என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அழகப்பா பல்கலைக்கழகம்"

    • அழகப்பா பல்கலைக்கழகத்தில் 1 லட்சத்து 9 ஆயிரத்து 616 பேருக்கு பட்டம் வழங்கப்பட்டது.
    • இதில் 1,125 மாணவ- மாணவிகளுக்கு கவர்னர் ரவி நேரடியாக பட்டங்களை வழங்கினார்.

    காரைக்குடி

    சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தின் 33-வது பட்டமளிப்பு விழா கவர்னர் ரவி தலைமையில் நடந்தது.

    கடந்த 2019-20, 20-21, 2021-22 கல்வி ஆண்டு களுக்காக தொடர்ந்து 3 வருடங்கள் பட்டமளிப்பு விழா நடைபெறாமல் மாணவ- மாணவிகள் பட்டங்கள் பெற முடியாமல் அவதிக்கு உள்ளாகி இருந்தனர். இது குறித்து பல்வேறு தரப்பினர் பட்டமளிப்பு விழாவை விரைந்து நடத்த வற்புறுத்தி வந்தனர். அதனை ஏற்று அழகப்பா பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா நடந்தது.

    அழகப்பா பல்கலைக்கழக துணைவேந்தர் ரவி வரவேற்று பேசினார்.தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தலைமையேற்று மாணவ-மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கினார். ஒரு இலக்கிய முனைவர் பட்டம், 4 அறிவியல் முனை வர் பட்டமும், 647 முனைவர் பட்டமும் (பி.எச்டி) வழங்கப்பட்டது.

    மேலும் பல்வேறு துறைகளில் பயின்ற மாணவர்கள் மற்றும் இணைப்புக் கல்லூரிகளில் பயின்றவர்கள் என கடந்த 3 ஆண்டுகளில் பட்டம் பெறாத 1 லட்சத்து 9 ஆயிரத்து 616 மாணவ- மாணவிகள் பட்டங்களை பெற்றனர். இதில் 1,125 மாணவ- மாணவிகளுக்கு கவர்னர் ரவி நேரடியாக பட்டங்களை வழங்கினார்.

    இந்த விழாவில் மத்திய கல்வி மந்திரியும், திறன் மேம்பாடு மற்றும் தொழில் முனைவோர் மந்திரியுமான தர்மேந்திர பிரதான் முதன்மை விருந்தினராகவும், உயர் கல்வித் துறை அமைச்சர் பொன்முடி, அமைச்சர் கே.ஆர்.பெரிய கருப்பன் சிறப்பு விருந்தினராகவும் கலந்து ெகாண்டனர்.

    பட்டம் பெற்ற மாணவ-மாணவிகள் பேராசிரியர்கள், பெற்றோர்கள், உறவி னர்கள் மற்றும் நண்பர்க ளிடம் மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டனர்.

    • பொதுமக்கள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை உற்சாகமாக வரவேற்றனர்
    • அழகப்பா பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்டுள்ள திருவள்ளுவர் சிலையை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் திறந்து வைத்தார்.

    காரைக்குடி:

    தமிழக அரசின் நலத்திட்டங்கள் பொதுமக்களை சென்று சேர்வதை உறுதி செய்யும் வகையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அனைத்து மாவட்டங்களிலும் கள ஆய்வு மேற்கொள்ள முடிவு செய்தார்.

    மேலும் 2026 சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ள ஏதுவாக கட்சி நிர்வாகிகளை சந்தித்து ஆலோசனை வழங்கவும், அதற்காக அவர் ஒவ்வொரு மாவட்டத்திலும் இரண்டு நாட்கள் தங்கி இருக்க திட்டமிட்டார்.

    அதன்படி தனது முதலாவது கள ஆய்வை கடந்த ஆண்டு நவம்பவர் கோவையில் தொடங்கினார். இதையடுத்து விருதுநகர், ஈரோடு, வேலூர் உள்ளிட்ட மாவட்டங்களுக்கு சென்ற முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பல்வேறு திட்டப்பணிகளை ஆய்வு செய்ததோடு, சட்டமன்ற தேர்தல் வியூகம் குறித்தும் தி.மு.க. நிர்வாகிகளுடன் கலந்துரையாடி ஆலோசனைகள் வழங்கினார்.

