என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "அய்யா வைகுண்டசாமி"
- விஜய்வசந்த் எம்.பி. தொடங்கி வைத்தார்
- அய்யா வைகுண்டசாமி நிழல் தாங்கல் திருப்பணி தொடக்க விழா
கன்னியாகுமரி :
கொட்டாரம் அருகே உள்ள சந்தையடியில் அய்யா வைகுண்டசாமி நிழல் தாங்கல் திருப்பணி தொடக்க விழா நேற்று நடந்தது. இதையொட்டி அதிகாலை 5 மணிக்கு அய்யா வுக்கு விளக்கு நிய மித்து பணிவிடை நடந்தது.
பின்னர் அய்யா வைகுண்டசாமி நிழல் தாங்கல் திருப்பணி தொடக்க விழா நடந்தது. நிகழ்ச்சிக்கு திருப்பணி குழு தலைவரும் அகஸ்தீஸ்வரம் பேரூராட்சி முன்னாள் தலைவருமான சந்தையடி பாலகிருஷ்ணன் தலைமை தாங்கினார். திருப்பணிக்குழு பொருளாளர் சிவராஜன், செயலாளர் ராமதாஸ், ஒருங்கிணைப்பாளர் பாலசுந்தரம், துணை தலைவர்கள் மனோகரன், குமார் என்ற ராஜா, பால் ராஜ், துணை செயலாளர்கள் சிங்காரவேல், செல்வராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இந்த நிகழ்ச்சியில் விஜய் வசந்த் எம்.பி. சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு திருப்பணியை தொடங்கி வைத்தார். சாமிதோப்பு பாலபிரஜாபதி அடிகளார், எம்.ஆர்.காந்தி எம்.எல்.ஏ., சாமிதோப்பு பையன்ராஜா, அய்யா வைகுண்டசாமி கோவில் தர்மகர்த்தாக்கள் பாலசுந்தரம், மனோகர செல்வன், வெள்ளையன் தோப்பு ஊர் தலைவர் ரத்தின சிகாமணி, கவுரவ தலைவர் ராமச்சந்திரன், துணை தலைவர் கிருஷ்ண சாமி, ஈச்சன்விளை ஊர் கவுரவ தலைவர் கணேச மார்த்தாண்டன், கவர்குளம் தேரிவிளை ஊர் தலைவர் ராஜபாண்டியன் முன்னாள் ஊர் தலைவர் தாமோதரன் மற்றும் தங்கநடார், நம்பி நாதன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- 28-ந்தேதி நடக்கிறது
- ஏற்பாடுகளை சந்தையடி ஊர் பொதுமக்கள் மற்றும் அறங்காவலர் குழு வினர் செய்து வருகிறார்கள்.
கன்னியாகுமரி:
கொட்டாரம் அருகே உள்ள சந்தையடியில் அய்யா வைகுண்டசாமி நிழல் தாங்கல் திருப்பணி தொடக்க விழா, தேவி ஸ்ரீ முத்தாரம்மன் கோவில் மகா கும்பாபிஷேக விழா மற்றும் கார்த்திகை சிறப்பு திருவிழா ஆகியவை முப்பெரும் விழாவாக வருகிற 28-ந் தேதி முதல் டிசம்பர் 12-ந் தேதி வரை நடக்கிறது.
28-ந்தேதி அதிகாலை 5 மணிக்கு அய்யாவுக்கு விளக்கு நியமித்து பணிவிடை யும், காலை 7.30 மணிக்கு மேல் 8.15 மணிக்குள் அய்யாவைகுண்ட சாமி நிழல் தாங்கல் திருப்பணி தொடக்க விழாவும் நடக்கிறது. 29-ந்தேதி தேவி ஸ்ரீ முத்தாரம்மன் கோவிலில் மகா கும்பாபிஷேக விழா தொடங்குகிறது. இதை யொட்டி அன்று அதிகாலை 5.30 மணிக்கு கணபதி ஹோமமும், காலை 7.30 மணிக்கு மிருத்தியஞ்சய ஹோமமும், 9.30 மணிக்கு பிம்பம் சுத்தம் செய்யும் பூஜையும் நடக்கிறது.
