search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பைப்லைன்"

    • இந்தியன் ஆயில் நிறுவன அதிகாரி தகவல்.
    • 2024 பிப்ரவரி மாதம் பயன்பாட்டுக்கு கொண்டு வர திட்டமிட்டுள்ளோம்.

    கோவை,

    இந்தியன் ஆயில் கார்ப்ப–ரேஷன் நிறுவனத்தின் தமிழகம் மற்றும் புதுச்சேரி பிராந்திய நிர்வாக இயக்குனர் வி.அசோகன் கோவையில் நிருபர்களிடம் கூறியதாவது:-

    அப்போது அவர் கூறியதாவது:-

    தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனம் 7 பெட்ரோலிய எண்ணை முனையங்கள், 13 சமையல் எரிவாயு நிரப்பும் மையங்கள் அமைத்து பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விநியோகத்தில் ஈடுபட்டு வருகிறது.

    விழுப்புரம் மாவட்டம் ஆசனூரில் ரூ.466 கோடி மதிப்பில் பெட்ரோலியம் சேமிப்பு முனையம், சென்னை துறைமுகத்தில் ரூ.921 கோடி மதிப்பில் பெட்ரோலியம் முனைய விரிவாக்க பணிகள் நடைபெற்று வருகின்றன.

    இதன் மூலம் பெட்ரோலிய பொருட்களை இறக்குமதி மற்றும் ஏற்றுமதி செய்வதற்கு மிகவும் உதவியாக இருக்கும்.

    திருவள்ளூர் மாவட்டம் வல்லூரில் ரூ.200 கோடி மதிப்பில் புதிய முனையம் அமைக்கப்பட்டு வருகிறது. சென்னை அருகே மணலியில் ரூ.1,600 கோடியில் உலகிலேயே 2-வது மிகப்பெரிய லூப்ரிகண்ட் பிளாண்ட் அமைக்கப்பட்டு வருகிறது.

    இந்த பணிகளை முடித்து 2024 பிப்ரவரி மாதம் பயன்பாட்டுக்கு கொண்டு வர திட்டமிட்டுள்ளோம். இருப்பிடச்சான்று இல்லாதவர்கள், புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் பயன்படுத்தி கொள்ளும் விதமாக பெட்ரோல் பங்க்குகள் மூலம் ஏற்கனவே 5 கிலோ சமையல் எரிவாயு உருளை விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

    தற்போது முதல் கட்டமாக சென்னையில் காமதேனு நியாய விலை கடைகளில் 5 கிலோ சமையல் எரிவாயு உருளை விற்பனை தமிழக அரசு உதவியுடன் அண்மையில் தொடங்கப்பட்டுள்ளது. இந்த திட்டம் விரை வில் அனைத்து மாவட்டங்க ளுக்கும் விரிவு படுத்தப்படும்.

    அதேபோல பாலிமர் சுற்றப்பட்ட பைபர் கண்ணாடியால் தயாரிக்கப்பட்ட எடை குறைவான சமையல் எரிவாயு உருளை 5 மற்றும் 10 கிலோ அளவுகளில் அறிமுகப்படுத்தி உள்ளோம். இந்த வகை எரிவாயு உருளைகளால் விபத்து ஏற்படுவதற்கு வாய்ப்பில்லை.

    தமிழகம் மற்றும் புதுச்சேரியில் திரவ பசுமை வாயுவை (எல்என்ஜி) எடுத்து செல்வதற்காக 1,400 கி.மீ தொலைக்கு பைப்லைன் அமைக்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

    சென்னை-பெங்களூரு, சென்னை-புதுச்சேரி, சென்னை-தூத்துக்குடி ஆகிய பகுதிகளில் பைப்லை ன்கள் அமைக்கப்பட்டு வருகின்றன.

    இதில் விவசாயிகளுக்கு பாதிப்பு இல்லாமல் தேசிய நெடுஞ்சாலைகளை ஒட்டி நிலம் எடுக்கப்பட்டு வருகிறது. அதேபோல இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் மூலம் வீடுகளுக்கான பைப்லைன் திட்டம் 11 மாவட்டங்களில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

    இந்த திட்டத்துக்காக அடுத்த 8 ஆண்டுகளில் ரூ.7 ஆயிரம் ேகாடி செலவிடப்பட உள்ளது. இதுபோல தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ரூ.15 ஆயிரத்து 500 கோடி மதிப்பிலான திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

    இவ்வாறு அவர் தெரி வித்தார்.

    ×