search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "காவ்யா மாறன்"

    • ஆலோசனை கூட்டம் பிசிசிஐ தலைமையகத்தில் நடைபெற்றது.
    • நீண்ட நேர ஆலோசனை நடைபெற்றதாக தகவல்.

    ஐபிஎல் தொடரின் 18-வது சீசன் அடுத்த ஆண்டு நடைபெற உள்ளது. அந்த தொடருக்கு முன் மெகா ஏலம் இந்த ஆண்டு இறுதியில் நடத்தப்பட உள்ளது. இதில் ஒவ்வொரு அணிகளும் எத்தனை வீரர்களை தக்க வைத்துக் கொள்ள முடியும் என்பது தொடர்பான ஆலோசனையில் ஈடுபட்டு வருகின்றன.

    இது தொடர்பாக ஐபிஎல் உரிமையாளர்களுக்கான ஆலோசனை கூட்டம் மும்பையில் உள்ள பிசிசிஐ தலைமையகத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் ஒவ்வொரு அணியினரும், தங்களது விருப்பங்களை கோரிக்கையாக முன்வைத்தன. இது தொடர்பாக நீண்ட நேர ஆலோசனை நடைபெற்றதாகவும், அப்போது சலசலப்புகள் ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது.

     

    இந்த நிலையில், சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியின் உரிமையாளர் காவ்யா மாறன் தனது அணிக்காக சில கோரிக்கைகளை முன் வைத்துள்ளார். அப்போது, அணியில் அதிகபட்சம் ஏழு வீரர்களை தக்க வைத்துக் கொள்ள அனுமதிக்க வேண்டும். இவர்களில் இந்திய வீரர்கள், உள்ளூர் வீரர்கள், சர்வதேச வீரர்கள் என எந்த கட்டுப்பாடும் இருக்க கூடாது.

    ஏலத்தின் போது வீரர்களை தக்க வைத்துக் கொள்வது தொடர்பாக வீரர்களுடன் ஆலோசிக்க அனுமதிக்க வேண்டும். ஒவ்வொரு ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை மெகா ஏலம் நடத்தப்பட வேண்டும் என்பது போன்றவற்றை வலியுறுத்தியதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

    • ஐபிஎல் இறுதிப்போட்டியில் ஹைதராபாத் அணியை வீழ்த்தி கொல்கத்தா கோப்பை வென்றது.
    • ஹைதராபாத் அணி வீரர்களை டிரஸ்ஸிங் ரூமில் சந்தித்த காவ்யா மாறன் அவர்களை பாராட்டி பேசினார்.

    ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டி சென்னை சேப்பாக்கத்தில் இன்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ஐதராபாத் அணி 18.3 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 113 ரன்கள் எடுத்தது. இதனையடுத்து விளையாடிய கொல்கத்தா அணி 10.3 ஓவரில் 2 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 114 ரன்கள் எடுத்து ஐபிஎல் கோப்பையை வென்றது.

    அப்போட்டியை நேரில் கண்டு ரசித்த ஐதராபாத் அணியின் உரிமையாளர் காவ்யா மாறன், ஹைதராபாத் அணியின் தோல்வியை கண்டு கண்ணீர் விட்டு அழுதார். அதை மறைத்து சிரித்தபடியும் அவரது அணியின் வீரர்களுக்கு கைதட்டி வரவேற்றார்.

    அதன் பிறகு ஹைதராபாத் அணி வீரர்களை டிரஸ்ஸிங் ரூமில் சந்தித்த அவர் வீரர்களுக்கு உத்வேகம் ஊட்டினார்.

