என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தூக்க மாத்திரை"

    • வாழ்க்கையில் வெறுப்படைந்து தூக்க மாத்திரை சாப்பிட்டு உள்ளார்.
    • மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர்

    குன்னத்தூர் :

    குன்னத்தூர் அருகே கணபதி பாளையத்தை சேர்ந்தவர் பாட்டப்பன் (வயது 93). வாழ்க்கையில் வெறுப்படைந்த இவர் கடந்த 12ந் தேதி தூக்க மாத்திரை சாப்பிட்டு உள்ளார். இதனால் பயங்கர வயிற்று வலியால் அவதிப்பட்டு உள்ளார்.

    பாட்டப்பனை உடனடியாக கோபி தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர்.பின்னர் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி பாட்டப்பன் இறந்தார். இது குறித்து குன்னத்தூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் துரைசாமி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    • உணவு மற்றும் பானங்களில் நொறுக்கப்பட்ட தூக்க மாத்திரைகளையும், போதைப்பொருள்களையும் கலந்து கொடுத்தார்
    • தீயணைப்பு வீரர்கள், லாரி ஓட்டுநர்கள், பத்திரிகையாளர்கள் மற்றும் DJக்கள் அந்த 51 பேரில் அடங்குவர்.

    பிரான்சில் தெற்குப் பகுதியில் அமைதியான நகரங்கள் மற்றும் இயற்கை எழில் கொஞ்சும் கிராமப்புறங்களில் ஒன்று மசான் கிராமம்.

    ஆனால் இங்கு கண்டதை 10 ஆண்டுகளாக ஒரு பயங்கர ரகசியமும் ஒளிந்திருந்தது. பிரான்ஸ் நாட்டையே அதிர்ச்சிக்குள்ளாக்கிய ஒரு வழக்கு அது. டொமினிக் பெலிகாட் என்ற கணவன் கடந்த 10 ஆண்டுகால காலத்தில் சுமார் 51 ஆண்களை வைத்து தனது மனைவி கிசெல் -லை பாலியல் பலாத்காரம் செய்ய வைத்த வழக்கு அது.

    தற்போது 72 வயதாகும் டொமினிக் பெலிகாட் 72 வயதாகும் தனது முன்னாள் மனைவி கிசெல் -க்கு ஏறக்குறைய 2011 முதல் 2020 வரை 10 ஆண்டுகளாக, அவர் அறியாமலேயே டொமினிக் உணவு மற்றும் பானங்களில் நொறுக்கப்பட்ட தூக்க மாத்திரைகளையும், போதைப்பொருள்களையும் கொடுத்து சுயநினைவை இழக்கச் செய்து இந்த பாலியல் சித்திரவதைகளில் ஈடுபடுத்தியுள்ளார்.

    கிசெல் பெலிகாட்  

     

    போதைப்பொருள் கடுமையான நினைவாற்றல் இழப்பை ஏற்படுத்தியதால் தனக்கு நேர்வது இன்னதென அறியாமலேயே கிசெல் இருந்துள்ளார்.

    இப்போது தடைசெய்யப்பட்ட வலைத்தளமான Coco.fr மூலம் கிராமத்தின் அருகில் உள்ள பகுதிகளில் உள்ள சுமார் 51 ஆண்களை அலுத்துவந்து இந்த சமயங்களில் கிசெல் - ஐ பாலியல் பலாத்காரம் செய்ய வைத்துள்ளார்.

    2020 ஆம் ஆண்டில் டொமினிக் பெண்களின் பாவாடையின் கீழ் புகைப்படம் எடுப்பதை சூப்பர் மார்க்கெட் பாதுகாவலர் பிடித்ததை அடுத்து கைது செய்யப்பட்டார்.

     

    டொமினிக் பெலிகாட் 

     

     

    அப்போது அவரது செல்போன் உள்ளிட்ட டிஜிட்டல் சாதனங்களை போலீசார் ஆராய்ந்தபோது கிசெல்-க்கு நேர்ந்த கொடுமை வெளிச்சத்துக்கு வந்தது.

    கிசெல் மீதான சித்திரவதை மற்றும் பலாத்கார வீடியோக்களை போலீசார் கண்டுபிடித்தனர். டொமினிக் படம்பிடித்த இந்தப் பதிவுகள், விசாரணையின் மையச் சான்றாக மாறியது.

    இதனையடுத்து கிச்செல் வழக்கு பிரான்ஸ் சட்ட வரலாற்றில் முக்கியத்துவம் வாய்ந்த வழக்காக மாறியது. போதைப்பொருட்கள் தனது வாழ்க்கையில் துண்டு துண்டான நினைவுகளையும் 10 வருட கால வெற்றிடத்தையும் ஏற்படுத்தியுள்ளதாக கிசெல் உண்மையை அறிந்துகொண்ட கிசெல் கூறுகிறார்.

