என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வெளியுறவு அமைச்சகம்"

    • குஜராத் கலவரம் தொடர்பாக பிபிசி ஆவணப்படம் ஒன்றை தயாரித்துள்ளது.
    • இதுதொடர்பான சர்ச்சையில் பிரதமர் மோடிக்கு ஆதரவாக இங்கிலாந்து பிரதமர் கருத்து தெரிவித்துள்ளார்.

    புதுடெல்லி:

    குஜராத் மாநிலத்தில் கடந்த 2002-ம் ஆண்டு நடந்த கலவரத்தில் ஆயிரத்துக்கு மேற்பட்டோர் பலியானார்கள். அப்போது குஜராத் முதல் மந்திரியாக நரேந்திர மோடி இருந்தார்.

    இதற்கிடையே லண்டன் பி.பி.சி. நிறுவனம் குஜராத் கலவரம் குறித்து 'இந்தியா: தி மோடி கொஸ்டின்' என்ற தலைப்பில் 2 பகுதிகள் கொண்ட ஆவணப்படம் தயாரித்துள்ளது. முதல் பகுதி கடந்த செவ்வாய்க்கிழமை ஒலிபரப்பானது. அதில், குஜராத் கலவரத்தில் மோடிக்கு நேரடி தொடர்பு இருப்பது இங்கிலாந்து அரசுக்கு தெரியும் என்று கூறப்பட்டுள்ளது. 2-வது பகுதி 23-ம் தேதி ஒலிபரப்பாகிறது.

    இந்நிலையில், இந்த ஆவணப்படத்துக்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

    இதுதொடர்பாக, மத்திய வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் அரிந்தம் பக்சி கூறியதாவது:

    பி.பி.சி. ஆவணப்படம் அடிப்படையற்ற ஒன்றை முன்னிறுத்தும் வகையில் தயாரிக்கப்பட்ட பிரசார படம். அதில் பாரபட்சமும், தொடரும் காலனி ஆதிக்க மனப்பான்மையும் அப்பட்டமாகத் தெரிகிறது.

    இந்தப் பிரச்சினையை மீண்டும் கிளற விரும்புபவர்களின் வெளிப்பாடாக அப்படம் தோன்றுகிறது. அதன் நோக்கமும், அதற்கு பின்னால் உள்ள செயல்திட்டமும் நமக்கு வியப்பளிக்கிறது என தெரிவித்தார்.

    இந்த சர்ச்சையில் பிரதமர் மோடிக்கு இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் ஆதரவு தெரிவித்துள்ளார்.

    • மாலத்தீவு அதிபர், வெளியுறவு அமைச்சகம் உள்ளிட்ட இணைய தளங்கள் செயலிழந்து பல மணி நேரம் முடங்கின.
    • தேசிய தகவல் தொழில்நுட்ப மையம் இந்தச் சிக்கலை தீர்க்க தீவிரமாக செயல்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டது.

    மாலி:

    மாலத்தீவின் அதிபர், வெளியுறவு அமைச்சகம் மற்றும் சுற்றுலா அமைச்சகத்தின் அதிகாரப்பூர்வ இணைய தளங்கள் செயலிழந்து, பல மணி நேரம் முடங்கின.

    அரசாங்கத்தின் உயர்மட்ட இணைய தளங்கள் வேலை செய்யாததற்கான காரணங்கள் கண்டறியப்படாமல் இருந்து வந்தது. தேசிய தகவல் தொழில்நுட்ப மையம் மற்றும் பிற தொடர்புடைய நிறுவனங்கள் இந்தச் சிக்கலை தீர்க்க தீவிரமாகச் செயல்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டது.

    இந்நிலையில், மாலத்தீவு அரசாங்கத்தின் முடங்கிய இணைய தளங்கள் மீண்டும் மீட்டெடுக்கப்பட்டுள்ளது என தகவல்கள் வெளியாகின.

    • காஷ்மீர் மக்களின் விருப்பங்களை கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும்
    • இன்றும் நமது காஷ்மீர் சகோதரர்களுடன் ஒற்றுமையுடன் நிற்கின்றது

    துருக்கி நாட்டு அதிபர் ரெசெப் தையிப் எர்டோகன் கடந்த வாரம் பாகிஸ்தான் பயணத்தின் போது காஷ்மீர் பிரச்சினை குறித்து கருத்து ஒன்றை தெரிவித்தார். இந்நிலையில் தற்போது அந்த கருத்துக்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

    கடந்த வாரம் பாகிஸ்தானுக்கு இரண்டு நாள் பயணம் மேற்கொண்ட எர்டோகன், "காஷ்மீர் பிரச்சினையை ஐ.நா. தீர்மானத்தின்படி பேச்சுவார்த்தை மூலம் தீர்க்க வேண்டும், காஷ்மீர் மக்களின் விருப்பங்களை கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும்" என்று கூறினார்.