    அதில், "நீங்கள் அனைவரும் எங்களை மிகவும் பெருமைப்படுத்தியுள்ளீர்கள். அதை உங்களிடம் கூறவே நான் இங்கு வந்தேன். டி20 கிரிக்கெட் விளையாடும் விதத்தை நீங்கள் மாற்றியுள்ளீர்கள். இன்று எல்லாரும் நம்மை பற்றி பேசுகிறார்கள். எல்லா நாளும் நமக்கு வெற்றி கிடைப்பதில்லை. ஆனாலும் நீங்கள் அருமையாக விளையாடினீர்கள். உங்கள் அனைவருக்கும் மிக்க நன்றி, நீங்கள் எங்களை பெருமைப்படுத்தியுள்ளீர்கள்" என்று பேசியுள்ளார்.

    இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. 

    • ஐதராபாத் அணியின் தோல்வியை தாங்கி கொள்ள முடியாமல் அந்த அணியின் உரிமையாளர் காவ்யா மாறன் கண்ணீர் விட்டு அழுதார்.
    • பாலிவுட்டின் மூத்த நடிகரான அமிதாப் பச்சன், காவ்யா மாறனுக்காக வருந்துவதாகத் தெரிவித்துள்ளார்.

    காவ்யா மாறனுக்காக மிகவும் வருந்துகிறேன்.. ஐதராபாத் அணியின் தோல்வி குறித்து அமிதாப் பச்சன் சொன்னது இதுதான்

     நேற்று (மே 26) நடந்த ஐபிஎல் 2024 தொடரின் இறுதிப்போட்டியில் கொல்கத்தா மற்றும் ஐதராபாத் அணிகள் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் வைத்து மோதின. முதலில் டாஸ் வென்ற பேட்டிங்கை தேர்வு செய்த ஐதராபாத் அணி 18.3 ஓவரில் 113 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

    இதனைத் தொடர்ந்து பேட்டிங் இறங்கிய கொல்கத்தா அணி அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி 10.3 ஓவரில் 114 ரன்கள் எடுத்து 3 வது முறையாக வெற்றிக் கோப்பையை தட்டிச் சென்றது. இதற்கிடையில் ஐதராபாத் அணியின் தோல்வியை தாங்கி கொள்ள முடியாமல் அந்த அணியின் உரிமையாளர் காவ்யா மாறன் கேமராவிற்கு எதிர்புறம் திருப்பியபடி கண்ணீர் விட்டு அழுதார்.

    கண்ணீரை மறைத்து சிரித்தப்படி அவரது அணியின் வீரர்களுக்குக் கைதட்டி வரவேற்றார். இதனை பார்த்த ரசிகர்கள் கஷ்டமாக உள்ளது என சமூக வலைத்தளங்களில் கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் பாலிவுட்டின் மூத்த நடிகரான அமிதாப் பச்சன், காவ்யா மாறனுக்காக வருந்துவதாகத் தெரிவித்துள்ளார்.

    அவர் நடத்திவரும் பிளாகில் ஐபிஎல் இறுதிப்போட்டி குறித்து குறிப்பிட்ட அவர், "எஸ்ஆர்ஹச் அணி தோல்வியடைந்தது மிகுந்த ஏமாற்றத்தைத் தருகிறது. ஸ்டேடியத்தில் தோல்விக்குப் பிறகு எஸ்ஆர்ஹச் உரிமையாளர் காவ்யா மாறன் உணர்ச்சிவசப்பட்டு, கண்ணீரில் விட்டார். கேமராக்களில் இருந்து முகத்தைத் திருப்பி, தனது கண்ணீரை அவர் மறைத்தார். அவருக்காக நான் மிகவும் வருடத்தப்படுகிறேன்" என்று தெரிவித்தார்.

     

     

    தொடர்ந்து அந்த பதிவில் அவர், "பரவாயில்லை..மை டியர், தோல்வியில் மனத்தைத் தளரவிட்டுக்கொடுக்காதே நாளை மற்றொரு நாளே!" என்று ஆறுதல் கூறியுள்ளார். 

     

     

    • கொல்கத்தா அணிக்கு எதிரான இறுதி போட்டியில் ஐதராபாத் அணி தோல்வியடைந்தது.
    • கொல்கத்தா அணி 10.3 ஓவரில் 2 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 114 ரன்கள் எடுத்து ஐபிஎல் கோப்பையை வென்றது.

    ஐபிஎல் தொடரின் இறுதிபோட்டி சென்னை சேப்பாக்கத்தில் இன்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ஐதராபாத் அணி 18.3 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 113 ரன்கள் எடுத்தது. இதனையடுத்து விளையாடிய கொல்கத்தா அணி 10.3 ஓவரில் 2 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 114 ரன்கள் எடுத்து ஐபிஎல் கோப்பையை வென்றது.

    இந்நிலையில் ஐதராபாத் அணியின் தோல்வியை தாங்கி கொள்ள முடியாமல் அந்த அணியின் உரிமையாளர் காவ்யா மாறன் கண்ணீர் விட்டு அழுதார். அதை மறைத்து சிரித்தப்படியும் அவரது அணியின் வீரர்களுக்கு கைதட்டி வரவேற்றார்..

    அவர் ஐதராபாத் அணி பேட்டிங் செய்யும் போதே சோகமடைந்து உட்கார்ந்து இருந்தார். இறுதியில் தோல்வியடைந்ததால் வேதனை தாங்காமல் அழுதார். இதனை பார்த்த ரசிகர்கள் கஷ்டமாக உள்ளது என சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

    காவ்யா மாறனை பார்ப்பதற்காக கூட நிறைய ரசிகர்கள் ஐதராபாத் போட்டியை பார்த்ததாக மீம்ஸ்கள் உலா வந்தது குறிப்பிடத்தக்கது.

    • மும்பை அணியின் புதிய கேப்டனாக அறிவிக்கப்பட்டார்.
    • வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகின்றன.

    ஐ.பி.எல். 2024 டி20 கிரிக்கெட் தொடர் துவங்கும் முன்பே மும்பை அணியின் கேப்டன் மாற்றப்பட்ட சம்பவம் பேசு பொருளாக மாறியது. அந்த அணியின் கேப்டனாக செயல்பட்டவரும், மும்பை அணிக்கு ஐ.பி.எல். தொடரில் பல கோப்பைகளை வென்று கொடுத்தவருமான ரோகித் சர்மா நீக்கப்பட்டு, குஜராத் டைட்டன்ஸ் அணியின் கேப்டனாக செயல்பட்டு வந்த ஹர்திக் பாண்ட்யா மும்பை அணியின் புதிய கேப்டனாக அறிவிக்கப்பட்டார்.

    நடப்பு ஐ.பி.எல். தொடரில் புதிய கேப்டனுடன் விளையாடி வரும் மும்பை இந்தியன்ஸ் அணி இதுவரை விளையாடிய போட்டிகளில் தோல்வியை தழுவி தடுமாறி வருகிறது. மேலும் ஒவ்வொரு போட்டியின் போதும் ஹர்திக் மற்றும் ரோகித் இடையே கருத்து வேறுபாடு இருக்குமோ என்ற வகையில் பல்வேறு புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகின்றன.

     


    இதனிடையே ரோகித் சர்மா மும்பை இந்தியன்ஸ் அணியில் இருந்து விலக இருப்பதாக கடந்த சில நாட்களாக தகவல் வெளியாகி வருகிறது. மேலும் அவர் 2025 ஐ.பி.எல். தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக அறிவிக்கப்படுவார் என்றும் அவர் பெங்களூரு அணியில் இணையலாம் என்றும் பல்வேறு தகவல்கள் வெளியாகி வருகின்றன.

    இந்த நிலையில், 2025 ஐ.பி.எல். தொடரில் ரோகித் சர்மா சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியின் கேப்டனாக களமிறங்குவார் என்று புதிய தகவல் வெளியாகி உள்ளது. மேலும் சன்ரைசர்ஸ் அணியில் இணைவதற்காக அந்த அணியின் உரிமையாளரான காவ்யா மாறன் ரோகித் சர்மாவுடன் ஒப்பந்தம் போட்டுள்ளதாக கூறப்படுகிறது.

    இது தொடர்பான ஒப்பந்தத்தின்படி சன்ரைசர்ஸ் அணிக்கு அடுத்த ஐந்து ஆண்டுகள் கேப்டனாக செயல்படுவார் என்றும், அதற்கான ஒப்பந்த தொகையை அவரே தெரிவிக்க ஏதுவாக ரோகித் சர்மாவுக்கு பிளாங்க் செக் (blank cheque) வழங்கப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது.

    எனினும், ரோகித் சர்மா மும்பை அணியில் இருந்து விலகுவது பற்றியோ, அவர் அடுத்த சீசனில் இருந்து மற்ற அணியில் விளையாடுவார் என்றோ இதுவரை எந்த தகவலும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

    • தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்று வரும் எஸ்ஏ 20 தொடரில் சன்ரைசர்ஸ் அணி ஈஸ்டர்ன் கேப் அணியை வாங்கி உள்ளது.
    • கலாநிதி மாறனின் மகளான காவ்யா மாறனுக்கு நீண்ட நாட்களாகவே பல்வேறு ரசிகர்கள் உள்ளனர்.

    போலாந்த்:

    சன்ரைசர்ஸ் அணியின் உரிமையாளரும், சன் டிவி நிறுவனர் கலாநிதி மாறனின் மகளான காவ்யா மாறனுக்கு நீண்ட நாட்களாகவே பல்வேறு ரசிகர்கள் உள்ளனர். சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி விளையாடும் போது, போட்டியை பார்ப்பதை விட ரசிகர்கள் காவ்யா மாறனின் ரியாக்சனை தான் பார்ப்பார்கள்.

    ஐபிஎல் ஏலத்தில் கூட காவ்யா மாறன் படு சிறப்பாக செயல்படுவார். எந்த அளவுக்கு அழகு இருக்கிறதோ, அதே அளவிற்கு அறிவையும் பயன்படுத்தி ஏலத்தில் மற்ற அணிகளுக்கு ஆட்டம் காட்டியவர் காவ்யா மாறன். இந்த நிலையில், காவ்யா மாறனின் புகழ் கடல் தாண்டி தென்னாப்பிரிக்க வரை சென்றது.


    தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்று வரும் எஸ்ஏ 20 தொடரில் சன்ரைசர்ஸ் அணி ஈஸ்டர்ன் கேப் அணியை வாங்கி உள்ளது. இந்த நிலையில் பார்ல் ராயல்ஸ் அணியுடன் போலாந்தில் மோதியது. இதில் டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் அணி முதலில் பந்துவீசியது.

    அப்போது ராயல்ஸ் அணி பேட்டிங் செய்யும் போது 8 ஓவர் முடிவில் 60 ரன்களுக்கு 3 விக்கெட் இழந்த போது தான், கூட்டத்தில் இருந்த வெளிநாட்டு ரசிகர் ஒருவர், காவ்யா மாறனுக்கு கல்யண புரபோஷலை கொடுத்துள்ளார். அதில் காவ்யா மாறன் தம்மை திருமணம் செய்து கொள்ளுங்கள் என்ற பதாகையை வைத்த படி அந்த இளைஞர் தனது காதலுக்காக கடல் தாண்டி தூது விட்டார்.

    தற்போது இந்த வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. ராயல்ஸ் அணி 20 ஓவர் முடிவில் 127 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்தது. இதனையடுத்து ஈஸ்டர்ன் கேப் அணி 18.2வது ஓவரிலேயே வெற்றி இலக்கை எட்டியது. இதன் மூலம் 3வது வெற்றியை காவ்யா மாறன் படை பதிவு செய்துள்ளது.

    ×