    டொமினிக் - கிசெல் தம்பதிக்கு 3 குழந்தைகளும் உள்ளனர். வழக்குக்கு மத்தியில் இந்த வருடம் டொமினிக்கை கிசெல் விவாகரத்து செய்தார்.

     

    கிச்செல் - ஐ பலாத்காரம் செய்தவர்களில் 27 முதல் 74 வயது ஆண்கள் அடங்குவர். அருகிலுள்ள கிராமங்கள் மற்றும் நகரங்களில் இருந்து வந்த ஆண்கள், தீயணைப்பு வீரர்கள், லாரி ஓட்டுநர்கள், பத்திரிகையாளர்கள் மற்றும் DJக்கள்  அந்த 51 பேரில் அடங்குவர்.

    அவர்கள் தங்கள் மீதான குற்றச்சாட்டை மறுத்தபோதிலும், வீடியோ ஆதாரங்கள் மூலம் அவர்களில் 50 பேரின் குற்றம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. கடந்த வியாழக்கிழமை வழங்கப்பட்ட இறுதித் தீர்ப்பில் 3 ஆண்டுகள் முதல் 12 ஆண்டுகள் வரை அவர்களுக்கு சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

     

    முக்கிய குற்றவாளி டொமினிக் பெலிகாட் 20 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்றுள்ளார். மற்றொரு பெண்ணை பலாத்காரம் செய்ய முயன்றதற்காகவும், தனது சொந்த மகள் மற்றும் மருமகள்களின் அந்தரங்கமாக படங்களை எடுத்ததற்காகவும் சேர்த்து அவருக்கு இந்த தண்டனை வழங்கப்பட்டுள்ளது.  

     

    • கல்பனாவுக்கு செயற்கை சுவாச கருவி உதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
    • தற்கொலை முயற்சி சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பிரபல பின்னணி பாடகி கல்பனா தூக்க மாத்திரைகளை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்ற சம்பவம் ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

    தெலுங்கானாவின் ஐதரபாத் மாவட்டம் நிசாம்பத் நகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்த பாடகி கல்பனா, கடந்த 2 நாட்களாக அவரது வீடு திறக்கப்படாமல் இருந்ததை கண்டு சந்தேகமடைந்த குடியிருப்பில் வசித்தவர்கள் இதுகுறித்து போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

    தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார், வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது, மயங்கிய நிலையில் கிடந்த கல்பனாவை உடனடியாக மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

    அங்கு, கல்பனாவுக்கு செயற்கை சுவாச கருவி உதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இந்நிலையில், பாடகி கல்பனா சுயநினைவுக்கு திரும்பியாக தகவல் வெளியாகியுள்ளது. நுரையீரலில் தண்ணீர் புகுந்ததால் வென்டிலேட்டர் உதவியோடு சிகிச்சை அளிக்கப்பட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

    மேலும், பாடகி கல்பனா தூக்க மாத்திரை சாப்பிடத்தையும் மருத்துவர்கள் உறுதி செய்துள்ளனர்.

    இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • அதிக மாத்திரை எடுத்துக் கொண்டதால் அம்மாவுக்கு மயக்கம் ஏற்பட்டது.
    • எல்.எல்.பி மற்றும் பி.எச்.டி ஆகியவற்றை ஒரே நேரத்தில் படித்து வருகிறார்.

    சென்னையை சேர்ந்த பிரபல பின்னணி பாடகி கல்பனா ஐதராபாத்தில் வசித்து வருகிறார். இவர் மயக்க நிலையில் மீட்கப்பட்டார். கல்பனா தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதாகக் கூறி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தற்போது அவர் குணமடைந்து வருகிறார்.

    இதுகுறித்து அவரது மகள் தயா பிரசாத் பிரபாகர் கூறியதாவது:-

    "என் அம்மா ஒரு பாடகி, எல்.எல்.பி மற்றும் பி.எச்.டி ஆகியவற்றை ஒரே நேரத்தில் படித்து வருகிறார், இது தூக்கமின்மைக்கு வழிவகுத்தது. தூக்கமின்மையை குணப்படுத்த மருத்துவர்கள் அவருக்கு ஒரு மாத்திரையை பரிந்துரைத்தனர். தூக்கம் வராமல் அதிக மாத்திரை எடுத்துக் கொண்டதால் அம்மாவுக்கு மயக்கம் ஏற்பட்டது. இது தற்கொலை முயற்சி அல்ல.

    "என் அம்மாவும் அப்பாவும் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள். குடும்பத்தில் எல்லோரும் மிகவும் நலமாக இருக்கிறார்கள். தயவுசெய்து எங்கள் விஷயங்களை கையாள வேண்டாம்,"

    இவ்வாறு அவர் கூறினார்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    ×