மாலை 5.30 மணிக்கு பகவதி பூஜையும், 6.30 மணிக்கு சுதர்சன ஹோமமும், சுமங்கலி பூஜையும் நடக்கிறது. 30-ந் தேதி அதிகாலை 5.30 மணிக்கு கணபதி ஹோமமும், காலை 7.30 மணிக்கு அய்யா நிழல் தாங்கலில் இருந்து அபிஷேக தீர்த்தம் ஊர்வல மாக ஸ்ரீதேவி முத்தாரம்மன் கோவிலுக்கு எடுத்து வரும் நிகழ்ச்சியும் நடக்கிறது. காலை 10.45 மணி முதல் 11.45 மணி வரை மகா கும்பாபிஷேகம் நடக்கிறது. பகல் 12 மணிக்கு தீபாராத னையும் 12.30 மணிக்கு சமபந்தி விருந்தும் நடக்கிறது.
அதைத்தொடர்ந்து 31-ந் தேதி முதல் டிசம்பர் 11-ந்தேதி வரை இரவு 7 மணிக்கு ஸ்ரீதேவி முத்தாரம்மன் மற்றும் பரிவார மூர்த்திகளுக்கு 41 நாட்கள் தொடர்ந்து சிறப்பு பூஜைகள் நடக்கிறது. டிசம்பர் மாதம் 10-ந் தேதி காலை 6 மணிக்கு அய்யாவுக்கு விளக்கு நிய மித்தல் பணிவிடை நடக்கிறது. 11 மணிக்கு அய்யா வுக்கு பணிவிடையும் பகல் 12 மணிக்கு உச்சிப்படிப்பும் 1 மணிக்கு பால் தர்மமும் நடக்கிறது. மாலை 5 மணிக்கு அய்யாவுக்கு பணிவிடையும் 6.30 மணிக்கு அய்யா கருட வாகனத்தில் எழுந்தருளி பவனி வருதலும் இரவு 7 மணிக்கு அய்யாவுக்கு உகப்ப டிப்பும் 8 மணிக்கு அன்னதர்ம மும் நடக்கிறது.
மறுநாள் 12-ந்தேதி ஸ்ரீ தேவி முத்தாரம்மன் கோவிலில் சிறப்பு கொடை விழா நடக்கிறது. இதை யொட்டி அன்று அதிகாலை 5 மணிக்கு அம்மனுக்கு திருவிளக்கு ஏற்றுதலும் 6 மணிக்கு அம்மனுக்கு அலங்கார தீபாரதனையும் 6.30 மணிக்கு அம்மன் கடல் நீராடி வருதலும் நடக்கிறது. காலை 8 மணிக்கு நையாண்டி மேளமும் 9 மணிக்கு நாரா யண சுவாமிக்கு சிறப்பு பூஜையும் 10 மணிக்கு ஸ்ரீ தர்மசாஸ்தாவுக்கு சிறப்பு பூஜையும் நடக்கிறது. 11-45 மணிக்கு அம்மனுக்கு அலங்கார பூஜையும் பகல் 12 மணிக்கு மாரியம்மன், உச்சினி மாகாளியம்மன் முத்தாரம்மன் மஞ்சள் நீராடுதல் நிகழ்ச்சி நடக்கிறது. 1 மணிக்கு சமபந்தி விருந்தும் பிற்பகல் 2-30 மணிக்கு செங்கிடாகாரசாமி, வெள் ளைக்கார சாமி, கருங்கிடகார சாமிகளுக்கு சிறப்பு அலங்காரபூஜைகளும் நடக்கிறது. மாலை 4 மணிக்கு அம்மன் சிம்ம வாகனத்தில் எழுந்தருளி பவனி வருதலும் 6 மணிக்கு மாசானசாமி மற்றும் சுடலை மாடசாமிக்கு சிறப்பு அலங்கார பூஜையும் நடக்கிறது. இரவு 8 மணிக்கு இனிப்பு வழங்குதல் நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை சந்தையடி ஊர் பொதுமக்கள் மற்றும் அறங்காவலர் குழு வினர் செய்து வருகிறார்கள்.
