என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "ஷுப்மன் கில்"
- அதிக ரன்கள் எடுத்த வீரர்கள் பட்டியலில் விராட் கோலி முதல் இடத்தில் உள்ளார்.
- ஒரு சீசனில் அதிக பவுண்டரிகள் அடித்த வீரர்கள் பட்டியலில் கில் 4-வது இடத்தில் உள்ளார்.
ஐபிஎல் 2023-ல் குஜராத் டைட்டன்ஸ் அணியின் தொடக்க வீரரான சுப்மான் கில் முதல் போட்டியில் இருந்து தனது அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்தார். அவரை அவுட் ஆக்கினால்தான் குஜராத் டைட்டன்ஸ் அணியை வெல்ல முடியும் என்ற நிலையை உருவாக்கினார்.
ஷுப்மன் கில் இந்தத் தொடரில் மூன்று சதங்கள் அடித்து விளாசினார். குறிப்பாக ஆர்.சி.பி. அணிக்கு எதிரான கடைசி லீக் போட்டியிலும் மும்பை அணிக்கு எதிரான போட்டியிலும் அடுத்தடுத்து சதங்கள் விளாசினார். இன்று நடைபெற்ற இறுதிப் போட்டியில் 39 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
இதன்மூலம் இந்த சீசனில் மொத்தமாக 17 போட்டியில் 890 ரன்கள் எடுத்து, ஒரு சீசனில் அதிக ரன்கள் அடித்த வீரர்கள் பட்டியலில் இரண்டாம் பிடித்துள்ளார். விராட் கோலி 973 ரன்களுடன் முதல் இடத்தில் உள்ளார். 863 ரங்களுடன் ஜோஸ் பட்லர் 3-வது இடத்தில் உள்ளார். டேவிட் வார்னர் 848 ரன்கள் அடித்து 4-வது இடத்தில் உள்ளார். கேன் வில்லியம்சன் 735 ரன்கள் எடுத்து ஐந்தாவது இடத்தில் உள்ளார்.
அதேபோல் ஒரு சீசனில் அதிக பவுண்டரிகள் அடித்த வீரர்கள் பட்டியலில் 4-வது இடத்தில் உள்ளார். ஜோஸ் பட்லர் 128 பவுண்டரிகள் அடித்து முதல் இடத்திலும், 122 பவுண்டரிகள் எடுத்து விராட் கோலி இரண்டாவது இடத்திலும். 119 பவுண்டரிகள் அடித்து டேவிட் வார்னர் மூன்றாவது இடத்திலும் உள்ளனர். ஷுப்மன் கில் 118 பவுண்டரிகள் நான்காவது இடத்தில் உள்ளார். ஒட்டுமொத்தமாக இந்த சீசன் அவருக்கு அருமையாக அமைந்துள்ளது.
+2
- தீபக் சாகர் கேட்சை தவறவிட்டதால் கண்டத்தில் இருந்து தப்பிய ஷுப்மன் கில் தொடர்ந்து அதிரடி காட்டினார்.
- சாய் சுதர்சன் 47 பந்துகளில் 8 பவுண்டரி, 6 சிக்சர்களுடன் 96 ரன்கள் விளாசினார்.
கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த ஐபிஎல் இறுதிப்போட்டி இன்று குஜராத்தின் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெறுகிறது. குஜராத் டைட்டன்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. டாஸ் வென்ற டோனி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி குஜராத் அணி முதலில் பேட்டிங் செய்தது. 170 - 180 ரன்கள் எடுத்தாலே போதுமானது என்ற நிலையில், டோனியின் பந்துவீச்சு தேர்வு அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது.
தொடக்க வீரர்களாக சகாவும் ஷுப்மன் கில்லும் களமிறங்கினார்கள். ஷுப்மன் கில்லை விரைவாக வீழ்த்தினால் எப்படியும் 170 ரன்னுக்குள் சுருட்டிவிட முடியும் என டோனி எண்ணினார். அதன்படி பீல்டிங் வியூகம் அமைத்தார்.