    அந்த வகையில் தொடர்ச்சியாக கள ஆய்வு பணியை சிவகங்கை மாவட்டத்தில் இன்றும், நாளையும் மேற்கொள்கிறார். அதன்படி 2 நாள் பயணமாக சென்னையில் இருந்து இன்று காலை 9.30 மணிக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் விமானம் மூலம் திருச்சி வருகை தந்தார். அங்கு அமைச்சர்கள் கே.ஆர்.பெரியகருப்பன், கே.என்.நேரு, மூர்த்தி, பழனிவேல் தியாகராஜன், சாத்தூர் ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு மற்றும் தி.மு.க. நிர்வாகிகள் வரவேற்றனர்.

    இதையடுத்து அங்கிருந்து சாலை மார்க்கமாக காரில் புறப்பட்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சிவகங்கை மாவட்டம் காரைக்குடிக்கு 11.30 மணிக்கு வந்தார். முன்னதாக சிவகங்கை மாவட்ட எல்லையில் அமைச்சர் கே.ஆர்.பெரிய கருப்பன் தலைமையில் பிரமாண்ட வரவேற்பு அளிக்கப்பட்டது. அதே போல் காரைக்குடி மாநகரம் சார்பில் கல்லூரி சாலை ராஜீவ்காந்தி சிலை அருகிலும் திரண்டிருந்த பொதுமக்கள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை உற்சாகமாக வரவேற்றனர்.



    இதையடுத்து அவர் அழகப்பா பல்கலைக்கழகத்திற்கு வருகை தந்தார். அங்குள்ள வளாகத்தில், முன்னாள் மத்திய நிதி மந்திரி ப.சிதம்பரம் குடும்பத்தாரால் ரூ.12 கோடி நிதியில் 30,450 சதுர அடியில் கட்டப்பட்டுள்ள லட்சுமி வளர் தமிழ் நூலகத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

    தொடர்ந்து அழகப்பா பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்டுள்ள திருவள்ளுவர் சிலையை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் திறந்து வைத்தார்.

    • பெரிய நூலகம் அமைக்க வசதி இல்லாதோர் தங்கள் ஊரில் சிறிய படிப்பகத்தையாவது அமைக்க வேண்டும்.
    • திமுக தலைவராக பொறுப்பேற்ற பின் சால்வைக்கு பதிலாக 2.75 லட்சம் புத்தகங்களை பெற்று நூலகத்திற்கு அனுப்பி வைத்தேன்.

    காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தில் அய்யன் வள்ளுவன் சிலையை திறந்து வைத்த பின்னர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-

    * வள்ளல் அழகப்பர் வாழ்ந்த மண்ணுக்கு வந்ததில் மகிழ்ச்சி அடைகிறேன்.

    * கல்விக்காக வள்ளல் அழகப்பர் செய்திருக்கும் தொண்டுதான் மிக முக்கியமானது. கல்வித் தொண்டையும், தமிழ்த் தொண்டையும் சேரந்தாற்றிய வள்ளல் அழகப்பரால் தான் பலர் கல்வி பயின்றுள்ளனர்.

    * வள்ளுவர், வள்ளலார் என சமூக நீதி பேசிய தலைவர்களை களவாட தமிழகத்தில் ஒரு கூட்டமே சுற்றிக்கொண்டிருக்கிறது.

    * வான்புகழ் வள்ளுவருக்கு குமரியில் சிலை திறந்த 25-ம் ஆண்டில் இங்கும் சிலை திறப்பதில் மகிழ்ச்சி.

    * அறிவாலயமாய் திகழும் நூலகங்களை திறந்து வைப்பதில் நான் பெருமைப்படுகிறேன்.

    * கொடை உள்ளமும் அறிவுத்தாகமும் கொண்டோர் தங்கள் ஊர்களில் ஒரு நூலகம் அமைக்க வலியுறுத்துகிறேன்.

    * பெரிய நூலகம் அமைக்க வசதி இல்லாதோர் தங்கள் ஊரில் சிறிய படிப்பகத்தையாவது அமைக்க வேண்டும்.

    * திமுக தலைவராக பொறுப்பேற்ற பின் சால்வைக்கு பதிலாக 2.75 லட்சம் புத்தகங்களை பெற்று நூலகத்திற்கு அனுப்பி வைத்தேன்.

    * உங்கள் ஊர்களில் நீங்கள் அமைக்கும் நூலகம் மற்றும் படிப்பகங்கள் தமிழகத்தை வளர்க்கும்.

    * இளைஞர் அறிவுச்செல்வத்தை சேர்க்க பாடுபட்டால் பொருட்செல்வம் தானாகவே உங்களை தேடி வரும்.

    * உயர்கல்வித்துறையில் நாட்டிலேயே முதலிடத்தில் தமிழ்நாடு உள்ளது.

    * மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல்வர் தான் பல்கலைக்கழக வேந்தர் பதவியில் இருக்க வேண்டுமென கூறி வருகிறோம் என்றார்.

