search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தோரணமலை முருகன் கோவில்"

    • தோரணமலை முருகன் கோவில் சித்தர்கள், முனிவர்கள் வழிபட்ட புராண சிறப்புடையதாகும்.
    • கிரிவலப்பாதை முழுவதும் மூலிகைகள் நிறைந்திருப்பதால் உற்சாகம் ஏற்படுவதாக பக்தர்கள் கூறினர்.

    கடையம்:

    தென்காசி-கடையம் சாலையில் அமைந்துள்ளது தோரணமலை முருகன் கோவில். இக்கோவில் சித்தர்கள், முனிவர்கள் வழிபட்ட புராண சிறப்புடையதாகும். தோரணமலையில் கார்த்திகை மாத பவுர்ண மியை முன்னிட்டு ஆயிரக் கணக்கான பக்தர்கள் கிரிவலம் செய்த னர். கிரிவலப்பாதை முழுவதும் மூலிகைகள் நிறைந்தி ருப்பதால் கிரிவலம் சென்ற பக்தர்கள் உற்சாகம் ஏற்படுவதாக கூறினர்.

    மேலும் கிரிவலம் முடிந்த பின்பு உத்தர்காண்டு மாநிலத்தில் சுரங்கத்தில் சிக்கிய 41 தொழிலாளர்கள் நலமுடன் மீண்டு வர சிறப்பு கூட்டு பிரார்த்தனை நடைபெற்றது. கிரிவலத்தில் கலந்து கொண்ட பக்தர்கள் அனைவருக்கும் காலை அன்னதானம் மற்றும் சிறப்பு பிரசாதங்கள் வழங்கப் பட்டது.

    நிகழ்ச்சி ஏற்பாடுகளை தோரணமலை பரம்பரை அறங்காவலர் செண்பக ராமன் செய்திருந்தார்.

    • தோரணமலை அடிவாரத்தில் காந்தி, காமராஜ் உருவ படங்கள் அலங்கரிக்கப்பட்டு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது.
    • போட்டியில் கலந்து கொண்ட மாணவ, மாணவிகளுக்கு பரிசு வழங்கப்பட்டது.

    தென்காசி:

    கடையம் அருகே அமைந்துள்ள தோரண மலையில் காந்தி பிறந்த நாள், காமராஜர் நினைவு தினத்தை முன்னிட்டு தோரணமலை அடிவாரத்தில் காந்தி, காமராஜ் உருவ படங்கள் அலங்கரிக்கப்பட்டு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது. சிலம்பு பாப்பையா, சிலம்ப பயிற்சி மாணவர்களின் சிலம்பப் போட்டி நடைபெற்றது. போட்டியில் கலந்து கொண்ட மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவருக்கும் பிரசாதங்கள் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை தோரணமலை கோவில் பரம்பரை அறங்காவலர் செண்பகராமன் செய்திருந்தார்.

    • அதிகாலையில் பக்தர்கள் மலை உச்சியில் உள்ள சுனையில் இருந்து கிரக குடம் எடுத்து வந்தனர்.
    • சப்த கன்னியர்கள், விநாயகர் மற்றும் தெய்வங்களுக்கும் சிறப்பு அபிசேகம் நடைபெற்றது.

    கடையம்:

    தென்காசி-கடையம் சாலையில் அமைந்துள்ள தோரணமலை முருகன் கோவிலில் பொங்கல் பண்டிகையையொட்டி பக்தர்கள் பொங்கலிட்டு வழிபட்டனர்.

    மழை வேண்டியும், விவசாயம் தழைக்கவும் வருண கலச பூஜை மற்றும் வேல் பூஜை ஒவ்வொரு மாத கடைசி வெள்ளிக்கிழமையும் நடைபெறும். மார்கழி மாத கடைசி வெள்ளிக்கிழமை பூஜை இன்று காலை நடைபெற்றது. இதையொட்டி அதிகாலையில் பக்தர்கள் மலை உச்சியில் உள்ள சுனையில் இருந்து கிரக குடம் எடுத்து வந்தனர்.

    தொடர்ந்து சப்த கன்னியர்கள், விநாயகர் மற்றும் தெய்வங்களுக்கும், மலை அடிவாரத்தில் உற்சவருக்கும் சிறப்பு அபிசேகம், வருண கலச பூஜை, வேல்பூஜை நடைபெற்றது. முன்னதாக மலை உச்சியில் உள்ள பத்திரகாளியம்மன் மற்றும் முருகனுக்கு சிறப்பு அபிசேகம், தீபாராதனை நடைபெற்றது.

    மேலும் கோவில் வளாகத்தில் பொங்கலை யொட்டி பக்தர்கள் பலர் பொங்கலிட்டு வழிபட்டனர். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். விழாவில் பக்தர்களுக்கு காலை, மதியம் அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை கோவில் பரம்பரை அறங்காவலர் செண்பகராமன் செய்திருந்தார்.

    ×