search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சித்தோடு"

    • பஸ்சின் முன்பகுதி திடீரென தீப்பிடித்து எரிய தொடங்கி உள்ளது.
    • துரித நடவடிக்கை காரணமாக உயிரிழப்புகள் ஏதும் ஏற்படவில்லை.

    சித்தோடு:

    சென்னை கோயம்பேட்டில் இருந்து கோவை செல்லும் தனியார் ஆம்னி பஸ் நேற்று இரவு சுமார் 40-க்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றிக்கொண்டு வந்து கொண்டிருந்தது.

    இந்த பஸ்சை டிரைவர் கார்த்திகேயன் இயக்கிய நிலையில், பயணிகளில் சிலர் ஆங்காங்கே அவர்களுக்கு தேவையான இடங்களில் இறங்கினர்.

    இந்நிலையில் சுமார் 15 பயணிகளுடன் ஈரோடு மாவட்டம் சித்தோடு அருகே செல்லும் தேசிய நெடுஞ் சாலையில், பஸ் இன்று அதிகாலை சென்று கொண்டிருந்த போது, பஸ்சின் முன்பகுதி திடீரென தீப்பிடித்து எரிய தொடங்கியுள்ளது.

    இதனால் அதிர்ச்சி அடைந்த டிரைவர் கார்த்திக் கேயன், பஸ்சை உடனடியாக சாலை யோரமாக நிறுத்திய தோடு, உள்ளே இருந்த பயணிகளுக்கு தகவல் தெரிவித்து உடனடியாக வெளியேற்றியுள்ளார். டிரைவரின் இந்த துரித நடவடிக்கை காரணமாக உயிரிழப்புகள் ஏதும் ஏற்படாத நிலையில், பஸ் முற்றிலும் எரிந்து சேதமானது.

    இதுகுறித்து தகவலறிந்து வந்த சித்தோடு போலீசார், தீயணைப்பு துறை வீரர்கள் உதவியுடன் பஸ்சில் பற்றி எரிந்து கொண்டிருந்த தீயை அணைத்தனர்.

    இச்சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

    • ஆவின் நிறுவனம் நஷ்டத்தில் இயங்குகிறது.
    • காத்திருப்பு போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

    ஈரோடு:

    தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத் தலைவர் ராஜேந்திரன், தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் நலச்சங்கத் தலைவர் ஈசன் முருகசாமி ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

    தமிழகத்தில் விவசாயிகள் அதிக அளவில் உற்பத்தி செய்யும் பாலுக்கு கொள் முதல் விலை உயர்த்தப் படவில்லை. ஆனால் புண்ணாக்கு, தவிடு, தீவனங்களின் விலை மற்றும் ஆள் கூலி கடுமையாக உயர்ந்துள்ளன.

    ஆவின் நிறுவனம் நஷ்டத்தில் இயங்குகிறது. ஐரோப்பி யா, அமெரிக்கா போன்ற நாடுகளில் பாலுக்கான உற்பத்தி செலவை அரசே மானிய மாக வழங்குகிறது.

    இவ்வாறான கட்டமைப்பு இங்கு இல்லாததால் விவசா யிகளும், ஆவின் நிறுவ னமும் நலிந்து வருகிறோம்.

    எனவே பசும்பாலுக்கு ரூ.42-ம், எருமை பாலுக்கு ரூ.51-ம் கொள்முதல் விலையாக நிர்ணயம் செய்து வழங்க வேண்டும். நலிந்து வரும் ஆவின் நிறுவனத்தை சீரமைக்க வேண்டும்.

    கூட்டுறவு சங்க செயலர்களை பணிவரன் முறை செய்து உரிய சம்பளம், பணி பாது காப்பு வழங்க வேண்டும்.

    இக்கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் ஏப்ரல் மாதம் 3-ந் தேதி காலை 10 மணி முதல் சித்தோடு ஆவின் ஆலை அலுவலகம் முன்பாக தொடர் காத்திருப்பு போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர்கள் அதில் கூறியுள்ளனர். 

    • சூரியம்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடக்கிறது.

    ஈரோடு:

    சூரியம்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடக்கிறது.

    இதையொட்டி நாளை (திங்கட்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சித்தோடு, ராயபாளையம், சுண்ணாம்பு ஓடை, அமராவதி நகர்,

    தண்ணீர் பந்தல் பாளையம், ஆர்.என். புதூர், கோணவாய்க்கால், லட்சுமி நகர், பெருமாள் மலை, ஐ.ஆர்.டி.டி., குமிளம்பரப்பு, கங்காபுரம், செல்லப்பம் பாளையம், பேரோடு, மாமரத்துப்பாளையம்,

    மேட்டு பாளையம், நொச்சி பாளையம், தயிர் பாளையம் கொங்கம் பாளையம், நரிப்பள்ளம், எல்லப்பாளையம், சேமூர், சூளை, சொட்டையம் பாளையம், ராசாம்பாளையம், தொட்டம்பட்டி,

    பி.பெ.அக்ரகாரம், மரவபாளையம், சி.எஸ். நகர், கே.ஆர்.குளம், காவேரி நகர், பாலாஜி நகர், மாணிக்கம் பாளையம், ஈ.பி.பி. நகர், எஸ்.எஸ்.டி. நகர், வேலன் நகர், ஊத்துக்காடு,

    வாவிக்கடை, பெருந்துறை சந்தை, அணைக்கட்டு, பழையூர், பெரியார் நகர், பூலப்பாளையம், பெரிய புலியூர், வளையக்கார பாளையம், மூவேந்தர் நகர், எலவமலை பகுதிகளில் மின் வினியோகம் இருக்காது என மின்வாரிய செயற் பொறியாளர் ராமச்சந்திரன் தெரிவித்தார்.

    ×