search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "டெல்லி மேயர் தேர்தல்"

    • பா.ஜனதாவுக்கு 104 வார்டுகள் கிடைத்தன.
    • காங்கிரஸ் கட்சி 9 இடங்களை கைப்பற்றியது.

    புதுடெல்லி :

    தலைநகர் டெல்லியில், வடக்கு டெல்லி, தெற்கு டெல்லி, கிழக்கு டெல்லி என 3 ஆக பிரிந்து இருந்த டெல்லி மாநகராட்சி, கடந்த ஆண்டு ஒன்றாக இணைக்கப்பட்டது.

    இந்த இணைப்பின் மூலம் 272 வார்டுகள் 250 ஆக குறைந்தன. இதனைத்தொடர்ந்து கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 4-ந்தேதி, ஒருங்கிணைந்த டெல்லி மாநகராட்சிக்கு தேர்தல் நடத்தப்பட்டது.

    இந்த தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி, 134 இடங்களை வென்று அசத்தியது. பா.ஜனதாவுக்கு 104 வார்டுகள் கிடைத்தன. காங்கிரஸ் கட்சி 9 இடங்களை கைப்பற்றியது. 3 இடங்களை சுயேச்சைகள் கைப்பற்றினர்.

    பெரும்பான்மையாக வெற்றி பெற்ற ஆம் ஆத்மி கட்சிக்கு மேயர் பதவி எளிதாக கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் நியமன உறுப்பினர்களுக்கு வாக்குரிமை வழங்கப்பட்டது தொடர்பாக ஏற்பட்ட குழப்பத்தில் மேயர் தேர்தல் 3 முறை தள்ளி வைக்கப்பட்டது.

    4-வது முறையாக கடந்த பிப்ரவரி மாதம் நடந்த தேர்தலில் ஆம் ஆத்மி கட்சியின் பெண் கவுன்சிலர் ஷெல்லி ஒபராய், பா.ஜனதா வேட்பாளரை 34 வாக்குகள் வித்தியாசத்தில் வென்று மேயர் ஆனார். துணை மேயராக ஆம் ஆத்மி கட்சியின் ஆலே முகமது இக்பால் தேர்வு பெற்றார்.

    டெல்லி மாநகராட்சியை பொறுத்தவரை மேயர் பதவி ஆண்டுதோறும் பெண், பொது, ஒதுக்கீட்டு பிரிவினர் என இன சுழற்சி முறையில் தேர்ந்து எடுக்கப்பட வேண்டும். ஒவ்வொரு நிதியாண்டு முடிவடைந்ததும் மேயர் மற்றும் துணை மேயர் தேர்தல் நடைபெறும்.

    அதன்படி இந்த நிதியாண்டு தொடங்கியதை தொடர்ந்து மேயர் மற்றும் துணை மேயர் தேர்தல் நேற்று நடைபெற்றது.

    இதில் ஆம் ஆத்மி சார்பில் மேயர் பதவிக்கு மீண்டும் ஷெல்லி ஓபராயும், துணை மேயர் பதவிக்கு மீண்டும் ஆலே முகமது இக்பாலும் போட்டியிட்டனர். ஷெல்லி ஓபராயை எதிர்த்து பா.ஜனதா வேட்பாளர் ஷிகாராய் நின்றார். முகமது இக்பாலை எதிர்த்து பா.ஜனதாவின் சோனி பாண்டே களம் இறங்கினார். ஆனால் கடைசி நேரத்தில் பா.ஜனதா வேட்பாளர்கள் வாபஸ் வாங்கினர்.

    இதனால் ஷெல்லி ஓபராய் மீண்டும் மேயராக போட்டியின்றி தேர்வு பெற்றார்.

    அதைப்போல துணை மேயர் பதவியும் போட்டியின்றி கிடைத்தது. வெற்றி பெற்றவர்களுக்கு முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் பிரமுகர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.

    • பாஜக தலைவரை மேயர் பதவிக்கு தேர்ந்தெடுப்பதன் மூலம் மாநகராட்சியை கைப்பற்ற பாஜக முயற்சிப்பதாக ஆம் ஆத்மி கட்சி குற்றம் சாட்டியது.
    • முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான மாநில அரசு அளித்த பரிந்துரைக்கு ஆளுநர் ஒப்புதல் அளித்துள்ளார்.

