என் மலர்
நீங்கள் தேடியது "fake preacher போலி சாமியார்"
- அபினவ் அரோராவை ஆன்மீக தலைவரான சுவாமி ராமபத்ராச்சார்யா விமர்சித்துள்ளார்.
- சுவாமி ராமபத்ராச்சார்யா முன்பு அபினவ் அரோரா நடனமாடியது ட்ரெண்டானது.
அபினவ் அரோரா என்ற 10 வயதான சிறுவன் தன்னை தானே ஆன்மீக போதகர் என்று அறிவித்து கொண்டு ஆன்மீக போதனைகளை வழங்கி வருகிறார். இந்த சிறுவனை இன்ஸ்டாகிராமில் 9.58 லட்சம் பேரும் பேஸ்புக்கில் 2.2 லட்சம் பேரும் பின்தொடர்கின்றனர். சிறுவனது யூடியூப் சேனலை 1.3 லட்சம் பேர் சப்ஸ்க்ரைப் செய்துள்ளனர்.
கிருஷ்ணர் மற்றும் ராதை பற்றிய சொற்பொழிவுகளால் அபினவ் அரோரா இணையத்தில் வைரல் ஆனார்.
'பால் சந்த் பாபா' என்று அழைக்கப்படும் அபினவ் அரோராவை இந்து மத ஆன்மீக தலைவரான சுவாமி ராமபத்ராச்சார்யா கடுமையாக விமர்சித்துள்ளார்.
Guruji Over Viral Kid Abhinav Arora:pic.twitter.com/vXAMKlUJAU https://t.co/xtJbxTn9Bh
— Ghar Ke Kalesh (@gharkekalesh) October 26, 2024
துறவிகள் போன்று ஆன்மீக சொற்பொழிவுகளை ஆற்றும் குழந்தைகளைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் என்று சுவாமி ராமபத்ராச்சார்யாவிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
அதற்கு பதில் அளித்த அவர், இது துரதிர்ஷ்டவசமானது. அபினவ் அரோரா ஒரு 'முட்டாள்' பையன். பகவான் கிருஷ்ணர் தன்னுடன் படிக்கிறார் என்று அந்த சிறுவன் கூறுகிறார். பிருந்தாவனத்திலும் நான் அவரை திட்டியிருந்தேன்" என்று தெரிவித்தார்.
சமீபத்தில் நடந்த ஒரு மத நிகழ்ச்சியின் போது, சுவாமி ராமபத்ராச்சார்யா முன்பு அபினவ் அரோரா நடனமாடியது ட்ரெண்டானது. அப்போது கடுப்பான சுவாமி ராமபத்ராச்சார்யா அந்த சிறுவனை கீழே இறங்க சொன்னார். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலானது.
- அங்கு வந்த ஒரு சாமியார், கீர்த்தனாவிடம் உங்களுக்கு நேரம் சரியில்லை. சிலர் உங்கள் வீட்டில் மாந்திரீகம் செய்து வைத்துள்ளனர்.
- அதனால் உங்கள் குடும்பத்தினருக்கு உடல் நல குறைவு, பண கஷ்டம் உட்பட ஆபத்து ஏற்படும் என்றார்.
நாமக்கல்:
நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் அருகில் உள்ள பச்சுடையாம்பட்டி புதூரை சேர்ந்தவர் வினோத்குமார். இவரது மனைவி கீர்த்தனா (வயது 23). சம்பவத்தன்று கீர்த்தனா வீட்டில் தனியாக இருந்தார்.
அப்போது அங்கு வந்த ஒரு சாமியார், கீர்த்தனாவிடம் உங்களுக்கு நேரம் சரியில்லை. சிலர் உங்கள் வீட்டில் மாந்திரீகம் செய்து வைத்துள்ளனர். அதனால் உங்கள் குடும்பத்தினருக்கு உடல் நல குறைவு, பண கஷ்டம் உட்பட ஆபத்து ஏற்படும் என்றார். மேலும் மாந்திரீகம் செய்து, அதை நான் சரி செய்கிறேன் எனக்கூறி கையில் வைத்திருந்த விபூதியை கீர்த்தனாவின் முகத்தில் வீசினார்.
அத்துடன் அவர் போட்ட சாம்பிராணி புகை வீடு முழுவதும் பரவியது. இதை பயன்படுத்தி, கீர்த்தனா வீட்டின் பீரோவில் வைக்கப்பட்டிருந்த ரூ.15 ஆயிரத்தை திருடி கொண்டு, அந்த சாமியார் அங்கிருந்து சென்று விட்டார்.
கீர்த்தனா பீரோவை திறந்து பார்த்தபோது, பணம் கொள்ளையடிக்கப்பட்டது தெரியவந்தது. இதுகுறித்து சேந்தமங்கலம் போலீசில் கீர்த்தனா புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீசார், வழக்கு பதிவு செய்து போலி சாமியாரை தேடி வருகிறார்கள்.