- தினமும் அய்யாவுக்குப் பணிவிடை, வாகன பவனி, உச்சிப்படிப்பு, உகப்படிப்பு, அன்னதா்மங்கள் நடைபெறுகிறது
- கடலில் கலி வேட்டையாடும் நிகழ்ச்சி நடக்கிறது
கன்னியாகுமரி :
கன்னியாகுமரி அருகே உள்ள முட்டப்பதியில் அய்யா வைகுண்ட சுவாமி கோவில் உள்ளது. இந்த கோவிலில் பங்குனி மாத 11 நாள் திருவிழா கடந்த 24-ந்தேதி தொடங்கியது.
திருவிழாவையொட்டி தினமும் அய்யாவுக்குப் பணிவிடை, வாகன பவனி, உச்சிப்படிப்பு, உகப்படிப்பு, அன்னதா்மங்கள் நடைபெற்று வருகின்றன. 8-ம் நாளான நாளை அதிகாலை 4 மணிக்கு அய்யாவுக்குப் பணிவிடை, உகப்படிப்பு, நண்பகல் 12 மணிக்கு உச்சிப்படிப்பு, பால்அன்ன தா்மம் ஆகியவை நடக்கிறது.இரவு 7 மணிக்குஅய்யா வைகுண்டசாமிபலவண்ண மலா்களால் அலங்கரிக்கப் பட்ட வெள்ளைக்குதிரை வாகனத்தில் எழுந்தருளி பதியில்இருந்துமேளதாள ங்கள் முழங்கஊா்வலமாக புறப்பட்டுஒற்றையால்வி ளை, மாதவபுரம் வழியாக முட்டப்பதி வரை பவனி வந்து வடக்கு வாசலுக்கு எதிரேஉள்ள கடலில் கலி வேட்டையாடும் நிகழ்ச்சி நடக்கிறது. இரவு 11 மணிக்கு அன்னதா்மம் நடக்கிறது.
9, 10-ம் நாள் திருவி ழாக்களில் இரவு 7.30 மணிக்கு அய்யா சப்பர வாகனத்தில்எழுந்தருளி பதியைச் சுற்றி பவனி வரும்நிகழ்ச்சிநடக்கிறது.
11-ம் நாள்திருவிழாவான வருகிறஏப்ரல்3-ந்தேதிபக ல்12மணிக்குதேரோட்டம் நடக்கிறது. மறு நாள் (4-ந்தேதி) அதிகாலை திருக் கொடி இறக்குதலும் அதைத் தொடா்ந்து தான தா்மங்களும் நடக்கிறது.
திருவிழாவுக்கான ஏற்பாடுகளை முட்டப்பதி தலைமை தா்மகா்த்தா பாலசுந்தரம், தர்மகர்த்தா செல்வராஜ் ஆகியோா் செய்துவருகின்றனா்.
- இன்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது
- திருவிழா அடுத்த மாதம் (ஏப்ரல்) 3-ந்தேதி தேதி வரை 11 நாட்கள் தொடர்ந்து நடக்கிறது.
கன்னியாகுமரி:
கன்னியாகுமரி அருகே உள்ள முட்டப்பதியில் அய்யா வைகுண்ட சாமி கோவில் பங்குனி தேரோட்ட திருவிழா இன்று காலை கொடி ஏற்றத்துடன் தொடங்கியது. திருவிழா அடுத்த மாதம் (ஏப்ரல்) 3-ந்தேதி தேதி வரை 11 நாட்கள் தொடர்ந்து நடக்கிறது.
