என் மலர்
நீங்கள் தேடியது "ரூ.9 லட்சம்"
மார்த்தாண்டம்:
கிள்ளியூர் சட்டமன்ற தொகுதி, பாலப்பள்ளம் பேரூராட்சிக்குட்பட்ட வடலிவிளை, மலையன்விளை, மணலி பகுதிகளில் உள்ள மக்கள் ரேசன் பொருட்கள் வாங்குவதற்கு பல கிலோமீட்டர் தூரம் சென்று வந்தனர். ஆகவே வடலிவிளை பகுதியில் புதிய ரேசன் கடை அமைக்க வேண்டும் என்று ராஜேஷ் குமார் எம்.எல்.ஏ.விடம் பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர். இவர்களின் கோரிக்கையை ஏற்று ராஜேஷ்குமார் எம்.எல்.ஏ. தனது தொகுதி மேம்பாட்டு திட்ட நிதியிலிருந்து ரூ.9 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்தார். நிர்வாக பணிகள் முடிவடைந்ததையடுத்து வடலிவிளையில் புதிய ரேசன் கடை கட்டிடம் அமைக்கும் பணியினை ராஜேஷ் குமார் எம்.எல்.ஏ. அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் பாலப் பள்ளம் பேரூராட்சி தலைவர் டென்னிஸ், கிள்ளியூர் கிழக்கு வட்டார காங்கிரஸ் தலைவர் ராஜசேகரன், பாலப்பள்ளம் பேரூராட்சி வார்டு உறுப்பினர்கள் பெலிக்ஸ் ஆன்றனி, ஜெபர்சன், ரவிசந்திரன் மற்றும் லாசர், கிரேசி, சாக்டோ மற்றும் காங்கிரஸ் கட்சியினர், பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.