ஷுப்மன் கில் 3 ரன்கள் எடுத்திருந்த நிலையில், தீபக் சாகர் கேட்சை தவறவிட்டதால் கண்டத்தில் இருந்து தப்பினார். அதன்பின் தொடர்ந்து அதிரடி காட்டினார். பந்துகளை பவுண்டரிகளாக விளாசி பந்துவீச்சாளர்களை திணறடித்தார். 19 பந்துகளில் 7 பவுண்டரி உள்பட 39 ரன்கள் எடுத்திருந்த நிலையில், 20வது பந்தில் ஆட்டமிழந்தார். ஜடேஜா வீசிய பந்தை ஷுப்மன் கில் இறங்கி விளையாட முன்றபோது, பந்து நேராக டோனி கிடைக்க, அவர் மின்னல் வேகத்தில் ஸ்டம்பிங் செய்து வீழ்த்தினார். இதனால் ஷுப்மான் கில் 20 பந்தில் 39 ரன்களுடன் வெளியேறினார்.
அவரைத் தொடர்ந்து விர்திமான் சகா- சாய் சுதர்சன் ஜோடியும் சிஎஸ்கே பந்துவீச்சாளர்களுக்கு சிம்ம சொப்பனமாக திகழ்ந்தது. இருவரும் அரை சதம் கடந்து முன்னேறினர். சகா 54 ரன்களில் ஆட்டமிழந்த நிலையில், கேப்டன் ஹர்திக் பாண்ட்யா, சாய் சுதர்சனுடன் இணைந்தார். தொடர்ந்து அதிரடி காட்டிய சாய் சுதர்சன் சதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் 96 ரன்களில் அவுட் ஆனார். அவர் 47 பந்துகளில் 8 பவுண்டரி, 6 சிக்சர்களுடன் இந்த இலக்கை எட்டினார்.
20 ஓவர் முடிவில் குஜராத் அணி 4 விக்கெட் இழப்பிற்கு 214 ரன்கள் குவித்தது. ஹர்திக் பாண்ட்யா 21 ரன்களுடன் களத்தில் இருந்தார்.
சிஎஸ்கே தரப்பில் பதீரனா 2 விக்கெட் எடுத்தார். தீபக் சாகர், ரவீந்திர ஜடேஜா தலா ஒரு விக்கெட் எடுத்தனர். இதையடுத்து 215 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சிஎஸ்கே களமிறங்குகிறது.
- ஷுப்மன் கில்லை விரைவாக வீழ்த்தினால் எப்படியும் 170 ரன்னுக்குள் சுருட்டிவிட முடியும் என டோனி எண்ணினார்.
- 19 பந்துகளில் 7 பவுண்டரி உள்பட 39 ரன்கள் எடுத்திருந்த நிலையில், 20வது பந்தில் ஆட்டமிழந்தார்.
குஜராத் டைட்டன்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகளுக்கு இடையிலான ஐபிஎல் இறுதிப் போட்டி குஜராத் நரேந்திர சிங் மோடி மைதானத்தில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற டோனி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி குஜராத் அணி முதலில் பேட்டிங்கை தொடங்கியது. 170 - 180 ரன்கள் எடுத்தாலே போதுமானது என்ற நிலையில், டோனியின் பந்துவீச்சு தேர்வு அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது.
தொடக்க வீரர்களாக சகாவும் ஷுப்மன் கில்லும் களமிறங்கினார்கள். ஷுப்மன் கில்லை விரைவாக வீழ்த்தினால் எப்படியும் 170 ரன்னுக்குள் சுருட்டிவிட முடியும் என டோனி எண்ணினார். அதன்படி பீல்டிங் வியூகம் அமைத்தார்.
ஷுப்மன் கில் 3 ரன்கள் எடுத்திருந்த நிலையில், தேஷ்பாண்டே வீசிய இரண்டாவது ஓவரில் அவரது விக்கெட்டை வீழ்த்துவதற்காக இடதுபக்க அம்பயர் அருகில் பீல்டரை நிறுத்தினார் டோனி. எதிர்பார்த்தபடி ஷுப்மன் கில் பிளிக் செய்ய, கரெக்ட்டாக சொல்லிவைத்ததுபோல், தீபக் சாகர் கையில் பந்து விழுந்தது. ஆனால் தீபச் பந்தை தவற விட்டார். கிடைத்த வாய்ப்பை கோட்டைவிட்டதால் சென்னை வீரர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.
