என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "புழல் ஜெயில்"
- கடந்த 2021-ம் ஆண்டு ஒரு கொள்ளை வழக்கு தொடர்பாக நந்தம்பாக்கம் போலீசாரால் ஜெயந்தி கைது செய்யப்பட்டார்.
- இரவு கைதிகளின் எண்ணிக்கையை அதிகாரிகள் கணக்கெடுத்த போதுதான் ஜெயந்தி ஜெயிலில் இருந்து தப்பி சென்று இருப்பது தெரிந்தது.
செங்குன்றம்:
பெங்களூரை சேர்ந்தவர் ஜெயந்தி (32). இவர் செம்மஞ்சேரியில் தங்கி பூட்டிய வீடுகளை நோட்டமிட்டு கொள்ளையில் ஈடுபட்டு வந்தார். இவர் மீது ஏராளமான கொள்ளை வழக்குகள் உள்ளன. கடந்த 2021-ம் ஆண்டு ஒரு கொள்ளை வழக்கு தொடர்பாக நந்தம் பாக்கம் போலீசாரால் ஜெயந்தி கைது செய்யப்பட்டார். பின்னர் அவர் குண்டர் சட்டத்தில் புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்நிலையில் நேற்று மாலை 3 மணியளவில் ஜெயந்தி சிறையில் இருந்த போது பார்வையாளர்கள் நுழைவு பகுதி வழியாக சென்று புழல் ஜெயிலில் இருந்து தப்பி வெளியே சென்றுவிட்டார்.
அவர் தப்பி சென்றது உடனடியாக போலீசாருக்கு தெரியவில்லை. இரவு கைதிகளின் எண்ணிக்கையை அதிகாரிகள் கணக்கெடுத்த போதுதான் ஜெயந்தி ஜெயிலில் இருந்து தப்பி சென்று இருப்பது தெரிந்தது. கண்காணிப்பு கேமிராவை ஆய்வு செய்த போது பார்வையாளர்கள் நுழைவு வாயில் வழியாக ஜெயந்தி வெளியே செல்வது பதிவாகி உள்ளது. இதை தொடர்ந்து அப்பகுதியில் பாதுகாப்பு பணியில் இருந்த சிறைக் காவலர்கள் கனகலட்சுமி, கோகிலா ஆகிய 2 பேரையும் சஸ்பெண்டு செய்து சிறைத்துறை இயக்குனர் அமரேஷ் பூஜாரி உத்தரவிட்டு உள்ளார். புழல் ஜெயிலில் இருந்து தப்பிய ஜெயந்தியை பிடிக்க தனிப்படை போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். பாதுகாப்பு அதிகம் உள்ள புழல் ஜெயிலில் இருந்து பெண்கைதி தப்பி சென்ற சம்பவம் அதிகாரிகள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
- சிறைக்காவலர்கள் விரைந்து வந்து கைதிகளை சமாதானப்படுத்தி அங்கிருந்து அப்புறப்படுத்தினர்.
- புழல் போலீசார் வழக்கு பதிவு செய்து மேலும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சென்னை:
புழல் சிறையில் தண்டனை கைதிகள், விசாரணை கைதிகள் அடைக்கப்பட்டு உள்ளனர். இதில் கடந்த 9 மாதத்துக்கு முன்பு அடிதடி வழக்கில் புரசைவாக்கம் போலீசாரால் கைது செய்யப்பட்ட இம்மானுவேல் (வயது 21) என்பவர் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார்.
இந்த நிலையில் அவர் சிறையின் வெளியே அமர்ந்திருந்த போது அங்கு ஏற்கனவே விசாரணை சிறையில் இருந்த ஓட்டேரியை சேர்ந்த சூர்யா(23) மற்றும் புழல் காவாங்கரை பகுதியை சேர்ந்த நித்தின்குமார் (23) ஆகியோர் வந்து திடீரென தகராறில் ஈடுபட்டனர். பின்னர் இது மோதலாக மாறியது. கைதிகள் ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்டனர். இதனால் சிறைவளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது. சிறைக்காவலர்கள் விரைந்து வந்து கைதிகளை சமாதானப்படுத்தி அங்கிருந்து அப்புறப்படுத்தினர்.
இந்த தாக்குதலில் கைதிகளுக்கு காயம் ஏற்பட்டது.அவர்களுக்கு சிறை மருத்துவர்கள் சிசிச்சை அளித்தனர். கஞ்சா விற்பனை தொடர்பாக இம்மானு வேலுடம் மற்ற இருவரும் வாக்குவாதத்தில் ஈடுபட்டு தாக்கியதாக தெரிகிறது. இதுகுறித்து புழல் போலீசார் வழக்கு பதிவு செய்து மேலும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதற்கிடையே ஜெயிலின் சிறை வெளிப்புற காம்பவுண்ட் சுவர் அருகில் வெளியில் இருந்து வீசப்பட்ட பார்சலை சிறை காவலர்கள் கண்டெடுத்தனர். அதனை பிரித்து பார்த்தபோது 3 செல்போன்கள் இருந்தது. அதனை சிறைக்குள் வீசியது யார்? எந்த கைதிக்கு கொடுக்க வீசப்பட்டது என்பது குறித்து சிறை அதிகாரிகள் விசாரித்து வருகிறார்கள்.
- சிறைக்காவலர்கள் சுமார் 20-க்கும் மேற்பட்டோர் அதிரடி சோதனை நடத்தினர்.
- ஒரு மரத்தின் கீழ் பிளாஸ்டிக் கவரில் சுற்றப்பட்ட நிலையில் செல்போன் புதைத்து வைக்கப்பட்டு இருந்தது.
செங்குன்றம்:
நெற்குன்றத்தை சேர்ந்தவர் செல்வா என்கிற வெள்ளைசெல்வா. கடந்த 2 மாதத்துக்கு முன்பு கஞ்சா கடத்தல் வழக்கில் இவரை கோயம்பேடு போலீசார் கைது செய்து புழல் ஜெயிலில் அடைத்தனர்.
இந்நிலையில் சிறையில் உள்ள செல்வாவை சந்திக்க அவரது தங்கை மீனாலட்சுமி வந்தார். அவர் அண்ணனுக்கு கொடுப்பதற்காக ஜீன்ஸ்பேண்ட் உள்ளிட்ட பொருட்களை கொண்டு வந்திருந்தார்.
அப்போது ஜீன்ஸ்பேண்ட்டை பரிசோதித்த போது அதில் உள்ள பாக்கெட்டில் கஞ்சா மறைத்து வைத்திருந்தது தெரியவந்தது. அண்ணன் செல்வாவுக்கு கொடுக்க கஞ்சாவை மறைத்து எடுத்து வந்ததாக மீனாலட்சுமி தெரிவித்து உள்ளார். இதைத்தொடர்ந்து அவரை போலீசார் கைது செய்தனர்.
புழல் விசாரணை கைதிகள் அடைக்கப்பட்டு உள்ள பகுதியில் நேற்று இரவு சிறைக்காவலர்கள் சுமார் 20-க்கும் மேற்பட்டோர் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது ஒரு மரத்தின் கீழ் பிளாஸ்டிக் கவரில் சுற்றப்பட்ட நிலையில் செல்போன் புதைத்து வைக்கப்பட்டு இருந்தது. அதனை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். அந்த செல்போனை பயன்படுத்திய கைதி யார்? ஜெயிலுக்குள் செல்போன் எப்படி கொண்டு வரப்பட்டது என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகிறார்கள்.
- புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு முதல் வகுப்பு மட்டுமே வழங்கப்பட்டுள்ளது.
- தி.மு.க. பிரமுகர் என்பதாலோ கூடுதலாக சலுகை வழங்கப்படவில்லை.
