என் மலர்
நீங்கள் தேடியது "2½ ஆண்டு"
- மாணவியின் பெற்றோர் நாகா்கோவில் அனைத்து மகளிர் போலீசில் புகார் அளித்தனர்.
- போலீசார் அபிஷேக் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.
நாகர்கோவில்:
நாகர்கோவில் வெட்டூர்ணிமடம் பகுதியை சேர்ந்தவர் அபிஷேக் (வயது 22). இவர் நாகர்கோவில் பகுதியில் உள்ள ஒரு பாலி டெக்னிக் கல்லூரியில் படித்த போது, சக மாணவி ஒருவரிடம் நெருங்கி பழகி உள்ளார்.
இந்த நிலையில் மாணவி யிடம் நைசாக பேசிய அபிஷேக், குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்து கொடுத்து பலாத்காரம் செய்து உள்ளார். மேலும் அதனை வீடியோவாகவும் எடுத்து மாணவியை அடிக்கடி மிரட்டி உள்ளார்.
இதுகுறித்து மாணவி யின் பெற்றோர் நாகா்கோ வில் அனைத்து மகளிர் போலீசில் புகார் அளித்தனர். அதன்பேரில் போலீசார் அபிஷேக் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.
ஆனால் அபிஷேக், துபாய் நாட்டுக்கு தப்பிச் சென்று விட்டார். அவரை பிடிக்க போலீசார் நட வடிக்கை எடுத்து வந்த னர். இந்த நிலையில் 2½ ஆண்டுகளுக்கு பிறகு அபிஷேக் துபாயில் இருந்து ஊருக்கு வருவதாக நாகர்கோவில் மகளிர் போலீ சாருக்கு தகவல் கிடைத்தது. உடனே போலீசார் விரைந்து சென்று அபிஷேக்கை கைது செய்தனர்.
அப்போது அவர் தனக்கு நெஞ்சு வலிப்ப தாக கூறியதால், ஆசாரி ப்பள்ளம் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்ப ட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.
இந்த நிலையில் சிகிச்சை நிறைவடைந்ததை தொடர்ந்து, அபிஷேக் நாகர்கோவில் சிறையில் அடைக்கப்பட்டார்.