என் மலர்
நீங்கள் தேடியது "குடி போதையில் ரோட்டில் படுத்து"
- இன்று காலை ஒரு முதியவர் மது போதை யில் நடந்து வந்து கொண்டு இருந்தார்.
- தொடர்ந்து பொது மக்கள் அவரை எழுப்ப முயற்சித்தும் அவர் எழுந்து செல்ல மறுத்துார்
அந்தியூர்
அந்தியூர் பஸ் நிலை யத்தில் இருந்து ஆப்பகூடல், கோபி செட்டிபாளையம் மற்றும் பல்வேறு பகுதி களுக்கு பஸ்கள் தினமும் சென்று வருகின்றன.
இதே போல் தவிட்டுபாளையம் அத்தாணி ரோட்டிலும் பஸ்கள் உள்பட பல்வேறு வாகனங்கள் சென்று வருகிறது. இதனால் காலை மற்றும் மாலை நேரங்களில் இந்த பகுதி பரபரப்பாக காணப்படும்.
மது போதை
இந்த நிலையில் தவிட்டு ப்பாளையம் மார்க்கெட் பஸ் நிறுத்தம் பகுதியில் அத்தாணி செல்லும் ரோட்டில் இன்று காலை ஒரு முதியவர் மது போதை யில் நடந்து வந்து கொண்டு இருந்தார்.
அவருக்கு போதை அதிகமானதால் தொடர்ந்து அவர் நடக்க முடியாமல் ரோட்டின் நடுவே படுத்து கொண்டார்.
இதனால் அந்த வழியாக வாகனங்களில் வந்தவர்கள் கடும் அவதி அடைந்தனர். மேலும் கார், வேன் மற்றும் இரு சக்கர வாகனங்களில் வந்தவர்கள் ரோட்டில் ஒருவர் படுத்து கொண்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்து தட்டுதடுமாறி சென்றனர்.
இதனால் வாகன ஓட்டிகளுக்கு இடை யூறாக இருந்தது. கவனி க்காமல் வந்த ஒரு சில வாகன ஓட்டிகள் அருகே வந்ததும் திடீெரன பிரேக் போட்டு நிறுத்தினர்.
பரபரப்பு
மேலும் சாலையில் படுத்தவருக்கு ஏதேனும் உடல்நலக் குறைவினால் கீழே விழுந்து விட்டாரா என்று நினைத்து அந்த பகுதியில் உள்ளவர்கள் அவர் அருகே சென்று பார்த்தார்கள். அப்போது அவர் அதிகமான மது போதையில் இருந்தது தெரிய வந்தது. மேலும் அவரால் எழுந்து நிற்க கூட முடியவில்லை.
தொடர்ந்து பொது மக்கள் அவரை எழுப்ப முயற்சித்தும் அவர் எழுந்து செல்ல மறுத்து தகராறு செய்து ரோட்டிலேயே படுத்து கொண்டார். இதனையடுத்து பொது மக்கள் 108 ஆம்புலன்சு வர சொல்லுங்கள் அவரை மருத்துவமனைக்கு அழைத்து செல்லலாம் என்று கூறினர்.
இதை கேட்டு மது போதையில் இருந்தவர் சிறிது நேரத்துக்கு பிறகு அவரே தட்டு தடுமாறி எழுந்து தள்ளாடிய நிலை யில் அந்த இடத்தை விட்டு சென்று விட்டார். இதனால் தவிட்டுப்பாளையம் மார்க்கெட் பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.