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்ட விளையாட்டரங்கில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி கலந்து கொண்டார். பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு முதல் வகுப்பு மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. முதல் வகுப்பு சிறைவாசிக்கு எந்தளவு சலுகைகள் வழங்கப்படுமோ அது மட்டுமே அவருக்கு வழங்கப்படுகிறது. ஏசி வசதிகள் கிடையாது. ஒரு வாரத்திற்கு ஒதுக்கப்படும் ரூ.1000த்தில் கேண்டீனில் உணவுகளை அவர் வாங்கி சாப்பிடலாம். மற்றப்படி வெளியிலிருந்து எந்த உணவும் உள்ளே செல்லாது. அவர் அமைச்சர் என்பதாலோ, தி.மு.க. பிரமுகர் என்பதாலோ கூடுதலாக சலுகை வழங்கப்படவில்லை.
வழக்கு உயர் நீதிமன்றத்திலும், உச்ச நீதிமன்றத்திலும் இருப்பதால் அவருக்கு இடையூறு செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில், ஊடகங்கள், பத்திரிக்கைகள் மூலம் தவறான செய்திகளை பரப்பி வருகின்றனர். மேலும் அவர் சிறையில் சொகுசு வாழ்க்கை வாழ்ந்து வருவது போல் மாயதோற்றத்தை ஏற்படுத்துகின்றனர். எக்காரணம் கொண்டும் முதல்வர் இதுபோன்ற செயலுக்கு துணை நிற்கமாட்டார்.
காவிரி பிரச்சினைக்கு தமிழக நீர்வளத்துறை அமைச்சர் உரிய நடவடிக்கை எடுத்து வருகிறார். மத்திய நீர்வளத்துறை மந்திரியிடம் பேசியுள்ளார். நீதிமன்றத்தில் அம்பேத்கர் படம் விவகாரத்தில் சென்னை உயர்நீதி மன்ற தலைமை நீதிபதியை முதல்வரின் அறிவுரைபடி நேரில் சந்தித்து சட்டத்துறை அமைச்சர் என்ற முறையில் ஒரு மனுவை வழங்கினேன். அப்போது எந்த படத்தையும் எடுக்க சொல்லவில்லை என்று நீதிபதி தெரிவித்தார்.
எடப்பாடி பழனிசாமி, திமுக ஆட்சியில் விலைவாசி உயர்ந்து விட்டது என கூறி வருகிறார். ஆனால் நாங்கள் விலைவாசியை கட்டுக்குள்வைத்துள்ளோம். சிலர் பதுக்கலில் ஈடுபட்டுள்ளனர். அவர்களை கண்டறிந்து உரிய நடவடிக்கை எடுக்க முதல்வர் ஆணையிட்டுள்ளார்.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மீதான லஞ்ச ஒழிப்பு புகாரில் பறிமுதல் செய்யப்பட்ட பொருட்கள் நீதிமன்ற உத்தரவுபடியாரிடம் ஒப்படைக்க வேண்டுமோ அவர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. 2-ம் நபரிடம் ஒப்படைக்க முடியாது.
இவ்வாறு அமைச்சர் தெரிவித்தார்.
- பெண் கைதிகள் தயாரித்த பொருட்களையும் பார்வையிட்ட குஷ்பு அவர்களை பாராட்டினார்.
- கைதிகளின் வாழ்க்கையை எவ்வாறு மேம்படுத்துவது மற்றும் அவர்களுக்கு ஒரு புதிய வாழ்க்கையை அமைத்து கொடுப்பது பற்றி ஜெயிலருடன் நீண்ட நேரம் விவாதித்தேன்.
சென்னை:
தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் நடிகை குஷ்பு புழல் பெண்கள் ஜெயிலுக்கு சென்று பெண் கைதிகள் பராமரிக்கப்படுவதை நேரில் ஆய்வு செய்தார்.
அங்கிருந்த பெண்கள் குஷ்புவை கண்டதும் ஆர்வத்துடன் அவரை பார்த்தனர்.
