என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மாட்டு பொங்கல்"

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • கிராம மக்கள் வாழ்க்கையின் ஒரு அங்கமாக தெய்வமாக கொண்டாடப்படும் பசு மற்றும் காளைகளின் பண்டிகையாம் மாட்டு பொங்கலை மகிழ்வுடன் கொண்டாடுவோம்.
    • உலகப் பொதுமறையாம் திருக்குறளை தந்த தெய்வப் புலவர் திருவள்ளுவரை போற்றுவோம், கொண்டாடி மகிழ்வோம். அனைவருக்கும் திருவள்ளுவர் தின நல்வாழ்த்துக்கள்.

    சென்னை:

    தமிழக பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை திருவள்ளுவர் தினம் மற்றும் மாட்டு பொங்கலையொட்டி டுவிட்டரில் வாழ்த்து செய்தி வெளியிட்டுள்ளார்.

    வீரத்தின் அடையாளமாக, விவசாயிகளின் தோழனாக, கிராம மக்கள் வாழ்க்கையின் ஒரு அங்கமாக தெய்வமாக கொண்டாடப்படும் பசு மற்றும் காளைகளின் பண்டிகையாம் மாட்டு பொங்கலை மகிழ்வுடன் கொண்டாடுவோம்.

    சிறப்புமிக்க திருவள்ளுவர் தினத்தில் வாழ்வியலை மையமாக வைத்து, மக்களுக்கு தேவையானது, தேவையற்றதை தெளிவாக சொல்லும் உலகப் பொதுமறையாம் திருக்குறளை தந்த தெய்வப் புலவர் திருவள்ளுவரை போற்றுவோம், கொண்டாடி மகிழ்வோம். அனைவருக்கும் திருவள்ளுவர் தின நல்வாழ்த்துக்கள்.

    இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளார்.

    • மாட்டுப் பொங்கலை முன்னிட்டு வீடுகளில் அசைவம் சமைத்து சாமிக்கு படையல் இடுவர்.
    • வீடுகளில் உள்ள மாடுகளை தங்கள் பிள்ளைகள் போல் கருதி வளர்த்து அதன் மூலம் வருவாயும் ஈட்டி வருகின்றனர்.

    கடலூர்: 

    தை மாதம் 1-ந் பொங்கல் பண்டிகை முன்னிட்டு தமிழகம் முழுவதும் நேற்று பொங்கல் விழாவை குடும்பத்துடன் கோலாக லமாக கொண்டாடி னார்கள். இதனை யொட்டி பொதுமக்கள் அனைவரும் புத்தாடை அணிந்து வீட்டில் புதிய பொங்கல் பானைகளை வைத்து பொங்கல் விழாவை குடும்பத்துடன் ஆனந்தமாக கொண்டாடினார்கள். மேலும் பொது மக்கள் தங்கள் குடும்பத்துடன் கோவில்களுக்கு சென்று பயபக்தியுடன் சாமி கும்பிட்டு வந்ததையும் காணமுடிந்தது.

    இன்று மாட்டுப் பொங்கலை முன்னிட்டு வீடுகளில் அசைவம் சமைத்து சாமிக்கு படையல் இட்டு குடும்பத்துடன் ஒன்றாக அமர்ந்து கொண்டாடுவார்கள். இதனை தொடர்ந்து கடலூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கிராமங்கள் தோறும் உள்ள வீடுகளில் மாடுகள் மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக இருந்து வருகின்றது. மேலும் வீடுகளில் உள்ள மாடுகளை தங்கள் பிள்ளைகள் போல் கருதி வளர்த்து அதன் மூலம் வருவாயும் ஈட்டி வருகின்றனர்.

    இன்று மாட்டுப் பொங்கல் முன்னிட்டு வீடுகளில் உள்ள மாடுகளை காலையில் குளிப்பாட்டி கொம்புகளை தீட்டி புதிய பல்வேறு வண்ணங்களை பூசி மகிழ்வார்கள். பின்னர் மாடுகள் மீது மஞ்சள் குங்குமம் ஆகியவற்றை பூசி வீடுகளில் வணங்கி மகிழ்ந்தனர். மேலும் இன்று மாலை வீடுகளில் உள்ள மாடுகளை வண்டிகளில் கட்டி கொம்புக்களில் பலூன், வண்ணக் காகிதங்கள் போன்றவற்றால் அலங்கரித்து ஊர்வலமாக அந்த பகுதி சேர்ந்த பொதுமக்கள் சிறுவர்கள் சிறுமிகளை ஏற்றிக் கொண்டு ஆரவாரமாக கத்திக்கொண்டு கோவி லுக்கு சென்று தெருக்களில் ஆரவாரத்துடன் மாட்டுப்பொங்கல் விழாவை கொண்டாடினர். மேலும் கடலூர் திருவந்திபுரம் தேவநாதசுவாமி கோவில் கடலூர் பாடலீஸ்வரர் கோவில் உள்ளிட்ட பல்வேறு கோவில்களில் உள்ள மாடுகளை காலை முதல் ஊழியர்கள் குளிப்பாட்டி சுத்தம் செய்தனர் .பின்னர்கொம்புகளுக்கு வர்ணம் பூசி பலூன்கள் கட்டி சிறப்பு பூஜைகள் நடைபெறுகிறது. பின்னர் கோவிலுக்கு வரக்கூடிய பக்தர்கள் கோமாதா என்று அழைக்க கூடிய மாடுகளை வணங்கி அவர்களுக்கு தேவையான உணவுகளை வழங்கி ஆனந்தமாக கொண்டாட உள்ளனர்.