    டெல்லி மாநகராட்சி மேயர் தேர்தல் கடந்த டிசம்பா் 4-ம் தேதி நடைபெற்றது. இத்தோ்தலில் ஆம் ஆத்மி கட்சி 134 இடங்களைக் கைப்பற்றியது. இதன்மூலம் 15 ஆண்டுகால பா.ஜ.க. ஆட்சிக்கு முடிவு கட்டியது. 250 உறுப்பினா்களைக் கொண்ட மாநகராட்சி தோ்தலில் பா.ஜ.க. 104 வார்டுகளிலும், காங்கிரஸ் 9 இடங்களிலும் வென்றது.

    இதையடுத்து கவுன்சிலர்கள் பதவியேற்புக்குப் பின் மேயர் தேர்தலை நடத்த முடிவு செய்யப்பட்டது. மேயர், துணை மேயர் பதவிகளுக்கு ஆம் ஆத்மி மற்றும் பாஜக இரு தரப்பும் வேட்பாளர்களை அறிவித்தது. ஆனால், மாநில அரசின் ஒப்புதல் இல்லாமல் ஆளுநரால் நியமிக்கப்பட்ட நியமன உறுப்பினர்கள் விவகாரம், மாமன்றத்தில் புயலை கிளப்பியது.

    ஆளுநரால் நியமிக்கப்பட்ட உறுப்பினர்களுக்கு மேயர் தேர்தல், துணை மேயர் தேர்தலில் வாக்களிக்கும் உரிமை உள்ளதா என்பது தொடர்பாக ஏற்பட்ட மோதல் காரணமாக மேயர் தேர்தல் தொடர்ந்து 3 முறை ஒத்திவைக்கப்பட்டது.

    மாநகராட்சி தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றபோதும் கூட, பாஜக தலைவரை மேயர் பதவிக்கு தேர்ந்தெடுப்பதன் மூலம் மாநகராட்சியை கைப்பற்ற பாஜக முயற்சிப்பதாக ஆம் ஆத்மி கட்சி குற்றம்சாட்டியது.

    பின்னர், மேயர் தேர்தல் தொடர்பாக ஆம் ஆத்மி மேயர் வேட்பாளர் ஷெல்லி ஓபராய் தொடர்ந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், மேயர் தேர்தலில் நியமன உறுப்பினர்கள் வாக்களிக்க முடியாது என்று உத்தரவிட்டது. இதையடுத்து மேயர் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டது. பிப்ரவரி 22ம் தேதி மேயர் தேர்தல் நடத்தும்படி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான மாநில அரசு அளித்த பரிந்துரைக்கு ஆளுநர் ஒப்புதல் அளித்தார்.

    இந்நிலையில் டெல்லி மேயர் தேர்தல் இன்று நடைபெற்றது. இந்த தேர்தலில் மொத்தம் 266 வாக்குகள் பதிவாகின. இதில், 150 வாக்குகள் பெற்று ஆம் ஆத்மி வேட்பாளர் ஷெல்லி ஒப்ராய் அபார வெற்றிபெற்றார். அவரை எதிர்த்து போட்டியிட்ட பாஜக வேட்பாளர் ரேகா குப்தா 116 வாக்குகள் பெற்று தோல்வியடைந்தார்.

    டெல்லி மேயர் தேர்தலில் வெற்றிபெற்ற ஆம் ஆத்மி வேட்பாளர் ஷெல்லி ஒப்ராய்க்கு அக்கட்சியின் தலைவரும் டெல்லி முதலமைச்சருமான அரவிந்த் கெஜ்ரிவால் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

    • ஆம் ஆத்மி மற்றும் பாஜக இரு தரப்பும் வேட்பாளர்களை அறிவித்தது.
    • நியமன உறுப்பினர்கள் வாக்களிக்க முடியாது என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

    டெல்லி மாநகராட்சி மேயர் தேர்தல் கடந்த டிசம்பா் 4-ம் தேதி நடைபெற்றது. இத்தோ்தலில் ஆம் ஆத்மி கட்சி 134 இடங்களைக் கைப்பற்றியது. இதன்மூலம் 15 ஆண்டுகால பா.ஜ.க. ஆட்சிக்கு முடிவு கட்டியது. 250 உறுப்பினா்களைக் கொண்ட மாநகராட்சி தோ்தலில் பா.ஜ.க. 104 வார்டுகளிலும், காங்கிரஸ் 9 இடங்களிலும் வென்றது.