பெண் கைதிகள் தயாரித்த பொருட்களையும் பார்வையிட்ட குஷ்பு அவர்களை பாராட்டினார். விசாரணை கைதிகளாகவும் தண்டனை பெற்ற கைதிகளாகவும் சிறையில் இருக்கும் பெண்களுக்கு நம்பிக்கையூட்டி, ஆறுதல் கூறியதுடன், பிரச்சினைகளை சந்திப்பது சில நேரங்களில் தவிர்க்க முடியாததாகிவிடும். அதையும் கடந்து துணிச்சலுடன் வாழ்க்கையை வாழ கற்றுக் கொள்ள வேண்டும் என்று அவர்களுக்கு அறிவுரை வழங்கினார்.
இதுபற்றி அவர் கூறும் போது, "மகளிர் ஆணைய உறுப்பினர் என்ற வகையில் ஜெயிலில் பெண்கள் நடத்தப்படும் விதம், அவர்கள் சந்திக்கும் பிரச்சினைகளை நேரில் பார்ப்பதற்காக சென்றேன். நான் எதிர் பார்க்காத வகையில் கைதிகள் ஜெயிலை சுத்தமாக வைத்திருக்கிறார்கள். அவர்களை நல்ல முறையில் பராமரிப்பதாகவும் கூறினார்கள்.
கைதிகளின் வாழ்க்கையை எவ்வாறு மேம்படுத்துவது மற்றும் அவர்களுக்கு ஒரு புதிய வாழ்க்கையை அமைத்து கொடுப்பது பற்றி ஜெயிலருடன் நீண்ட நேரம் விவாதித்தேன்.
குற்றவாளிகளாக தண்டனை அனுபவித்து வருபவர்களையும் நன்கு கவனித்து பொருளாதார ரீதியாக அவர்களின் பாதுகாப்புக்கு உதவ கூடியதை கற்றுக் கொள்வதற்கான பயிற்சிகளும் அளிக்கப்படுகிறது. மேலும் அதை எவ்வாறு சிறப்பாக செய்வது என்பது பற்றிய எனது எண்ணங்களையும், யோசனைகளையும் பகிர்ந்து வந்தேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
- சிகிச்சைக்காக அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி சண்முக சுந்தரம் இறந்தார்.
- புழல் இன்ஸ்பெக்டர் சண்முகம் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
செங்குன்றம்:
ஆவடி அடுத்த அண்ணனூர் பகுதியைச் சேர்ந்தவர் மீனாட்சி சுந்தரம் (வயது66). இவர் திருமுல்லைவாயலில் நடந்த ஒரு கொலையில் கடந்த 2022-ம் ஆண்டு முதல் ஆயுள் தண்டனை கைதியாக புழல் தண்டனை சிறையில் அடைக்கப்பட்டு இருந்தார்.
இவருக்கு ரத்த அழுத்த நோய் இருந்தது. இதையடுத்து அவரை சிகிச்சைக்காக சென்னை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி சண்முக சுந்தரம் இறந்தார்.
இது குறித்து புழல் இன்ஸ்பெக்டர் சண்முகம் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
- புழல் பெண்கள் சிறையில் சுமார் 150க்கும் மேற்பட்ட கைதிகள் அடைக்கப்பட்டு உள்ளனர்.
- போலீசார்கள் அந்த கைதியை தடுத்து நிறுத்தி பெண் போலீசை மீட்டனர்.
புழல் பெண்கள் சிறையில் சுமார் 150க்கும் மேற்பட்ட கைதிகள் அடைக்கப்பட்டு உள்ளனர். இங்கு திருப்பூர் மாவட்டத்தில் மோசடி வழக்கில் கைதான உகாண்டா நாட்டை சேர்ந்த நசமா சரம் என்பவர் கடந்த ஏப்ரல் மாதம் முதல் அடைக்கப்பட்டு உள்ளார்.
