என் மலர்
நீங்கள் தேடியது "கால்நடை சிறப்பு முகாம்"
- வெங்கடாம்பட்டி ஊராட்சி தேரிகுடியிருப்பில் கால்நடை சிறப்பு முகாம் நடைபெற்றது.
- பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் விழாவை ஊராட்சி மன்ற தலைவர் ஸாருகலா ரவி தொடங்கி வைத்தார்.
கடையம்:
கடையம் யூனியனுக்குட்பட்ட வெங்கடாம்பட்டி ஊராட்சி தேரிகுடியிருப்பில் கால்நடை சிறப்பு முகாம் நடைபெற்றது. வெங்கடாம்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் ஸாருகலா ரவி தலைமை தாங்கினார். முகாமில் சிறந்த கால்நடைகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. இதில் வெங்கடாம்பட்டி கால்நடை மருத்துவர், விவசாயிகள் மற்றும் ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
வெங்கடாம்பட்டி ஊராட்சி கோவிலூற்று ரேஷன் கடையில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் விழாவுக்கு வெங்கடாம்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் ஸாருகலா ரவி தலைமை ஏற்று தொடங்கி வைத்தார். கூட்டுறவு சங்க தலைவர் செல்லையா நாடார், கூட்டுறவு சங்க செயலாளர் வாசுகி ஆகியோர் முன்னிலை வகித்தனர். ரேஷன் கடை ஊழியர் மணிகண்டன், கோவிலூற்று தி.மு.க. கிளை செயலாளர் ஜெயராஜ், தொழில் அதிபர் அரவிந்த் மற்றும் ஊர் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.