    இதையடுத்து கவுன்சிலர்கள் பதவியேற்புக்குப் பின் மேயர் தேர்தலை நடத்த முடிவு செய்யப்பட்டது. மேயர், துணை மேயர் பதவிகளுக்கு ஆம் ஆத்மி மற்றும் பாஜக இரு தரப்பும் வேட்பாளர்களை அறிவித்தது.

    ஆனால், மாநில அரசின் ஒப்புதல் இல்லாமல் ஆளுநரால் நியமிக்கப்பட்ட நியமன உறுப்பினர்கள் விவகாரம், மாமன்றத்தில் புயலை கிளப்பியது. ஆளுநரால் நியமிக்கப்பட்ட உறுப்பினர்களுக்கு மேயர் தேர்தல், துணை மேயர் தேர்தலில் வாக்களிக்கும் உரிமை உள்ளதா என்பது தொடர்பாக ஏற்பட்ட மோதல் காரணமாக மேயர் தேர்தல் தொடர்ந்து 3 முறை ஒத்திவைக்கப்பட்டது.

    மாநகராட்சி தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றபோதும் கூட, பாஜக தலைவரை மேயர் பதவிக்கு தேர்ந்தெடுப்பதன் மூலம் மாநகராட்சியை கைப்பற்ற பாஜக முயற்சிப்பதாக ஆம் ஆத்மி கட்சி குற்றம் சாட்டியது.

    பின்னர், மேயர் தேர்தல் தொடர்பாக ஆம் ஆத்மி மேயர் வேட்பாளர் ஷெல்லி ஓபராய் தொடர்ந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், மேயர் தேர்தலில் நியமன உறுப்பினர்கள் வாக்களிக்க முடியாது என்று உத்தரவிட்டது.

    இதையடுத்து மேயர் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. பிப்ரவரி 22ம் தேதி மேயர் தேர்தல் நடத்தும்படி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான மாநில அரசு அளித்த பரிந்துரைக்கு ஆளுநர் ஒப்புதல் அளித்துள்ளார். எனவே 22ம் தேதி மேயர், துணை மேயர் மற்றும் 6 நிலைக்குழு உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். 

    • பிப்ரவரி 16ல் நடப்பதாக இருந்த மேயர் தேர்தலை பிப்ரவரி 17ம் தேதிக்கு பிறகு நடத்த உள்ளதாக தகவல்
    • உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டதையடுத்து பாஜக, ஆம் ஆத்மி கட்சியினர் ஒருவரையொருவர் குற்றம்சாட்டி உள்ளனர்

    புதுடெல்லி:

    டெல்லி மாநகராட்சியில் நியமன உறுப்பினர்கள் விஷயத்தில், ஆம் ஆத்மி கட்சி மற்றும் பாஜக இடையே ஏற்பட்ட மோதல் காரணமாக மேயர் தேர்தல் அடுத்தடுத்து தள்ளிவைக்கப்பட்டது. மூன்று முறை முயற்சி செய்தும் தேர்தலை நடத்துவதில் தோல்வியே ஏற்பட்டது. அடுத்து வரும் வியாழக்கிழமை தேர்தலை நடத்த முடிவு செய்யப்பட்டது.

    இதற்கிடையே மேயர் தேர்தல் தொடர்பாக ஆம் ஆத்மி மேயர் வேட்பாளர் ஷெல்லி ஓபராய் தொடர்ந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், டெல்லி துணைநிலை விளக்கம் அளிக்க உத்தரவிட்டது.

    இவ்வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது துணைநிலை ஆளுநர் அலுவலகம் சார்பில், கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் சஞ்சய் ஜெய் ஆஜராகி விளக்கம் அளித்தார். அப்போது, பிப்ரவரி 16ல் நடப்பதாக இருந்த மேயர் தேர்தல பிப்ரவரி 17ம் தேதிக்கு பிறகு ஒரு நாளில் நடத்த உள்ளதாக தெரிவித்தார்.