இந்த நிலையில் உறவினர்கள் கைதிகளுக்கு கொடுத்த பொருட்களை வழங்கும் பணியில் சிறை காவலர் அயனிங் ஜனாதா ஈடுபட்டார். அப்போது கைதி நசமா சரம், பெண் போலீஸ் அயனிங் ஜனாதாவை சரமாரியாக தாக்கினார். இதை பார்த்த மற்ற போலீசார்கள் அந்த கைதியை தடுத்து நிறுத்தி பெண் போலீசை மீட்டனர்.
இது குறித்து புழல் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- புழல் சிறையில் விசாரணை கைதிகள், தண்டனை கைதிகள் தனித்தனியாக அடைக்கப்பட்டு உள்ளனர்.
- கைதிகளுக்கு செல்போன் கிடைத்தது எப்படி என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகிறார்கள்.
செங்குன்றம்:
புழல் சிறையில் விசாரணை கைதிகள், தண்டனை கைதிகள் தனித்தனியாக அடைக்கப்பட்டு உள்ளனர். சிறையில் உள்ள கைதிகளிடம் செல்போன் பறிமுதல் செய்யப்படும் சம்பவம் தொடர்ந்து நடந்து வருகிறது.
இந்த நிலையில் புழல் தண்டனை கைதிகள் அடைக்கப்பட்டுள்ள சிறையில் காவலர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது கைதிகள் கார்த்திக், சையது இப்ராகிம் ஆகியோர் மறைத்து வைத்திருந்த செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
மேலும் தண்டனை பிரிவு கைதிகளின் கழிவறையில் கேட்டபாரற்று கிடந்த செல்போனையும் கைப்பற்றினர். போலீசார் ரோந்து வருவதை கண்டதும் செல்போனை பயன்படுத்திய கைதிகள் வீசி சென்று இருக்கலாம் என்று தெரிகிறது.
கைதிகளுக்கு செல்போன் கிடைத்தது எப்படி என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகிறார்கள்.
- சென்னை, நந்தனத்தை சேர்ந்தவர் கணேசன். இவரை கடந்த நவம்பர் மாதம் மத்திய குற்றப்பிரிவு போலீசார் பணமோசடி வழக்கில் கைது செய்தனர்.
- புழல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
சென்னை, நந்தனத்தை சேர்ந்தவர் கணேசன்(வயது56). இவரை கடந்த நவம்பர் மாதம் மத்திய குற்றப்பிரிவு போலீசார் பணமோசடி வழக்கில் கைது செய்தனர். பின்னர் அவர் புழல் ஜெயிலில் விசாரணை சிறையில் அடைக்கப்பட்டார். இந்த நிலையில் நேற்று இரவு கணேசனுக்கு திடீரென உடலநலக்குறைவு ஏற்பட்டது. உடனடியாக அவரை ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். பரிசோதித்த டாக்டர்கள் வரும் வழியிேலயே கணேசன் மாரடைப்பால் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து புழல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- புழல் ஜெயில் மதுராந்தகத்தைச் சேர்ந்த மணி என்கிற நீக்ரோ மணி குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டு அடைக்கப்பட்டுள்ளார்.
- மணிக்கு கஞ்சா கிடைத்தது எப்படி என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
சென்னை:
புழல் ஜெயில் மதுராந்தகத்தைச் சேர்ந்த மணி என்கிற நீக்ரோ மணி குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டு அடைக்கப்பட்டுள்ளார். இவரை போலீசார் மதுராந்தகம் கோர்ட்டில் ஆஜர்படுத்தி விட்டு மீண்டும் புழல் ஜெயிலுக்கு கொண்டு வந்தனர். அப்போது ஜெயில் காவலர்கள் சோதனை செய்தபோது மணி 100 கிராம் கஞ்சா மறைத்து வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதனை பறிமுதல் செய்தனர்.
