search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "குறைந்தபட்ச ஊதியம்"

    • விருதுநகர் மாவட்டத்தில் குறைந்தபட்ச ஊதியம் வழங்காத 5 நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.
    • இந்த தகவலை தொழிலாளர் உதவி ஆணையர் தெரிவித்துள்ளார்.

    விருதுநகர்

    தமிழ்நாடு தொழிலாளர் நல ஆணையர் ஆணையின்படி கடந்த 18 முதல் 20-ந் தேதி வரை ஆய்வுகள் மேற்கொள்ள உத்தரவிடப்பட்டது.

    அதன்படி ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டதில், தொழிலாளர்களுக்கு குறைந்தபட்ச ஊதியம் வழங்காத 5 நிறுவனங்கள் கண்டறியப்பட்டன. அந்த நிறுவனங்களின் மீது மதுரை தொழிலாளர் இணை ஆணையர் நீதி உதவி ஆய்வர்கள் மேற்கொண்டனர். இந்த தகவலை விருதுநகர் தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) மைவிழிசெல்வி தெரிவித்தார்.

    • குறைந்தபட்ச ஊதியம் மறுநிர்ணயம் செய்வது தொடர்பான கருத்து கேட்பு கூட்டம் நடந்தது.
    • மேற்கண்ட தகவலை விருதுநகர் தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) காளிதாஸ் தெரிவித்துள்ளார்.

    விருதுநகர்

    1948-ம் ஆண்டு குறைந்தபட்ச ஊதியச் சட்டப்பிரிவு 5ன்படி, தீப்பெட்டி உற்பத்தி தொழிலில் ஈடுபடும் தொழிலாளர்களுக்கு நிர்ணயம் செய்யப்பட்ட குறைந்தபட்ச ஊதிய விகிதங்களை மாற்றியமைக்க உரிய விசாரணைகள் மேற்கொண்டு மாநில அரசுக்கு தெரிவிப்பதற்காக தமிழக அரசு ஒரு ஆலோசனைக் குழுவை அமைத்து ஆணை பிறப்பித்தது.

    அதில் மதுரை கூடுதல் தொழிலாளர் ஆணையர் தலைவராகவும், விருதுநகர் தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) செயலாளராகவும், சிவகாசி பொருளாதாரம் மற்றும் புள்ளியில் துறை உதவி இயக்குநர் ஸ்ரீதர், எல்.பி.எப். தொழிற்சங்கத்தை சேர்ந்த மாடசாமி, சி.ஐ.டியு. சார்ந்த மகாலட்சுமி, ஏ.ஐ.டியு.சி. ஜீவானந்தம், கோவில்பட்டி விஜய்ஆனந்த், அகில இந்திய சேம்பர் ஆப் மேட்ச் இன்டஸ்ட்ரீஸ் செயலாளர் நூர்முகமது, செங்கன் மேட்ச் இன்டஸ்டிரீஸ் உரிமையாளர் லட்சுமணன் ஆகியோர் உறுப்பினர்களாகவும் நியமிக்கப்பட்டனர்.

    இந்த குழுவின் கருத்துக் கேட்பு கூட்டம் மற்றும் களப்பணி சாத்தூரில் அமைந்துள்ள ஜோதி மேட்ச் ஒர்க்ஸ், மலைமகுடம் மேட்ச் ஒர்க்ஸ், சிவகாசி தாலுகா சித்துராஜபுரத்தில் உள்ள சாந்தி கலர் மேட்ச் ஒர்க்ஸ், விருதுநகர் தாலுகா சந்திரகிரி புரத்தில் அமைந்துள்ள தி பிரசிடெண்ட் மேட்ச் கம்பெனியிலும் நடந்தது.

    இந்த களப்பணியின் போது தீப்பெட்டி தயாரிக்கும் தொழிலில் ஈடுபடும் தொழி லாளர்கள் மற்றும் வேலை யளிப்பவர்களிடம் ஊதியம் நிர்ணயம் செய்வது தொடர்பாக கருத்துக் கேட்கப்பட்டது.

    இந்த களப்பணியில் தீப்பெட்டி தயாரிக்கும் தொழிலுக்கு ஊதியம் நிர்ணயம் செய்யும் குழுவின் தலைவர், மதுரை கூடுதல் தொழிலாளர் ஆணையர் குமரன், செயலாளர்-விருதுநகர் தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) காளிதாஸ், மற்றும் குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

    மேற்கண்ட தகவலை விருதுநகர் தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) காளிதாஸ் தெரிவித்துள்ளார்.

    • அகில இந்திய விவசாயத் தொழிலாளா்கள் சங்கம் சாா்பில் மண்டல அளவிலான கருத்தரங்கம் நடைபெற்றது.
    • அக்னிபாத் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தினா்.

    திருப்பூர் :

    திருப்பூரில் சி.ஐ.டி.யூ. அகில இந்திய விவசாயிகள் சங்கம், அகில இந்திய விவசாயத் தொழிலாளா்கள் சங்கம் சாா்பில் மண்டல அளவிலான கருத்தரங்கம் நடைபெற்றது.

    இதில் அகில இந்திய விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளா் குமாா் வரவேற்புரையாற்றினாா். சிஐடியூ. மாவட்டத் தலைவா் ரங்கராஜ் தலைமை வகித்தாா்.

    இதில் மத்திய பாஜக அரசுக்கு எதிராக தொழிலாளா்கள், விவசாயிகள் மற்றும் விவசாயத் தொழிலாளா்கள் சங்கங்களின் சாா்பில் 14 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி புதுடெல்லியில் வரும் ஏப்ரல் 5-ந் தேதி நடைபெறும் பேரணியின் அவசியம் குறித்து விளக்கப்பட்டது.

    மேலும் அனைத்துத் தொழிலாளா்களுக்கும் குறைந்தபட்ச ஊதியமாக மாதம் ரூ.26 ஆயிரம் வழங்குவதுடன் மாதம் ரூ.10 ஆயிரம் ஓய்வூதியம் வழங்க வேண்டும். அக்னிபாத் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தினா்.

    ×