    • மாட்டுப் பொங்கல் தினத்தோடு தான் திருவள்ளுவர் தினமும் கொண்டாடப்படுகிறது.
    • பண்டிகையையொட்டி இறைச்சி விலை உயரவில்லை.

    சென்னை:

    பொங்கல் பண்டிகை நேற்று ஞாயிற்றுக்கிழமை விமரிசையாக கொண்டாடப்பட்ட நிலையில் இன்று மாட்டுப் பொங்கல் கொண்டாடப்படுகிறது.

    பொங்கல் பண்டிகை தினத்தில் பொதுவாக அசைவ உணவு சாப்பிட மாட்டார்கள். மறுநாள் மாட்டு பொங்கல் நாளில் தான் அசைவ உணவு எடுத்து கொள்வது வழக்கம்.

    அந்த வகையில் இன்று அனைவரின் வீடுகளிலும் ஆடு, கோழி இறைச்சிகளை வாங்கி சமைப்பார்கள். நேற்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாளில் பொங்கல் வந்ததால் அசைவ பிரியர்கள் எடுத்து கொள்ள முடியாத நிலை ஏற்பட்டது. அதற்கு பதிலாக இன்று அசைவ உணவு சமைக்கும் வகையில் அதிகாலையிலே இறைச்சி கடைகளில் குவிந்தனர்.

    மாட்டுப் பொங்கல் தினத்தோடு தான் திருவள்ளுவர் தினமும் கொண்டாடப்படுகிறது. அதனால் இன்று இறைச்சி கடைகள் வழக்கமாக மூடப்பட வேண்டும்.

    ஆனால் பண்டிகை நாளாக இருப்பதால் பெரும்பாலான இறைச்சி கடைகள் திறந்து இருந்தன. ஆடு, கோழி, மாடு, மீன் உள்ளிட்ட அனைத்து இறைச்சி கடைகளிலும் கூட்டம் நிறைந்து காணப்பட்டன. காலையிலேயே வரிசையில் நின்று இறைச்சி வாங்கி சென்றனர்.

    சென்னையில் புளியந்தோப்பு, சைதாப்பேட்டை, வில்லிவாக்கம், அம்பத்தூர் ஆகிய 4 இடங்களில் உள்ள இறைச்சி கூடங்கள் இன்று மூடப்பட்டன. ஆனாலும் சென்னையில் அனைத்து பகுதியிலும் பொதுமக்கள் தேவைக்கேற்ப இறைச்சி கடைகள் முழு அளவில் செயல்பட்டன.

    நேற்று இரவே இறைச்சி கடைகளுக்கு ஆட்டு தொட்டியில் இருந்து இறைச்சி வெட்டப்பட்டு கொண்டு வரப்பட்டன.

    பண்டிகையையொட்டி இறைச்சி விலை உயரவில்லை. கோழி இறைச்சி கிலோ ரூ.240 முதல் ரூ.280 வரையிலும் ஆட்டு இறைச்சி கிலோ ரூ.900 முதல் ரூ.1000-க்கும் விற்கப்பட்டது.

    • பல்வேறு பகுதியில் இருந்து 150- க்கு மேற்பட்ட காளைகளுடன் வீரர்கள் கலந்து கொண்டனர்.
    • சீறிவரும் காளைகளை அடக்க 200-க்கும் மேற்பட்ட இளைஞர்கள், மாடுபிடி வீரர்கள் என திரண்டு வந்து காளைகளை அடக்கினர்.