இந்த கண்டத்தில் இருந்து தப்பிய ஷுப்மன் கில் தொடர்ந்து அதிரடி காட்டினார். பந்துகளை பவுண்டரிகளாக விளாசி பந்துவீச்சாளர்களை திணறடித்தார். 19 பந்துகளில் 7 பவுண்டரி உள்பட 39 ரன்கள் எடுத்திருந்த நிலையில், 20வது பந்தில் ஆட்டமிழந்தார். ஜடேஜா வீசிய பந்தை ஷுப்மன் கில் இறங்கி விளையாட முன்றபோது, பந்து நேராக டோனி கிடைக்க, அவர் மின்னல் வேகத்தில் ஸ்டம்பிங் செய்து வீழ்த்தினார். இதனால் ஷுப்மன் கில் 20 பந்தில் 39 ரன்களுடன் வெளியேறினார். இதன்மூலம் டி20 போட்டிகளில் 300 பேரை அவுட் ஆக்கி உள்ளார் டோனி.
- நடப்பு ஐபிஎல் தொடரில் ஷுப்மன் கில் இதுவரை 3 ஆட்டத்தில் ஆடி 116 ரன்கள் எடுத்துள்ளார்.
- இவர் விராட் கோலி சாதனையை முறியடிப்பார் என ரவிசாஸ்திரி கூறியுள்ளார்.
மும்பை:
ஐ.பி.எல். கிரிக்கெட்டில் ஒரு சீசனில் அதிக ரன்கள் குவித்தவர் பெங்களூரு அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி. அவர் 2016-ம் ஆண்டு ஐ.பி.எல். தொடரில் 16 ஆட்டங்களில் ஆடி 4 சதம் உள்பட 973 ரன்கள் சேர்த்தார்.
இந்நிலையில், கோலி சாதனையை முறியடிக்க யாருக்கு வாய்ப்புள்ளது என இந்திய முன்னாள் வீரரும், வர்ணனையாளருமான ரவி சாஸ்திரியிடம் கேட்கப்பட்டது. அதற்கு அவர் கூறியதாவது:
என்னைப் பொறுத்தவரை விராட் கோலியின் சாதனையை தகர்ப்பது மிகவும் கடினம். ஏனெனில் ஒரு சீசனில் 900 ரன்களுக்கு மேல் எடுப்பது எளிதான விஷயம் அல்ல. ஆனால் இச்சாதனையை முறியடிக்கும் வாய்ப்பு இருந்தால் அது ஒரு தொடக்க ஆட்டக்காரரால் தான் முடியும். ஏனெனில் தொடக்க ஆட்டக்காரருக்கு தான் அதிகமான ஆட்டங்களில் விளையாட வாய்ப்பு கிடைக்கும்.
அந்த வகையில் கோலியின் சாதனையை முறியடிக்கும் திறமை குஜராத் டைட்டன்ஸ் வீரர் ஷுப்மன் கில்லுக்கு இருப்பதாக கருதுகிறேன். ஏனெனில் அவர் தொடக்க ஆட்டக்காரர். நல்ல பார்மில் உள்ளார். ஆடுகளங்களும் பேட்டிங்குக்கு சாதகமாக உள்ளன.
அவர் அடுத்த 2-3 இன்னிங்சில் தொடச்சியாக 80-100 ரன்கள் வீதம் எடுத்தால் மொத்தம் 300-400 ரன்கள் சேர்த்து விடுவார். தொடக்க ஆட்டக்காரர் கூடுதலாக இரண்டு ஆட்டங்கள் ஆடும்போது இச்சாதனையை முறியடிக்க சாத்தியம் உண்டு என தெரிவித்தார்.
நடப்பு ஐபிஎல் தொடரில் ஷுப்மன் கில் இதுவரை 3 ஆட்டத்தில் ஆடி 116 ரன்கள் எடுத்துள்ளார்.
- ஐசிசி ஆடவர் ஒருநாள் போட்டி பேட்மேன்ஸ்கள் தரவரிசைப் பட்டியல் வெளியானது.
- இதில் இந்திய இளம் வீரர் ஷுப்மன் கில் 4-ம் இடத்தைப் பிடித்துள்ளார்.
துபாய்:
ஒருநாள் போட்டிக்கான பேட்ஸ்மேன்களின் புதிய தரவரிசைபட்டியலை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் நேற்று வெளியிட்டது.
இந்தப் பட்டியலில் இந்தியாவின் இளம் வீரர் ஷுப்மன் கில் 4-ம் இடத்தைப் பிடித்துள்ளார்.