இதையொட்டி 1-ம் திருவிழாவான இன்று(24-ந் தேதி) அதிகாலை 5.30 மணிக்கு திருக்கொடியேற்றம் நிகழ்ச்சி நடந்தது. கொடிபட்டத்தை மலர்களால் அலங்கரித்து கோவிலை சுற்றி மேளதாளம் முழங்க ஊர்வலமாக எடுத்து வந்தனர். பின்னர் கோவிலின் முன்புறம் உள்ள கொடிமரத்தில் மேளதாளங்கள் மங்கல இசை மற்றும் சங்கு நாதம் முழங்க "அய்யா அரகர சிவசிவ" என்ற பக்தி கோஷம் விண்ணதிர கொடி ஏற்றப்பட்டது.
முட்டப்பதி தலைமை தர்மகர்த்தா பாலசுந்தரம் கொடி ஏற்றி வைத்தார். நிகழ்ச்சியில் ஏராளமான அய்யாவழி பக்தர்கள் கலந்து கொண்டனர். அதன்பின்னர் முட்டப் பதி கடலில் அய்யா வழி பக்தர்கள் தீர்த்தமாடி பதமிடும் நிகழ்ச்சி நடந்தது. பின்னர் உச்சிப்படிப்பு, அன்ன தர்மம் போன்ற நிகழ்ச்சிகளும் நடந்தது. இரவு 7 மணிக்கு அய்யா கருட வாகனத்தில் எழுந் தருளி கோவிலை சுற்றி மேளதாளங்கள்முழங்க வலம் வரும் நிகழ்ச்சி நடக்கிறது.
2-ம் திருவிழா வான நாளை (25-ந்தேதி) முதல் 7-ம் திருவிழாவான 30-ந் தேதி வரை தினமும் பணி விடைகள், உச்சிப் படிப்பு, தர்மங்கள் மற்றும் இரவு வாகன பவனி போன்றவை நடக்கிறது. 2 மற்றும் 3-ம் திருவிழா அன்று இரவு 7.30 மணிக்கு அய்யா கருட வாகனத்திலும், 4 மற்றும் 5-ம் திருவிழா அன்று இரவு 7.30 மணிக்கு அன்னவாகனத்திலும், 6-ம் திருவிழா அன்று இரவு 7.30 மணிக்கு சர்ப்ப வாகனத்திலும், 7-ம்திருவிழாஅன்றுஇரவு 7.30மணிக்கு அய்யாகருட வாகனத்திலும் பவனி வரும் நிகழ்ச்சியும் நடக்கிறது.
8-ம் திருவிழாவான 31-ந்தேதி அதிகாலை 4 மணிக்கு அய்யாவுக்கு பணிவிடையும் அதைத்தொடர்ந்து உகப்படிப்பும் நடக்கிறது. பகல் 12 மணிக்கு உச்சிப் படிப்பு, பால்அன்னதர்மம் போன்றவை நடக்கிறது. இரவு 7 மணிக்கு அய்யா வைகுண்டசாமி பல வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்ட குதிரை வாகனத்தில் எழுந்தருளி கோவிலில் இருந்து மேளதாளங்கள் முழங்க ஊர்வலமாக புறப்பட்டு ஒற்றையால்விளை, மாதவபுரம் வழியாக முட்டப்பதி வரை பவனி வந்து வடக்கு வாசலுக்கு எதிரே அமைந்துஉள்ள கடலில் கலிவேட்டையாடும் நிகழ்ச்சி நடக்கிறது. இரவு 11 மணிக்கு அன்னதர்மம் நிகழ்ச்சி நடக்கிறது.
9 மற்றும் 10-ம் திருவிழா நாட்களில் இரவு 7.30 மணிக்கு சப்பர வாகனத்தில் எழுந்தருளி கோவிலை சுற்றி பவனி வரும் நிகழ்ச்சி நடக்கிறது.11-ம் திருவிழாவான 3-ந்தேதி பகல் 12 மணிக்கு அய்யா தேரில் எழுந்தருளி பதியை சுற்றி வலம் வரும் தேரோட்ட நிகழ்ச்சி நடக்கிறது. 4-ந் தேதி திருக்கொடி இறக்க நிகழ்ச்சியும் தான தர்மங்களும் நடக்கிறது.
திருவிழாவுக்கான ஏற்பாடு களை முட்டப்பதி தலைமை தர்மகர்த்தா பாலசுந்தரம், தர்மகர்த்தா செல்வராஜ் ஆகியோர் செய்து வருகிறார்கள்.
- பகல் 11 மணிக்கு அய்யா வைகுண்டசாமி பல்லக்கு வாகனத்தில் தேருக்கு எழுந்தருளினார்.
- அய்யா வழி பக்தர்கள் அய்யா சிவ சிவ அரகரா அரகரா பக்தி கோஷமிட்டவாறு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
தென்தாமரைகுளம்:
சாமிதோப்பு அய்யா வைகுண்டசாமி தலைமைப்பதியில் தைத்திருவிழா கடந்த 20-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா தொடர்ந்து 11 நாட்கள் நடந்தது.
விழாவின் 8-வது நாளில் அய்யா வைகுண்டசாமி வெள்ளை குதிரை வாகனத்தில் முத்திரி கிணற்றங்கரையில் கலி வேட்டையாடும் நிகழ்ச்சி நடைபெற்றது. 9 மற்றும் 10-ம் திருவிழாக்களில் இரவு வாகன பவனியும் தொடர்ந்து அன்னதானமும் நடந்தது. விழாவின் 11-ம் நாளான இன்று மதியம் 12 மணிக்கு தேரோட்ட நிகழ்ச்சி நடைபெற்றது.
தேரோட்டத்தை முன்னிட்டு இன்று அதிகாலை 5 மணிக்கு அய்யாவுக்கு சிறப்பு பணிவிடையும், தொடர்ந்து யுகப்படிப்பும் நடந்தது. பகல் 11 மணிக்கு அய்யா வைகுண்டசாமி பல்லக்கு வாகனத்தில் தேருக்கு எழுந்தருளினார். தொடர்ந்து 12 மணிக்கு அலங்கரிக்கப்பட்ட பஞ்சவர்ண தேரில் அய்யா வீற்றிருக்க தேரோட்டம் தொடங்கியது.
தேரோட்ட நிகழ்ச்சிக்கு தலைமை பதி குரு பால ஜனாதிபதி தலைமை தாங்கினார். குருமார்கள் பால லோகாதிபதி, ராஜவேல், பையன் கிருஷ்ணராஜ், பையன் கிருஷ்ண நாமமணி, பையன் ஆனந்த், ஜனா யுகேந்த், ஜனா வைகுந்த், நேம்ரிஷ்,பால் பையன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில் அய்யா வழி பக்தர்கள் "அய்யா சிவ சிவ அரகரா அரகரா" பக்தி கோஷமிட்டவாறு தேரை வடம் பிடித்து இழுத்தனர். முத்து குடைகளும், மேள தாளங்களும் முன்செல்ல தேரோட்டம் தொடங்கியது.
தலைமைப்பதி முன்பு இருந்து புறப்பட்ட தேர் கிழக்கு ரதவீதி, தெற்கு ரதவீதி, மேற்கு ரதவீதி வழியாக வடக்கு ரத வீதியில் உள்ள தலைமை பதியின் வடக்கு வாசல் பகுதிக்கு வந்தது. வடக்கு வாசல் பகுதியில் அய்யாவழி பக்தர்கள் அய்யா வைகுண்டசாமிக்கு வெற்றிலை, பாக்கு, பழம், பூ ஆகியவை அடங்கிய பொருட்களை சுருளாக படைத்து வழிபடுவதற்காக நீண்ட வரிசையில் காத்திருந்தனர். அங்கு பக்தர்களின் சுருள் ஏற்பு நிகழ்ச்சியும், தொடர்ந்து பக்தர்களுக்கு அருளாசி வழங்குதலும் நடைபெற்றது. பின்னர் இன்று மாலை 6 மணியளவில் தேர் நிலைக்கு வந்தடைகிறது. தேரோட்ட நிகழ்ச்சியில் தமிழ்நாடு மற்றும் கேரளாவைச் சேர்ந்த அய்யாவழி பக்தர்கள் பலர் கலந்து கொண்டனர். இரவு 7 மணிக்கு அய்யா வைகுண்டசாமி ரிஷப வாகனத்தில் தெருவீதி வலம் வரும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.