மணிக்கு கஞ்சா கிடைத்தது எப்படி என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- சர்புதீன் புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டு வந்தார்.
- கடந்த 15-ந் தேதி சர்புதீனை மேல் சிகிச்சைக்காக சென்னை ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
செங்குன்றம்:
கும்பகோணம் அருகே உள்ள திருபுவனத்தில் கடந்த 2019-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் மதமாற்ற பிரசாரத்தில் ஈடுபட்டவர்களை தட்டிக்கேட்ட ராமலிங்கம் என்பவர் வெட்டி கொலை செய்யப்பட்டார்.
இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த வழக்கை விசாரித்த என்.ஐ.ஏ., அதிகாரிகளால் சர்புதீன் (வயது 62) என்பவர் உள்பட 12 பேர் கைது செய்யப்பட்டனர்.
சர்புதீன் புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டு வந்தார். கடந்த சில நாட்களாக அவரது உடல் நிலை மோசம் அடைந்தது. இதையடுத்து கடந்த 15-ந் தேதி சர்புதீனை மேல் சிகிச்சைக்காக சென்னை ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு உள்ளது.
இந்த நிலையில் நேற்று இரவு சிகிச்சை பலனின்றி சர்புதீன் இறந்தார். இது குறித்து போலீசார் மேலும் விசாரித்து வருகிறார்கள்.
- சிறையில் கைதிகளுக்கு செல்போன்கள், கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்கள் சர்வ சாதாரணமாக கிடைப்பதாக ஏற்கனவே குற்றச்சாட்டு உள்ளது.
- ஆண்கள் சிறையில் விசாரணை கைதிகளாக உள்ள பரத் , விஷ்வா ஆகியோர் செல்போன் பயன்படுத்தியது கண்டுபிடிக்கப்பட்டது.
செங்குன்றம்:
சென்னை புழல், ஜெயிலில் விசாரணை கைதிகள், தண்டனை கைதிகள் மற்றும் பெண்கள் சிறையில் தண்டனை கைதிகள் அடைக்கப்பட்டு உள்ளனர்.
சிறையில் கைதிகளுக்கு செல்போன்கள், கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்கள் சர்வ சாதாரணமாக கிடைப்பதாக ஏற்கனவே குற்றச்சாட்டு உள்ளது.
அதிகாரிகள் அவ்வப்போது ஜெயிலில் சோதனை நடத்தி செல்போன்களை பறிமுதல் செய்து வருகிறார்கள்.
இந்த நிலையில் புழல் சிறையில் பெண் கைதிகள், ஆண் கைதிகள் செல்போன் பயன்படுத்துவதாக சிறைத் துறை கண்காணிப்பாளர் தர்மராஜூக்கு தகவல் கிடைத்தது.
அவரது உத்தரவுப்படி நேற்று இரவு பெண்கள் சிறையிலும், ஆண்கள் சிறையிலும் அதிகாரிகள் திடீர் சோதனை செய்தனர்.
இதில் கஞ்சா கடத்திய வழக்கில் கைது செய்யப்பட்ட கொடுங்கையூரை சேர்ந்த தாரணி என்ற பெண்ணிடம் செல்போன் இருப்பது தெரிய வந்தது.
இதேபோல் ஆண்கள் சிறையில் விசாரணை கைதிகளாக உள்ள பரத் , விஷ்வா ஆகியோர் செல்போன் பயன்படுத்தியது கண்டுபிடிக்கப்பட்டது. அவர்களிடம் இருந்து 2 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
இதுகுறித்து புழல் போலீசில் புகார் செய்யப்பட்டது.போலீசார் வழக்கு பதிவு செய்து கைதிகளுக்கு செல்போன் எப்படி கிடைத்தது. அவர்கள் யார்? யாரிடம் பேசினார்கள்? ஜெயில் ஊழியர்கள் உடந்தையாக இருந்தனரா? என்று பல்வேறு கோணங்களில் விசாரித்து வருகிறார்கள்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்