முன்னாள் கேப்டன் விராட் கோலி 6-வது இடத்திலும், கேப்டன் ரோகித் சர்மா 8-வது இடத்திலும் உள்ளனர்.
பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம் முதலிடத்திலும், தென் ஆப்பிரிக்காவின் ராஸி வான் டெர் டுசன் இரண்டாம் இடத்திலும் உள்ளனர். மற்றொரு பாகிஸ்தான் வீரர் இமாம் உல் ஹக் 3-ம் இடத்தில் உள்ளார்.
பந்துவீச்சில் இந்தியாவின் முகமது சிராஜ் 3-வது இடத்தில் நீடிக்கிறார்.
- ஜனவரி மாதத்திற்கான சிறந்த வீரர் விருதுக்கு 2 இந்திய வீரர்கள் பரிந்துரை செய்யப்பட்டனர்.
- இதில் ஷுப்மன் கில் ஐசிசியின் ஜனவரி மாத சிறந்த வீரர் விருதை வென்றார்.
துபாய்:
ஒவ்வொரு மாதமும் சிறந்த கிரிக்கெட் வீரரை தேர்வு செய்து சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் கவுரவித்து வருகிறது.
கடந்த ஜனவரி மாதத்திற்கான சிறந்த வீரர் விருதுக்கான பரிந்துரை பட்டியலுக்கான 3 வீரர்களில் 2 இந்திய வீரர்கள் தேர்வாகினர்.
அதன்படி, சிறந்த வீரர் விருதுக்கு நியூசிலாந்தின் டேவான் கான்வே, இந்தியாவின் ஷுப்மன் கில், முகமது சிராஜ் ஆகியோர் தேர்வாகினர்.
இந்நிலையில், ஜனவரி மாதத்துக்கான சிறந்த வீரர் விருதை இந்தியாவின் ஷுப்மன் கில் வென்றார்.
ஷுப்மன் கில்லுக்கு கடந்த மாதம் மிகச்சிறப்பாக அமைந்தது. நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரில் இரட்டை சதமும், டி20 தொடரில் சதமும் அடித்து அசத்தினார். கடந்த மாதம் தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியன் மூலம் இந்திய அணியில் தனது இடத்தை தக்கவைத்தார்.
இதேபோல், ஜனவரி மாதத்திற்கான சிறந்த வீராங்கனை விருதுக்கு இங்கிலாந்தின் கிரேஸ் ஸ்க்ரிவன்ஸ் வென்றார்.
- இன்னும் ஒரு ரன் அடித்திருந்தால் பாபர் ஆசமின் சாதனையை முறியடித்து உலக சாதனை படைத்திருப்பார்.
- 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் 350 ரன்களுக்கு மேல் எடுத்த இரண்டாவது வீரர் ஷுப்மன் கில்
நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடரில் இந்திய அணியின் இளம் வீரர் ஷுப்மன் கில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி உள்ளார். முதல் போட்டியில் 208 ரன்களும், இரண்டாவது போட்டியில் ஆட்டமிழக்காமல் 40 ரன்களும் எடுத்தார். இன்று நடைபெற்ற மூன்றாவது போட்டியில் 112 ரன்கள் குவித்தார்.
இதன்மூலம் 3 போட்டி கொண்ட ஒருநாள் தொடரில் அதிக ரன்கள் குவித்த வீரர்கள் வரிசையில் பாகிஸ்தான் கேப்டன் பாபர் ஆசமின் உலக சாதனையுடன் (360 ரன்) இணைந்துள்ளார். இன்னும் ஒரு ரன் அடித்திருந்தால் பாபர் ஆசமின் சாதனையை முறியடித்து உலக சாதனை படைத்திருப்பார்.
3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் 350 ரன்களுக்கு மேல் எடுத்த இரண்டாவது வீரர் என்ற பெருமையையும் கில் பெற்றுள்ளார்.
அதிக ரன்கள் எடுத்த வீரர்கள் வரிசையில் ஷுப்மன் கில்லைத் தொடர்ந்து வங்காளதேச வீரர் இம்ரல் கயீஸ் (349), தென் ஆப்பிரிக்காவின் குயின்டன் டி காக் (342), நியூசிலாந்தின் மார்ட்டின் கப்தில் (330) ஆகியோர் உள்ளனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்