    இதையடுத்து 17ம் தேதிக்கு வழக்கு விசாரணையை ஒத்திவைப்பதாக நீதிபதிகள் அறிவித்தனர். மேலும், மேயர் தேர்தலில் நியமன உறுப்பினர்கள் வாக்களிக்க முடியாது என்றும், இந்த விஷயத்தில் அரசியலமைப்பு விதிகள் மிகவும் தெளிவாக உள்ளன என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.

    இதையடுத்து மேயர் தேர்தலில் வெற்றி பெறுவதற்காக பாஜக நேர்மையற்ற தந்திரங்களை கையாள்வதாக ஆம் ஆத்மி குற்றம் சாட்டி உள்ளது. இதற்கு பாஜக பதிலடி கொடுத்துள்ளது. 

    • டெல்லி மேயர் தேர்தல் தொடர்பாக ஆம் ஆத்மி கட்சி சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளது.
    • கோர்ட்டு கண்காணிப்பின் கீழ் மேயர் தேர்தலை நடத்த வேண்டும் என்று கோரியுள்ளது.

    புதுடெல்லி:

    டெல்லி மாநகராட்சி தேர்தலில் 134 இடங்களில் ஆம் ஆத்மி கட்சி வெற்றி பெற்று கைப்பற்றியது. கவுன்சிலர்கள் பதவியேற்றுள்ள நிலையில் மேயர் துணை தேர்தலில் இழுபறி நீடித்தது. நியமன கவுன்சிலர்கள் ஓட்டு போடக்கூடாது என்று ஆம் ஆத்மி வலியுறுத்தி வருகிறது. நேற்று 3-வது முறையாக நடந்த கூட்டத்திலும் பா.ஜனதா-ஆம் ஆத்மி கட்சிக்கு இடையே அமளி ஏற்பட்டது. ஆனால் மேயர் தேர்தல் மீண்டும் ஒத்திவைக்கப்பட்டது.

    இந்த நிலையில் டெல்லி மேயர் தேர்தல் தொடர்பாக ஆம் ஆத்மி கட்சி சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளது. கோர்ட்டு கண்காணிப்பின் கீழ் மேயர் தேர்தலை நடத்த வேண்டும் என்று கோரியுள்ளது. இந்த மனு மீதான விசாரணை நாளை நடக்கிறது.

    • டெல்லி மாநகராட்சி மேயர் தேர்தல் மீண்டும் ரத்து செய்யப்பட்டது.
    • ஆம் ஆத்மி, பா.ஜ.க.வினர் மோதலால் கூட்டம் ஒத்திவைக்கப்பட்டது.

    புதுடெல்லி:

    டெல்லி மாநகராட்சிக்கு டிசம்பர் மாதம் 4-ம் தேதி தேர்தல் நடந்தது. 7-ம் தேதி ஓட்டு எண்ணிக்கை நடைபெற்றது. 3 மாநகராட்சிகள் ஒன்றிணைக்கப்பட்ட பின்னர் நடந்த முதல் தேர்தல் இது. இந்த தேர்தலில் 134 இடங்களை ஆம் ஆத்மி கட்சி கைப்பற்றி அமோக வெற்றி பெற்றது. பா.ஜ.க.வோ 104 இடங்களில் மட்டுமே வென்றது. காங்கிரஸ் கட்சிக்கு 9 இடங்கள் கிடைத்தன.

    டெல்லி மாநகராட்சி மேயரைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் கடந்த மாதம் 6 மற்றும் 24-ம் தேதி நடக்க இருந்தது. ஆனால் 10 மூத்த உறுப்பினர்களுக்கு முதலில் பதவிப்பிரமாணம் செய்து வைப்பதற்கு ஆம் ஆத்மி கட்சி கவுன்சிலர்கள் போர்க்கொடி உயர்த்தி அமளியில் ஈடுபட்டனர். இதனால் அப்போது மேயர் தேர்தல் நடைபெறாமல் கூட்டம் ஒத்திவைக்கப்பட்டது.

    இந்நிலையில், மேயரைத் தேர்ந்தெடுப்பதற்காக டெல்லி மாநகராட்சி கூட்டம் நேற்று மீண்டும் நடைபெற்றது. கூட்டம் கூடியதும் அவைத் தலைவராக நியமிக்கப்பட்டிருக்கும் சத்ய சர்மா நியமன உறுப்பினர்களும், மேயர், துணை மேயர், நிலைக்குழு உறுப்பினர்கள் தேர்தலில் வாக்களிக்க அனுமதிக்கப்படுவார்கள் என அறிவித்தார். இந்த மூன்று தேர்தல்களும் ஒரே நேரத்தில் நடக்கும் என தெரிவித்திருந்தார். இதற்கு ஆம் ஆத்மி கட்சி கடும் எதிர்ப்பு தெரிவித்தது.

    ஆம் ஆத்மி கட்சியின் மூத்த கவுன்சிலர் முகேஷ் கோயல் ஆல்டர்மென்கள் வாக்களிக்க முடியாது என்றார். இதையடுத்து ஆம் ஆத்மிக்கு எதிராக பா.ஜ.க. கவுன்சிலர்கள் முழக்கங்கள் எழுப்பினர். இதனால் ஏற்பட்ட குழப்பங்களுக்கு மத்தியில் மாநகராட்சி கூட்டம் ஒத்திவைக்கப்பட்டது. இதன்படி, டெல்லி மேயர் தேர்தல் மூன்றாவது முறையாக ரத்து செய்யப்பட்டது.

    • டெல்லி மாநகராட்சி மேயர் தேர்தல் மீண்டும் ஒத்திவைக்கப்பட்டது.
    • ஆம் ஆத்மி, பா.ஜ.க.வினர் அமளியில் ஈடுபட்டதால் கூட்டம் ஒத்திவைக்கப்பட்டது.

    புதுடெல்லி:

    250 இடங்களைக் கொண்ட டெல்லி மாநகராட்சிக்கு கடந்த மாதம் 4-ம் தேதி தேர்தல் நடந்தது. 7-ம் தேதி ஓட்டு எண்ணிக்கை நடைபெற்றது. 3 மாநகராட்சிகள் ஒன்றிணைக்கப்பட்ட பின்னர் நடந்த முதல் தேர்தல் இது. இந்த தேர்தலில் 134 இடங்களை ஆம் ஆத்மி கட்சி கைப்பற்றி அமோக வெற்றி பெற்றது. பா.ஜ.க.வோ 104 இடங்களில் மட்டுமே வென்றது. காங்கிரஸ் கட்சிக்கு 9 இடங்கள் கிடைத்தன.

    டெல்லி மாநகராட்சி மேயரைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் கடந்த 6-ம் தேதி நடக்க இருந்தது. ஆனால் 10 மூத்த உறுப்பினர்களுக்கு முதலில் பதவிப்பிரமாணம் செய்து வைப்பதற்கு ஆம் ஆத்மி கட்சி கவுன்சிலர்கள் போர்க்கொடி உயர்த்தி அமளியில் ஈடுபட்டனர். இதனால் அப்போது மேயர் தேர்தல் நடைபெறாமல் கூட்டம் ஒத்திவைக்கப்பட்டது.

    இந்நிலையில், மேயரைத் தேர்ந்தெடுப்பதற்காக டெல்லி மாநகராட்சி கூட்டம் நேற்று மீண்டும் நடைபெற்றது. இதுவரை இல்லாத வகையில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. சபையில் அனைத்துக் கவுன்சிலர்களும், நியமன உறுப்பினர்களும் பதவிப்பிரமாணம் எடுத்துக்கொண்டனர். அதைத்தொடர்ந்து 15 நிமிடங்களுக்கு கூட்டம் ஒத்திவைக்கப்பட்டது.

    அதைத்தொடர்ந்து பா.ஜ.க. கவுன்சிலர்கள் இருக்கையில் இருந்து எழுந்து, ஆம் ஆத்மி கவுன்சிலர்கள் இருந்த இடங்களுக்குச் சென்று முழக்கங்களை எழுப்பினர். அதைத்தொடர்ந்து இருதரப்பு கவுன்சிலர்கள் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் பெரும் கூச்சல், குழப்பம் நிலவியது. இதையடுத்து கூட்டத்தை தலைமை தாங்கி நடத்திய பா.ஜ.க. கவுன்சிலர் சத்யசர்மா, சபையை ஒத்திவைத்தார்.

    இதையடுத்து மேயர் தேர்தலும் ஒத்திவைக்கப்பட்டது. ஆம் ஆத்மி கட்சியினரும், பா.ஜ.க.வினரும் பரஸ்பரம் குற்றம் சாட்டிக் கொண்டனர்.

    ×