search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "The price of flowers has risen. பூக்களின்"

    • தைப்பூசத் திருநாளை முன்னிட்டு கோவில்களில் சிறப்பு அபிஷேகங்கள் நடைபெறுவதால் அதிக பூக்கள் தேவைப்படுகிறது. இதன் காரணமாக பூ வியாபாரிகள் போட்டி போட்டுக் கொண்டு பூக்களை அதிக விலைக்கு வாங்கிச் சென்றனர்.
    • தைப்பூச திருநாளை முன்னிட்டு பூக்கள் விலை உயர்ந்துள்ளதால் பூக்கள் பயிர் செய்துள்ள விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள முருகன் கோவில்களில் தைப்பூச தேர் திருவிழா நடைபெறுவதை முன்னிட்டு பூக்கள் ஏல சந்தையில் பூக்களின் விலை உயர்வடைந்துள்ளதால் பூக்கள்

    பயிர் செய்துள்ள விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    பரமத்திவேலூர் சுற்றுவட்டார பகுதிகளான தண்ணீர் பந்தல், கபிலர்மலை, சின்ன மருதூர், பெரிய மருதூர், ஆனங்கூர், பாகம்பாளையம், நகப்பாளையம், செல்லப்பம்பாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் மற்றும் கரூர் மாவட்டம், வேலாயுதம்பாளையம், நொய்யல், நடையனூர் சுற்று வட்டாரப் பகுதிகளில் குண்டு மல்லி, முல்லை பூ, காக்கட்டான், சம்பங்கி, ரோஜா, அரளி, செவ்வந்தி உள்ளிட்ட பல்வேறு வகையான பூக்கள் பயிர் செய்யப்பட்டுள்ளது. இங்கு விளையும் பூக்களை விவசாயிகள் உள்ளூர் பகுதிகளுக்கு வரும் வியாபாரிகளுக்கும், பரமத்தி வேலூரில் செயல்பட்டு வரும் தினசரி பூக்கள் ஏல சந்தைகளுக்கு கொண்டு வருகின்றனர்.வேலூர், ஜேடர்பாளையம், கபிலர்மலை, பரமத்தி, பாலப்பட்டி மற்றும் கரூர் மாவட்டம் வேலாயுதம்பாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த வியாபாரிகள் பூக்களை ஏலம் எடுக்க வருகின்றனர். வாங்கிய உதிரிப்பூக்கள் மூலம் பல்வேறு ரகமான மாலைகளாகவும், தோரணங்களாகவும் கட்டி விற்பனை செய்கின்றனர்.சிலர் உதிரிப்பூக்களை பிளாஸ்டிக் கவரில் போட்டு உள்ளூர் பகுதிகளுக்கு கொண்டு சென்று பாக்கெட்டுகளாக விற்பனை செய்து வருகின்றனர். தைப்பூசத் திருநாளை முன்னிட்டு கோவில்களில் சிறப்பு அபிஷேகங்கள் நடைபெறுவதால் அதிக பூக்கள் தேவைப்படுகிறது. இதன் காரணமாக பூ வியாபாரிகள் போட்டி போட்டுக் கொண்டு பூக்களை அதிக விலைக்கு வாங்கிச் சென்றனர்.

    கடந்த வாரம் நடைபெற்ற ஏலத்தில் குண்டுமல்லி ரூ.800- க்கும், சம்பங்கி கிலோ ரூ.60- க்கும், அரளி கிலோ ரூ.90- க்கும், ரோஜா கிலோ ரூ.160- க்கும், முல்லைப் பூ ரூ.1000- க்கும், செவ்வந்திப்பூ ரூ.80- க்கும், கனகாம்பரம் ரூ.800-க்கும், காக்கட்டான் ரூ.500- க்கும் ஏலம் போனது. தைப்பூசத் தேர் திருவிழாவை முன்னிட்டு நேற்று நடைபெற்ற ஏலத்தில் குண்டு மல்லி கிலோ ரூ.1200-க்கும், சம்பங்கி கிலோ ரூ90- க்கும், அரளி கிலோ ரூ.100- க்கும், ரோஜா கிலோ ரூ.220- முல்லைப் பூ கிலோ ரூ.1200-க்கும், செவ்வந்திப்பூ ரூ.100- க்கும், கனகாம்பரம் ரூ.1000-க்கும், காக்கட்டான் ரூ.700-க்கும் ஏலம் போனது. தைப்பூச திருநாளை முன்னிட்டு பூக்கள் விலை உயர்ந்துள்ளதால் பூக்கள் பயிர் செய்துள்ள விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    • பரமத்திவேலூர் மற்றும் கரூர் மாவட்டம், வேலாயுதம்பாளையம் சுற்று வட்டாரப் பகுதிகளில் பல்வேறு வகையான பூக்கள் பயிர் செய்யப்பட்டுள்ளது.
    • மல்லிகை பூக்களின் வரத்து குறைவாலும், பொங்கல் பண்டிகையை முன்னிட்டும் பூக்கள் விலை கிடுகிடு என உயர்ந்துள்ளது.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் மற்றும் கரூர் மாவட்டம், வேலாயுதம்பாளையம் சுற்று வட்டாரப் பகுதிகளில் பல்வேறு வகையான பூக்கள் பயிர் செய்யப்பட்டுள்ளது. இங்கு விளையும் பூக்களை விவசாயிகள் பரமத்தி வேலூரில் உள்ள பூக்கள் ஏல சந்தைகளுக்கு கொண்டு வருகின்றனர். வேலூர், ஜேடர்பாளையம், கபிலர்மலை, பரமத்தி, பாலப்பட்டி மற்றும் கரூர் மாவட்டம் வேலாயுதம்பாளையம் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த வியாபாரிகள் பூக்களை ஏலம் எடுக்க வருகின்றனர்.

    கடந்த வாரம் குண்டுமல்லிகை பூ ஒரு கிலோ ரூ.1300- க்கும், முல்லை ரூ.1000-க்கும், காக்கட்டான் ரூ.400-க்கும், கனகாம்பரம் ரூ.500-க்கும், சம்பங்கி கிலோ ரூ.70- க்கும், செவ்வந்தி ரூ.60-க்கும், அரளி ரூ.250- க்கும், ரோஜா ரூ.150-க்கும் விற்பனையானது.

    நேற்று நடந்த ஏலத்தில், குண்டு மல்லிகை பூ கிலோ ரூ.5000-க்கும், சம்பங்கி ரூ160- க்கும், அரளி ரூ.450- க்கும், ரோஜா ரூ.400-க்கும், முல்லைப் பூ ரூ.4000-க்கும், செவ்வந்திப்பூ ரூ.200- க்கும், கனகாம்பரம் ரூ.1700-க்கும், காக்கட்டான் ரூ.1800-க்கும் விற்பனையானது.

    மல்லிகை பூக்களின் வரத்து குறைவாலும், பொங்கல் பண்டிகையை முன்னிட்டும் பூக்கள் விலை கிடுகிடு என உயர்ந்துள்ளது. பூக்களின் விலை உயர்வடைந்து உள்ளதால் பூ பயிர் செய்துள்ள விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    ×