என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஒலிம்பிக் 2028"

    • 2028-ம் ஆண்டு அமெரிக்காவில் உள்ள லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் ஒலிம்பிக் போட்டி நடைபெறுகிறது.
    • 128 ஆண்டுகளுக்கு பிறகு ஒலிம்பிக்கில் கிரிக்கெட் போட்டி இடம்பெற்றுள்ளது.

    கடந்தாண்டு ஒலிம்பிக் போட்டி பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நடைபெற்றது. அடுத்த ஒலிம்பிக் போட்டி 2028-ம் ஆண்டு அமெரிக்காவில் உள்ள லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெறவுள்ளது.

    2028 ஒலிம்பிக் போட்டியில் கிரிக்கெட் விளையாட்டு இடம்பெற்றுள்ளது. 128 ஆண்டுகளுக்கு பிறகு ஒலிம்பிக்கில் கிரிக்கெட் போட்டி இடம்பெற்றுள்ளது. கடைசியாக 1900-ம் ஆண்டு பாரீஸ் ஒலிம்பிக்கில் கிரிக்கெட் போட்டி நடைபெற்றது.

    லாஸ் ஏஞ்சல்ஸ் ஒலிம்பிக்கில் நடைபெறும் 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் (ஆண்கள்,பெண்கள்) 6 அணிகள் பங்கேற்கும் என்று இன்று போட்டி அமைப்பாளர்கள் அதிகாரப்பூர்வமாக அறிவித்தனர். ஒவ்வொரு அணியிலும் 15 வீரர்கள் வீதம் 90 வீரர்களுக்கு ஒலிம்பிக்கில் அனுமதி வழங்கப்படும். பெண்கள் பிரிவிலும் இதே நிலைதான் செயல்படுத்தப்படும்.

    சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலில் (ஐ.சி.சி) இந்தியா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, பாகிஸ்தான், தென் ஆப்பிரிக்கா, இலங்கை, வெஸ்ட்இண்டீஸ், நியூசிலாந்து, வங்காளதேசம், ஆப்கானிஸ்தான், ஜிம்பாப்வே, அயர்லாந்து ஆகிய 12 நாடுகள் முழுநேர உறுப்பினர்களாகும். 94 நாடுகள் அசோசியேட் உறுப்பினர்கள் ஆகும். தகுதி சுற்று மூலம் 6 அணிகள் மட்டுமே ஒலிம்பிக் போட்டியில் விளையாடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    • வரும் 2028-ம் ஆண்டு லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் ஒலிம்பிக் போட்டி நடைபெற உள்ளது.
    • இந்த ஒலிம்பிக்கில் டி20 கிரிக்கெட்டை சேர்க்க ஐ.சி.சி. பரிந்துரை செய்துள்ளது.

    புதுடெல்லி:

    சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.), 2028-ம் ஆண்டு லாஸ் ஏஞ்சல்ஸ் ஒலிம்பிக்கில் (அமெரிக்கா) கிரிக்கெட்டை சேர்க்க முயற்சித்து வருகிறது.

    அந்த ஒலிம்பிக்கில் ஆண்கள் மற்றும் பெண்கள் பிரிவில் தலா 6 அணிகள் பங்கேற்கும் டி20 வடிவிலான கிரிக்கெட் போட்டியை சேர்ப்பதற்கு ஒலிம்பிக் போட்டியின் அமைப்பு குழுவிடம் ஐ.சி.சி. பரிந்துரை செய்துள்ளது.

    ஒலிம்பிக்கில் கிரிக்கெட் இடம் பெறுமா என்பது குறித்து வரும் அக்டோபர் மாதம் மும்பையில் நடக்கும் சர்வதேச ஒலிம்பிக் கவுன்சில் கூட்டத்தில் முடிவு செய்யப்படுகிறது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • கிரிக்கெட் போட்டி டி20-யாக நடந்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
    • லாஸ் ஏஞ்சல்சில் ஒலிம்பிக் போட்டி நடக்க இருப்பது இது 3-வது முறையாகும்.

    கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஒரு ஆண்டு தள்ளி வைக்கப்பட்ட ஒலிம்பிக் போட்டி ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் கடந்த ஆண்டு (2021) நடந்தது. அடுத்த ஒலிம்பிக் போட்டி பிரான்ஸ் தலைநகர் பாரீசில் 2024-ம் ஆண்டு நடக்கிறது.

    அதற்கு அடுத்த ஒலிம்பிக் போட்டி அமெரிக்காவில் உள்ள லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் 2028-ம் ஆண்டு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி 2028-ம் ஆண்டுக்கான ஒலிம்பிக் போட்டி ஜூலை 14-ந் தேதி முதல் 30-ந் தேதி வரையும், பாரா ஒலிம்பிக் போட்டி ஆகஸ்டு 15-ந் தேதி முதல் 27-ந் தேதி வரையும் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    லாஸ் ஏஞ்சல்சில் ஒலிம்பிக் போட்டி நடக்க இருப்பது இது 3-வது முறையாகும். ஏற்கனவே 1932, 1984-ம் ஆண்டுகளில் அங்கு நடைபெற்றுள்ளது.

    இந்நிலையில் 2028-ம் ஆண்டு நடைபெறும் ஒலிம்பிக்கில் கிரிக்கெட் உள்பட 5 புதிய விளையாட்டுகள் இணைக்கப்பட்டுள்ளது. புதிய விளையாட்டுகளாக பேஸ்பால் மற்றும் சாப்ட்பால், ப்ளாக் கால்பந்து, லாக்ரோஸ் மற்றும் ஸ்குவாஷ் ஆகிய விளையாட்டு போட்டிகள் இணைந்துள்ளது.

    கிரிக்கெட் போட்டி டி20-யாக நடந்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ×