என் மலர்
நீங்கள் தேடியது "ஜேக்கப் டப்பி"
- இந்திய அணி ஒரு நாள் கிரிக்கெட்டில் ஒரு இன்னிங்சில் தங்களது அதிகபட்ச சிக்சர் எண்ணிக்கையை சமன் செய்துள்ளது.
- ஒரு இன்னிங்சில் 100 ரன்னுக்கு மேல் விட்டுக்கொடுத்த 3-வது நியூசிலாந்து பவுலர் என்ற மோசமான சாதனைக்கு சொந்தக்காரர் ஆனார்.
இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான 3-வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி நேற்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி களமிறங்கிய இந்திய அணி 50 ஓவர் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 385 ரன்கள் எடுத்தது. அதனையடுத்து விளையாடிய நியூசிலாந்து அணி 295 ரன்களில் ஆல் அவுட் ஆனது. இதனால் இந்திய அணி 90 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்த போட்டியில் நியூசிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஜேக்கப் டப்பி 10 ஓவர்கள் பந்து வீசி 100 ரன்களை வாரி வழங்கினார். ஒரு இன்னிங்சில் 100 ரன்னுக்கு மேல் விட்டுக்கொடுத்த 3-வது நியூசிலாந்து பவுலர் என்ற மோசமான சாதனைக்கு சொந்தக்காரர் ஆனார்.
இந்தியா தரப்பில் இந்த ஆட்டத்தில் மொத்தம் 19 சிக்சர்கள் நொறுக்கப்பட்டன. இதன் மூலம் இந்திய அணி ஒரு நாள் கிரிக்கெட்டில் ஒரு இன்னிங்சில் தங்களது அதிகபட்ச சிக்சர் எண்ணிக்கையை சமன் (2013-ம் ஆண்டில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஆட்டத்திலும் 19 சிக்சர்) செய்துள்ளது. இந்தூர் மைதானத்தில் ஒரு நாள் போட்டியில் இதுவரை தோல்வியையே சந்திக்காத இந்திய அணி இங்கு பெற்ற 6-வது வெற்றி இதுவாகும்.