    மேலும் 'நமது தேசமும் (துருக்கி), முன்பு போலவே, இன்றும் நமது காஷ்மீர் சகோதரர்களுடன் ஒற்றுமையுடன் நிற்கின்றது' என்று தெரிவித்தார்.

    எர்டோகனின் கருத்துக்கள் குறித்த கேள்விக்கு நேற்று செய்தியாளர்களிடம் பதிலளித்த வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால், " ஜம்மு காஷ்மீர் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி. இது குறித்து வேறு எந்த நாட்டிற்கும் கருத்து தெரிவிக்க உரிமை இல்லை.

    வேறொரு நாட்டின் உள் விவகாரங்கள் குறித்து கருத்து தெரிவிப்பதற்குப் பதிலாக, இந்தியாவிற்கு எதிராக எல்லை தாண்டிய பயங்கரவாதத்தைப் பயன்படுத்தும் பாகிஸ்தானின் கொள்கையைத் கண்டிப்பது பொருத்தமாக இருந்திருக்கும்.

    பாகிஸ்தானின் இந்தக் கொள்கை ஜம்மு காஷ்மீர் மக்களுக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக உள்ளது. இந்தியாவின் உள் விவகாரங்கள் குறித்த இதுபோன்ற ஆட்சேபனைக்குரிய கருத்துக்களை நாங்கள் நிராகரிக்கிறோம்.

    டெல்லியில் உள்ள துருக்கிய தூதரிடம் நாங்கள் கடுமையான எதிர்ப்பை பதிவு செய்துள்ளோம். இந்தியாவின் பிராந்திய ஒருமைப்பாடு மற்றும் இறையாண்மை குறித்த இத்தகைய பொருத்தமற்ற அறிக்கைகள் ஏற்றுக்கொள்ள முடியாதவை என்று தெரிவித்தார்.  

    • போராட்டக்காரர்களில் ஒருவர் பாதுகாப்பு வளையத்தை மீறி ஜெய்சங்கரின் காரை நிறுத்த முயன்றார்
    • பிரிட்டனின் அலட்சியத்தைப் பிரதிபலிக்கிறது.

    பிரிட்டனில் வெளியுறவு அமைச்சர் எஸ் ஜெய்சங்கரின் பாதுகாப்பு குறைபாடு குறித்து வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் பேட்டியளித்துள்ளார்.

    லண்டனில் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கரின் கார் முன் காலிஸ்தான் ஆதரவாளர்கள் கடந்த புதன்கிழமை போராட்டம் நடத்தினர். போராட்டக்காரர்களில் ஒருவர் பாதுகாப்பு வளையத்தை மீறி ஜெய்சங்கரின் காரை நிறுத்த முயன்றார். அதைத் தொடர்ந்து அவரது பாதுகாப்பு குறித்து கேள்விகள் எழுந்தன.

    இந்நிலையில் இதுகுறித்து பேசிய ஜெய்ஸ்வால், இது காலிஸ்தானியர்களின் அச்சுறுத்தல்கள், மிரட்டல் சம்பவங்கள். இது நமது சட்டப்பூர்வமான இராஜதந்திர நடவடிக்கைகளைத் தடுக்கும் நோக்கில் நடப்பவை மீதான பிரிட்டனின் அலட்சியத்தைப் பிரதிபலிக்கிறது.

    இந்த குழுக்கள் பிரிட்டனில் அச்சுறுத்தல் விடுக்கவும் பிற செயல்களைச் செய்யவும் உரிமம் பெற்றிருப்பது போல் தெரிகிறது. அவர்கள் எங்கள் இராஜதந்திரப் பணிகளைத் தடுக்க முயல்கிறார்கள்.

    இந்த சம்பவங்களில் குற்றவாளிகள் மீது இங்கிலாந்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த விஷயத்தில் பிரிட்டிஷ் வெளியுறவு அலுவலகம் வெளியிட்ட அறிக்கையை நாங்கள் கவனத்தில் கொண்டுள்ளோம் என்று தெரிவித்தார்.

    முன்னதாக இங்கிலாந்து வெளியுறவு அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் இங்கிலாந்து வருகையின் போது சாத்தம் மாளிகைக்கு வெளியே நடந்த சம்பவத்தை நாங்கள் கடுமையாக கண்டிக்கிறோம்.

    அமைதியான போராட்டத்திற்கான உரிமையை இங்கிலாந்து ஆதரிக்கிறது. ஆனால் பொது நிகழ்வுகளை மிரட்டும், அச்சுறுத்தும் அல்லது சீர்குலைக்கும் எந்தவொரு முயற்சியும் முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாதது என்று  கூறப்பட்டிருந்தது.

    இதற்கிடையே மொரிஷியஸின் தேசிய தின கொண்டாட்டங்களில் பங்கேற்க பிரதமர் மோடி,  மார்ச் 11-12 தேதிகளில் மொரிஷியஸுக்கு பயணம் மேற்கொள்வார் என இந்திய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்தது.

    ×