search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ரூ.37 கோடி"

    • கண்ணாடி கூண்டு பாலம் 97 மீட்டர் நீளமும் 4 மீட்டர் அகலமும் கொண்டதாக அமைக்கப்படுகிறது.
    • பாலத்தின் மீது நடந்து செல்லும் போது நடந்து செல்லும் பாதையின் கீழே கடல் அலையை ரசிக்கும் வண்ணமாக அமைக்கப்பட உள்ளது.

    கன்னியாகுமரி:

    கன்னியாகுமரி வரும் சுற்றுலாப் பயணிகள் கடல் நடுவில் அமைந்துள்ள சுவாமி விவேகானந்தர் நினைவு மண்ட பம் மற்றும் 133 அடி உயர திருவள்ளுவர் சிலை ஆகியவற்றை படகில் பார்வை யிடுவதில் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.

    இந்தநிலையில் விவேகானந்தர் நினைவு மண்டபம் மற்றும் திருவள்ளுவர் சிலை இடையேகண்ணாடி கூண்டுபாலம் அமைக்க தமிழக அரசு உத்தரவிட்டு உள்ளது.

    அதன்படி ரூ.37 கோடி செலவில் கண்ணாடி கூண்டு பாலம் அமைக்கும் பணியினை சென்னையைச் சேர்ந்த பிரபல கட்டுமான நிறுவனம் டெண்டர் எடுத்துஉள்ளது. இந்த கண்ணாடி கூண்டு பாலம் 97 மீட்டர் நீளமும் 4 மீட்டர் அகலமும் கொண்டதாக அமைக்கப்படுகிறது. இந்தப் பாலத்தின் மீது சுற்றுலா பயணிகள் நடந்து செல்லும் போது தாங்கள் நடந்து செல்லும் பாதையின் கீழே கடல் அலையை ரசிக்கும் வண்ணமாக வெளிநாடுகளில் அமைக்கப்பட்டுஉள்ளது போல இந்த கண்ணாடி கூண்டு பாலம் அமைக்கப் பட உள்ளது.இதற்கான முதற்கட்ட ஆய்வு பணி இன்றுகாலை தொடங்கியது.விவேகானந்தர் நினைவு மண்டபம் மற்றும் திருவள்ளுவர் சிலை ஆகிய இரண்டு பாறைகளின் மாதிரிகளை சேகரித்து சென்னை ஐ.ஐ.டி. க்கு அனுப்பி பாறைகளின் சிறத்தன்மையை ஆய்வு செய்யும் பணி தொடங்கியது. இந்த ஆய்வுகளின் முடிவுகள் வந்த பிறகு விரைவில் பாலத்துக்கான கட்டுமான பணிகள் தொடங்கும் என்றும் ஒரு வருடத்துக்குள் பாலப் பணிகள் நிறைவடையும் என்றும் அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

    ×