என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நாகர்கோவில் மாநகரம்"

    • குடும்பத்தினர் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
    • சுசீந்திரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் விசாரணை நடத்தி தாக்குதலில் ஈடுபட்டவர் மீது கொலை மிரட்டல் உள்பட 4 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்தார்.

    கன்னியாகுமரி:

    நாகர்கோவில் பறக்கை அருகே உள்ள வண்டிகுடியிருப்பு பகுதியைச் சேர்ந்தவர் லிங்கேஷ் (வயது 40).

    இவர் நாகர்கோவில் மாந கர 50- வது வட்ட தி.மு.க. செயலாளராக உள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்பு அதே பகுதியை சேர்ந்த சுந்தர்லிங்கம் என்ப வர் மீது சுசீந்திரம் போலீஸ் நிலையத்தில் பினு என்பவர் புகார் கொடுத்தார். இதில் சுந்தரலிங்கத்திற்கு ஆதரவாக லிங்கேஷ் செயல்பட்டதாக கூறப்படுகிறது.

    இது தொடர்பாக அவ ருக்கும் எதிர் தரப்பின ருக்கும் முன்விரோதம் ஏற்பட்டது. இந்தநிலையில் சம்பவத்தன்று இரவு லிங்கேஷ் இரு சக்கர வாக னத்தில் வீட்டுக்கு வந்து கொண்டிருந்தார்.

    வண்டி குடியிருப்பு அம்மன் கோவில் முன்பு வந்தபோது அதே பகுதியை சேர்ந்த ரவி (43) வழிமறித்து தகாத வார்த்தைகள் பேசி மறைத்து வைத்திருந்த இரும்பு கம்பியால் சரமாரியாக தாக்கி உள்ளார். இதில் தலையில் பலத்த காயம் அடைந்த லிங்கேஷ், ரத்த வெள்ளத்தில் அலறினார்.

    அலறல் சத்தம் கேட்டு அவருடைய தம்பி கண்ணன் மற்றும் அவரது மனைவி, அம்மா, அப்பா ஆகியோர் ஓடி வரவே, ரவி கொலை மிரட்டல் விடுத்து விட்டு தப்பி சென்று விட்டார்.

    படுகாயம் அடைந்த லிங்கேசை, குடும்பத்தினர் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    நாகர்கோவில் மாநகர 50-வது வட்ட செயலாளர் லிங்கேஷை தாக்கிய சம்பவம் அப்பகுதியில் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    இது குறித்து சுசீந்திரம் போலீஸ் நிலையத்தில் லிங்கேஷ் புகார் அளித்தார். அதன் பேரில் சப்-இன்ஸ் பெக்டர் விஜயகுமார் விசா ரணை நடத்தி, ரவி மீது கொலை மிரட்டல் உள்பட 4 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்தார். தொடர்ந்து தலைமறைவாகியுள்ள ரவியை போலீசார் தேடி வருகின்றனர்.

    ×