    • தமிழ் வாழ வேண்டும் என்றால் 9 கோடி தமிழர்களும் தமிழில் பேச வேண்டும்.
    • தமிழ் ஆட்சி மொழியாக என்றென்றும் இருக்க வேண்டும்.

    காரைக்குடி:

    சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தில் நடந்த நூலக திறப்பு விழாவில் முன்னாள் மந்திய மந்திரி ப.சிதம்பரம் பேசியதாவது:-

    தமிழ் வாழ வேண்டும், தமிழ் வளர வேண்டும், வாழ்வதற்கும் வளர்வதற்கும் வேறுபாடு உண்டு. தமிழ் வாழ வேண்டும் என்றால் 9 கோடி தமிழர்களும் தமிழில் பேச வேண்டும். தமிழில் எழுத வேண்டும்.

    எல்லாவற்றிற்கும் மேலாக தமிழ் ஆட்சி மொழியாக என்றென்றும் இருக்க வேண்டும். தமிழ் வளர வேண்டும் என்றால் பல புதிய வடிவங்களில் மாற வேண்டும். இந்த சிறிய நூலகத்திற்கு ஒரு சிறப்பு உண்டு. இது தனி நூலகம் அல்ல. ஒரு புகழ்பெற்ற பல்கலைக்கழகத்தின் அங்கம் இந்த நூலகம்.

    சிவகங்கை பூமி தமிழ் வளர்த்த பூமி. தமிழ் வளர்த்தவர்களை தாங்கிய பூமி. புலவர்கள் மட்டுமல்ல தமிழ் புரவலர்கள் வாழ்ந்த இந்த மண்ணில் பல்கலைக்கழகத்தின் விதைகளை விதைத்தது வள்ளல் அழகப்பர் எங்களுக்கு கிடைத்த வரம்.

    இந்த பல்கலைக்கழகம் வளாகத்தில் வளர்தமிழ் நூலகத்தை நிறுவ முடிந்தது என் குடும்பத்தாருக்கு கிடைத்த மிகப்பெரிய பெருமை. இந்த நூலகத்தில் கொள்ளளவு மிக மிக அதிகம். இன்னும் விரிவுபடுத்தலாம்.

    எங்களுக்கு யானை பசி. முதலமைச்சர் தலைமையில் தமிழ்நாடு அரசே இங்கே இருக்கிறது. இந்த நூலகம் யானை பசிக்கு தமிழ் அன்பர்கள் ஒவ்வொருவரும் ஒரு கைப்பிடி சோறு தர வேண்டும். தமிழ்நாடு அரசு ஒரு பெரிய பிடிச்சோறு தரவேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • சிவகங்கையில் இன்று முதல்வர் மு.க.ஸ்டாலின் களஆய்வு மேற்கொண்டார்.
    • அழகப்பா பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்டுள்ள திருவள்ளுவர் சிலையை மு.க. ஸ்டாலின் திறந்து வைத்தார்.

    தமிழக அரசின் நலத்திட்டங்கள் பொதுமக்களை சென்று சேர்வதை உறுதி செய்யும் வகையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அனைத்து மாவட்டங்களிலும் கள ஆய்வு மேற்கொண்டு வருகிறார் .

    கடந்த ஆண்டு நவம்பவர் கோவையில் முதலாவது கள ஆய்வை தொடங்கிய முதல்வர், அடுத்ததாக விருதுநகர், ஈரோடு, வேலூர் உள்ளிட்ட மாவட்டங்களுக்கு சென்று பல்வேறு திட்டப்பணிகளை ஆய்வு செய்தார்.

    அவ்வகையில் சிவகங்கையில் இன்று முதல்வர் களஆய்வு மேற்கொண்டார். இதனையடுத்து, அழகப்பா பல்கலைக்கழக வளாகத்தில், முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் குடும்பத்தாரால் ரூ.12 கோடி நிதியில் 30,450 சதுர அடியில் கட்டப்பட்டுள்ள லட்சுமி வளர் தமிழ் நூலகத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

    தொடர்ந்து அழகப்பா பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்டுள்ள திருவள்ளுவர் சிலையை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் திறந்து வைத்தார்.

    இதனை தொடர்ந்து காரைக்குடியில் சாலையில் ரோடு ஷோ சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பொதுமக்களை சந்தித்து பேசினார். அப்போது பொதுமக்கள் பலரும் முதல்வருடன் புகைப்படம் எடுத்துக்கொண்டனர். அப்போது சாலையின் இருபுறமும் திரண்டிருந்த திமுக தொண்டர்கள் முதல்வருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். 

    ×