நாளை (செவ்வாய்க்கிழ மை) காலை 6 மணிக்கு அய்யாவுக்கு பணிவிடையும் தொடர்ந்து திருக்கொடி இறக்கும் நிகழ்ச்சியும் நடைபெறும்.
- 20-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது
- வைகாசி, ஆவணி மற்றும் தை மாதங்களில் 11 நாட்கள் திருவிழா நடைபெறுவது வழக்கம்.
கன்னியாகுமரி:
கன்னியாகுமரி மாவட்டம் சாமித்தோப்பில் அய்யா வைகுண்டசாமி தலைமைப்பதி அமைந்துள்ளது. இங்கு ஆண்டு தோறும் வைகாசி, ஆவணி மற்றும் தை மாதங்களில் 11 நாட்கள் திருவிழா நடைபெறுவது வழக்கம்.
இந்த ஆண்டுக்கான தை திருவிழா வருகிற 20-ந் தேதி (வெள்ளிக்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. கொடி யேற்றத்தையொட்டி அதிகாலை 4 மணிக்கு முத்திரி பதமிடுதல், நடை திறந்து விளக்கேற்றுதல், காலை 6 மணிக்கு கொடிப்பட்டம் தயாரிக்கும் நிகழ்ச்சி, தொடர்ந்து 6.30 மணிக்கு திருக்கொடியேற்றம் நடை பெறுகிறது. தலைமைப்பதி குரு பால ஜனாதிபதி திருக்கொடியை ஏற்றி வைக்கிறார். குருமார்கள் பால லோகாதிபதி, ராஜவேல், பையன் கிருஷ்ண ராஜ், பையன் கிருஷ்ண நாம மணி, பையன் ஆனந்த், ஜனா யுகேந்த், ஜனா வைகுந்த், நேம்ரிஷ், பால் பையன் ஆகியோர் முன்னிலை வகித்து பணிவிடைகளை செய்கின்றனர். தொடர்ந்து வாகன பவனி, பகல் 12 மணிக்கு வடக்கு வாசலில் அன்னதர்மம், இரவு அய்யா தொட்டில் வாகனத்தில் தெருவை சுற்றி பவனி வரும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.
கொடியேற்ற நிகழ்ச்சியில் தமிழ்நாடு, கேரளா முழுவதும் இருந்து அய்யா வழி பக்தர்கள் திரளாக கலந்து கொள்கின்றனர். விழா நாட்களில் தினமும் காலை, மாலை பணிவிடை, இரவு வாகன பவனி, அன்னதர்மம் நடக்கிறது.
வருகிற 27-ந் தேதி மாலை 4 மணிக்கு அய்யா வெள்ளை குதிரை வாகனத்தில் எழுந்தருளி முத்திரி கிணற்றங்கரையில் கலி வேட்டையாடும் நிகழ்ச்சி நடக்கிறது. தொடர்ந்து சுற்றுப்புற கிராமங்களுக்கு குதிரை வாகனத்தில் சென்று பக்தர்களுக்கு அருள் பாலித்தல், இரவு 11 மணிக்கு தலைமைப்பதியின் வடக்கு வாசலில் அய்யாவின் தவக்கோல காட்சி, அன்னதர்மம் நடக்கிறது.
30-ந் தேதி (திங்கட் கிழமை) பகல் 12 மணிக்கு தேரோட்டம் நிகழ்ச்சி நடக்கிறது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு அய்யா வைகுண்டசாமியை வழிபடுவார்கள். விழா வுக்கான ஏற்பாடுகளை பதி நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்