    மாரண்டஅள்ளி:

    தர்மபுரி மாவட்டம், மாரண்டஅள்ளியில் சத்திரம் தெரு மெயின் ரோட்டில் மாட்டு பொங்கலையொட்டி மஞ்சுவிரட்டு விழா நடைபெற்றது. இதில் வேங்கு கவுண்டர் தெரு, ஆணங்கிணறு தெரு, பைபாஸ் ரோடு சந்தை வீதி, செவத்தம்பட்டி முகமதியர் தெரு என பல்வேறு பகுதியில் இருந்து 150- க்கு மேற்பட்ட காளைகளுடன் வீரர்கள் கலந்து கொண்டனர்.

    இதைத் தொடர்ந்து காளைகள் அலங்கரிக்கப்பட்டு முக்கிய வீதிகள் ஆனா சத்திரம் தெரு, மெயின் ரோடு, பைபாஸ் ரோடு, பஸ் நிலையம், நான்கு ரோடு பகுதியில் காளைகளை அவிழ்த்து விட்டனர்.


    சீறிவரும் காளைகளை அடக்க 200-க்கும் மேற்பட்ட இளைஞர்கள், மாடுபிடி வீரர்கள் என திரண்டு வந்து காளைகளை அடக்கினர். இதில் 25-க்கும் மேற்பட்டோருக்கு லேசான காய் மேற்பட்டது. அவர்களுக்கு மருத்துவ குழு சிகிச்சை அளித்தனர்.

    விழாவையொட்டி மாரண்டஅள்ளி போலீஸ் இன்ஸ்பெக்டர் சுப்பிரமணியம் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். மஞ்சுவிரட்டு விழாவை காண மாரண்டஅள்ளியை சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து சுமார் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

    • பாக்டீரியா மற்றும் பூஞ்சைகளை எதிர்க்கும் சக்தி கோமியத்தில் இருக்கிறது.
    • பசுமாட்டின் கழிவுகள் தான் கோமியமாக வெளியேறுகிறது.

    இந்தியாவில் ஒருபுறம் அறிவியல் வளர்ச்சி நாளுக்கு நாள் அதிகரித்து வரும் வேளையில் அறிவியலுக்கு புறம்பான கருத்துக்களும் பெருகி வருகின்றன.

    குறிப்பாக மாட்டு கோமியம் குடித்தால் உடல்நலனுக்கு நல்லது என்றும் பல நோய்களை மாட்டு கோமியம் குணப்படுத்தும் என்று அறிவியலுக்கு புறம்பான செய்திகள் இணையத்தில் வேகமாக பரவி வருகின்றன.

    இந்நிலையில், 'கோமியம் குடித்தால் ஜுரம் சரியாகும்' என்று சென்னை ஐஐடி இயக்குநர் காமகோடி பேசியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

    மாட்டுப் பொங்கலையொட்டி, சென்னை மேற்கு மாம்பலத்தில் உள்ள கோசாலையில் நடைபெற்ற கோ பூஜையில் சிறப்பு விருந்தினராக சென்னை ஐஐடி இயக்குநர் காமகோடி கலந்துகொண்டார்.

    அந்நிகழ்ச்சியில் பேசிய அவர், "எனது தந்தை ஒரு சந்நியாசியிடம் சென்று எனக்கு ஜுரம் அடிக்கிறது. நான் மருத்துவரை சென்று பார்க்கவா என்று கேட்டுள்ளார். அதற்கு அந்த சந்நியாசி அதெல்லாம் வேண்டாம், பசுமாட்டு கோமியம் குடித்தால் ஜுரம் சரியாகி விடும் என்று கூறியுள்ளார். உடனடியாக அவர் கோமியத்தை பருகியுள்ளார். அடுத்த 15 நிமிடத்தில் அவருக்கு ஜுரம் சரியாகி விட்டது.

    கோமியம் மிகப்பெரிய மருந்து, பிணிகளை நீக்கும். உடல் பாதிப்புகளை ஏற்படுத்தும் பாக்டீரியா மற்றும் பூஞ்சைகளை எதிர்க்கும் சக்தி கோமியத்தில் இருப்பதால், அவ்வப்போது கோமியத்தை எடுத்துக்கொள்ள வேண்டும்" என்று தெரிவித்தார்.

    உடலின் கழிவுகள் தான் சிறுநீராக வெளியேறுகிறது. அவ்வகையில் பசுமாட்டின் கழிவுகள் தான் கோமியமாக வெளியேறுகிறது. கோமியம் குடித்தால் பல்வேறு பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புண்டு என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.

    மாணவர்களுக்கு அறிவியலை போதிக்கும் இந்தியாவின் உச்சபட்ச கல்வி நிறுவனத்தின் இயக்குநரே அறிவியலுக்கு புறம்பாக பேசியுள்ளது கடும் விமர்சனத்துக்கு உள்ளாகியுள்ளது.

