என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
நீங்கள் தேடியது "ஏசுஆலய ஆண்டு விழா"
- 39-வது ஆண்டு விழா சிறப்பாக கொண்டப்பட்டது.
- மறைமாவட்ட முதன்மை குரு கிறிஸ்டோபர் லாரன்ஸ் தலைமையில் திருவிழா சிறப்பு திருப்பலி நடைபெற்றது.
ஊட்டி,
ஊட்டி அப்பர் பஜாரில் வீற்றிருக்கும் குழந்தை ஏசு ஆலயத்தின் 39-வது ஆண்டு விழா சிறப்பாக கொண்டப்பட்டது.
கடந்த புதன் கிழமை மாலை பங்கு தந்தை செல்வநாதன் கொடியேற்றி வைத்து விழாவை தொடங்கி வைத்தார்.கோத்தகிரி மரியன்னை ஆலய உதவி பங்கு தந்தை ஜூட் அமலநாதன் 3 நாட்கள் சிறப்பு மறையுரை நிகழ்த்தி திருப்பலி நிறைவேற்றி சிறப்பித்தார்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை காலை 10.30 மணிக்கு மறைமாவட்ட முதன்மை குரு கிறிஸ்டோபர் லாரன்ஸ் தலைமையில் திருவிழா சிறப்பு திருப்பலி நடைபெற்றது.
மறைமாவட்ட பொருளாளர் ஸ்டீபன் லாசர், உதவி பங்கு குருக்கள் பிரெட்ரிக், ஜோசப் மற்றும் பங்கு தந்தை இணைந்து திருப்பலி சிறப்பித்தனர். மதியம் திருவிழா அன்பின் விருந்து நடைபெற்றது.
பிற்பகல் 3 மணிக்கு புனித சூசையப்பர் ஆலய பங்கு குரு சிஜோ ஜார்ஜ் எடக்குடியில் தலைமையில் மலையாள சிறப்பு திருப்பலி நடைபெற்றது .
மாலை 5.30 மணிக்கு குன்னூர் ஆழ்வார்பேட்டை புனித சூசையப்பர் ஆலய உதவி பங்கு குரு விமல் பாக்கியநாதன் சிறப்பு திருப்பலி மறையுரை நிகழ்த்தி சிறப்பித்தார்.
பின்னர் குழந்தை ஏசு ஆடம்பர தேர் பவனி நடைபெற்று இறை ஆசீர் வழங்கப்பட்டது . அனைத்து ஏற்பாடுகளும் பங்கு குரு செல்வநாதன் பங்கு மக்கள் மற்றும் இளைஞர் இயக்கம் செய்திருந்தனர்.