என் மலர்
நீங்கள் தேடியது "முத்திரையிடாத"
- முத்திரை மற்றும் மறுமுத்திரையிடப்படாமல் பயன்படுத்திய மின்னணு தராசுகள் மற்றும் மேஜை தராசுகள் ஆகியவற்றை பறிமுதல் செய்து அபராதம் விதித்தனர்.
- முத்திரை மற்றும் மறு முத்திரையிடாமல் பயன்படுத்தினால் ரூ.5000 முதல் ரூ.25 ஆயிரம் வரை அபராதம் விதிக்கப்படும்.
சங்ககிரி:
நாமக்கல் மாவட்ட தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) திருநந்தன் தலைமையில், சங்ககிரி தொழிலாளர் உதவி ஆய்வாளர் முருகேசன், திருச்செங்கோடு தொழிலாளர் உதவி ஆய்வாளர் அருண்குமார் மற்றும் போலீசார் கொண்ட குழுவினர், சங்ககிரி நகர் பகுதிகளில் உள்ள இறைச்சி, மீன் மற்றும் பழக்கடைகளில் ஆய்வு மேற்கொண்டனர்.
அப்போது, முத்திரை மற்றும் மறுமுத்திரையிடப்படாமல் பயன்படுத்திய மின்னணு தராசுகள் மற்றும் மேஜை தராசுகள் ஆகியவற்றை பறிமுதல் செய்து அபராதம் விதித்தனர். இதுகுறித்து தொழிலாளர் உதவி ஆணையர்(அமலாக்கம்) திருநந்தன் கூறுகையில், எடை அளவுகளை முத்திரை மற்றும் மறு முத்திரையிடாமல் பயன்படுத்தினால் ரூ.5000 முதல் ரூ.25 ஆயிரம் வரை அபராதம் விதிக்கப்படும்.
இதுவரை முத்திரையிடாமல் எடையளவுகளை பயன்படுத்தி வரும் வணிகர்கள், தங்களது எடையளவுகளை முத்திரை ஆய்வாளர் அலுவலகத்திற்குச் சென்று முத்தரையிட்டுக் கொள்ள வேண்டும். மேலும், கடைகளில் மறு முத்திரைச் சான்றிதழ் நன்றாக தெரியும்படி வைக்க வேண்டும் என்றார்.