    • நோயைப் பரப்பக்கூடிய நுண்ணுயிரிகள் அந்த மாட்டின் சிறுநீரில் இருக்கும்.
    • தான் பேசியது அறிவியல்படி தவறு என்று காமகோடி பொதுவெளியில் வருத்தம் தெரிவிக்க வேண்டும்.

    மாட்டுப் பொங்கலையொட்டி, சென்னை மேற்கு மாம்பலத்தில் உள்ள கோசாலையில் நடைபெற்ற கோ பூஜையில் சிறப்பு விருந்தினராக சென்னை ஐஐடி இயக்குநர் காமகோடி கலந்துகொண்டார்.

    அந்நிகழ்ச்சியில் பேசிய அவர், "எனது தந்தை ஒரு சந்நியாசியிடம் சென்று எனக்கு ஜுரம் அடிக்கிறது. நான் மருத்துவரை சென்று பார்க்கவா என்று கேட்டுள்ளார். அதற்கு அந்த சந்நியாசி அதெல்லாம் வேண்டாம், பசுமாட்டு கோமியம் குடித்தால் ஜுரம் சரியாகி விடும் என்று கூறியுள்ளார். உடனடியாக அவர் கோமியத்தை பருகியுள்ளார். அடுத்த 15 நிமிடத்தில் அவருக்கு ஜுரம் சரியாகி விட்டது.

    கோமியம் மிகப்பெரிய மருந்து, பிணிகளை நீக்கும். உடல் பாதிப்புகளை ஏற்படுத்தும் பாக்டீரியா மற்றும் பூஞ்சைகளை எதிர்க்கும் சக்தி கோமியத்தில் இருப்பதால், அவ்வப்போது கோமியத்தை எடுத்துக்கொள்ள வேண்டும்" என்று தெரிவித்தார்.

    மாணவர்களுக்கு அறிவியலை போதிக்கும் இந்தியாவின் உச்சபட்ச கல்வி நிறுவனத்தின் இயக்குநரே அறிவியலுக்கு புறம்பாக பேசியுள்ளது கடும் விமர்சனத்துக்கு உள்ளாகியுள்ளது. காமகோடியின் இந்த கருத்தை நெட்டிசன்கள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

    இந்நிலையில், கோமியம் (மாட்டு சிறுநீர்) குடித்தால் ஜுரம் சரியாகுமென அறிவியலுக்குப் புரம்பான கருத்தை பேசிய சென்னை ஐ.ஐ.டி இயக்குனர் காமகோடிக்கு கண்டனம் தெரிவித்து தமிழ்நாடு மாணவர் கழகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

    அந்த அறிக்கையில், "சென்னை, மேற்கு மாம்பலத்திலுள்ள கோசாலையில் 15.01.25 அன்று மாட்டுப்பொங்கல் நிகழ்வில் கலந்துகொண்டு பேசிய சென்னை ஐ.ஐ.டி இயக்குனரான திரு.காமகோடி, கோமியம் (மாட்டின் சிறுநீர்) குடித்தால் ஜூரம் சரியாகுமென அறிவியலுக்கு எதிரான, ஆதாரங்கள் இல்லாத பிற்போக்கு கருத்தை பேசியிருக்கிறார்.

    அறிவியல்படி கோமியம் (மாட்டின் சிறுநீர்) என்பது மாட்டின் கழிவு, மேலும் ஏற்கனவே நோய்வாய்ப்பட்டிருக்கும் மாடாக இருந்தால் மனிதர்களுக்கு தீங்கு விளைவிக்கக்கூடிய. நோயைப் பரப்பக்கூடிய நுண்ணுயிரிகள் அந்த மாட்டின் சிறுநீரில் இருக்கும். இதை மனிதர்கள் அருந்தினால் வயிற்றுப்போக்கு, காய்ச்சல், சுவாசக் கோளாறு உள்ளிட்ட பல நோய்கள் ஏற்பட்டு உயிருக்கே ஆபத்தாக முடியலாம் என்று மருத்துவர்கள் எச்சரிக்கும் நிலையில், அறிவியலை ஊக்குவிக்கவேண்டிய இந்திய தொழில்நுட்பக் கழகத்தின் இயக்குனர் அறிவியலுக்கு எதிராக பேசியிருப்பதை தமிழ்நாடு மாணவர் கழகம் கண்டிக்கிறது.

    மேலும் தன் பேச்சுக்கான ஆதாரத்தை அவர் வெளியிட வேண்டும். தவறும் பட்சத்தில் தான் பேசியது தன்னுடைய சொந்த கருத்து என்றும், அறிவியல்படி தவறு என்றும் பொதுவெளியில் வருத்தம் தெரிவிக்க வேண்டும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ×