் கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலும் ஒன்று. இந்த கோவிலில் ஒவ்வொரு மாதமும் பவுர்ணமி விழா கொண்டா டப்படுவது வழக்கம். அதேபோல மார்கழி மாதத்துக்கான பவுர்ணமி விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது.

    இதையொட்டி அதிகாலை கோவில் நடை திறக்கப்பட்டு நிர்மால்ய பூஜையும், விஸ்வரூப தரிசனமும் நடந்தது. அதைத்தொடர்ந்து அம்மனுக்கு அபிஷேகமும், தீபாராதனையும் நடந்தது.

    பின்னர் காலை ஸ்ரீபலி பூஜையும், நிவேத்திய பூஜையும் நடந்தது. அதன் பிறகு 10 மணிக்கு அம்மனுக்கு எண்ணெய், பால், தயிர், நெய் பன்னீர், இளநீர், தேன், களபம், சந்தனம், குங்குமம், பஞ்சாமிர்தம் மற்றும் புனித நீரால் சிறப்பு அபிஷேகம் நடந்தது. அதன்பிறகு அம்மனுக்கு வைரக்கிரீடம், வைரக்கல் மூக்குத்தி தங்க ஆபரணங்கள் மற்றும் தங்க அங்கி அணிவிக்கப்பட்டு சந்தனகாப்பு அலங்காரத்து டன் அம்மன் பக்தர்களுக்கு அருள்பாலிக்கும் நிகழ்ச்சி நடந்தது.

    அதைத்தொடர்ந்து அலங்கார தீபாராதனையும், அன்னதானமும் நடந்தது. மாலை சாயராட்சை தீபாராதனை நடந்தது. அம்மனுக்கு முல்லை, பிச்சி, ரோஜா, துளசி, தாமரை உள்பட பல வகையான மலர்களால் அம்மனுக்கு புஷ்பாபிஷேகம் நடந்தது.

    இரவு அம்மனை வெள்ளிப் பல்லக்கில் எழுந்தருள செய்து கோவிலின் உள் பிரகா ரத்தை சுற்றி மேளதாளம் முழங்க 3 முறை வலம் வரச் செய்த நிகழ்ச்சி நடந் தது. அம்மனை வெள்ளி சிம்மா சனத்தில் அம ரச்செய்து தாலாட்டு நிகழ்ச்சி யும் அதைத்தொ டர்ந்து அத்தாழ பூஜையும் ஏகாந்த தீபாரா தனையும் நடந்தது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வா கத்தினர் செய்திரு ந்தனர்.

    ×